Wednesday 4 December 2013

விடுமுறையில் என்ன செய்யலாம்...


பள்ளி விடுமுறையான தற்போது எல்லா வீடுகளிலும் பிள்ளைகளின் விளையாட்டுக்களும் சிரிப்பொலியும் கவலை இல்லாது தொடர்ந்து போய்க்கொண்டிருக்கும் இப்போது.

பள்ளிப் புத்தகங்களை  மறந்து சில காலம் மகிழ்ச்சியாக இருப்பது தவறில்லை என்றாலும், இந்த விடுமுறையின் போது சில பயனான விசயங்களையும் விளையாட்டுக்களையும் தெரிந்து கொள்ளலாமே...

இதுபோன்ற டிசம்பர் மாத என்னுடைய நீண்ட  விடுமுறைகால விளையாட்டுக்களை நினைத்துப் பார்க்கிறேன் இப்போது.

'டாம்' எனும் காய்களை நகர்த்தி வெட்டும் ஆட்டம், 'மோனோபொலி' எனும் இடங்களை, நிலத்தை  பொய்ப் பணத்தில் வாங்கி வாடகை வசூலிக்கும் விளையாட்டு, 'கேரம்' போன்ற அரங்கினுள் ஆடும் விளையாட்டுக்களோடு, 'கிரிக்கெட்' ( அந்த காலத்தில் இதற்குப் பெயர் "ரௌன்டர்ஸ்" ), கில்லி ( கவுண்டா கவுண்டி ), கோலி விளையாட்டு என பல விளையாட்டுக்களையும் விடுமுறைகளின் போது தான் கற்றுக்கொண்டேன் அன்று.

ஒவ்வொரு வருடமும் ஒரு ஸ்பெஷல் விளையாட்டு அந்த நீண்ட விடுமுறைகளை நிறைவு செய்யும்.  நேரமும் மிக இனிமையாக கழியும்.

தற்போதைய சூழ்நிலையில் இவை சாத்தியமானாலும், கணினியில் கவனத்தை செலவிடவே குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள். குறைந்தது, விடுமுறைக் காலத்திலாவது சில நண்பர்கள் ஒன்றுகூடி பழைய பல விளையாட்டுக்களை ஆடிப்பார்க்கலாமே....

1 comment:

  1. yes its conmen for kids they enjoy this school holiday whereby they spend plenty time to enjoy playing with sibling.its right time to arrange an extra class for them in order prepare them self for next year school.or spend time with kids to took them for holiday around the Malaysia or those well doing can bring them to next level to highly cost tour.

    ReplyDelete