Monday 20 February 2012

வழக்கம் போல . . .

இயற்கை காட்ச்சிகள் மனதுக்கு இதமான, சாந்தமான சூழ் நிலையை ஏற்படுத்தி நிம்மதியை தருகின்றன.


வெளியூர் பயணங்கள் அவ்வளவு எளிதல்ல... பொருளாதாரமும், ஓய்வு நேரமும் வசதியாக அமைந்தாலன்றி நாம் எங்கும் பயணம் போவது சாத்தியப் படாது.

ஆயினும் அப்படி ஆறுகள் குளங்கள் போன்ற பசுமை நிறைந்த இடங்களுக்கு போய்வரும் சுகமே தனிதான்.  அதிலும் நல்ல நல்ல மரங்கள் இருக்கும் இடமென்றால் சொல்லவும் வேண்டுமா என்ன...

எனக்கு பெரிய மரங்களை ரொம்பவும் பிடிக்கும்.  மரங்களினால் பல நன்மைகளே. மரங்கள் நமக்கு காய்களையும் பழங்களையும் சுத்தமான ஒக்ஸிஜனையும் தருகின்றன. வெயில் காலங்களில் மரங்களின் நிழல் நமக்கு குளிர்ச்சியாக ஆகின்றது.

மரங்கள் பெரியதொரு தத்துவத்தை உணர்த்துகின்றன.
மண்ணிலிருந்து தோன்றும் அவை மண்ணுக்குள்ளேயே மடிந்து மறைகின்றன. அதே போன்று மனிதர்களும் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே போக வேண்டிய கால நேரத்தில் போய் சேர்ந்துவிடுகிறோம்.   வாழும் காலத்தில் மரங்கள் மற்றவர்களுக்கு பலனுள்ளவைகளாக இருப்பது போல நாமும் பிறருக்கு உதவியாக இருக்கவேண்டிய சாராம்சத்தை எல்லா மதங்களும் விளக்குகின்றன.

No comments:

Post a Comment