Wednesday 4 January 2012

படித்ததில் பிடித்தது...

விடிகாலை நீ தூங்க
விண்மீனில் விளக்கு வைப்பேன்
வெந்நீரில் நீ குளிக்க
விறகாகி தீக்குளிப்பேன்.

சுடிதாரில் கண்ணாடியா?
வைரம் வாங்கி பதிச்சி வைப்பேன்
சலூனுக்குப் போகனும்னா
சிங்கப்பூர் அனுப்பி வைப்பேன்.

சாதா டிவி போரடிச்சா
சன் டிவி கனெக்க்ஷன் வைப்பேன்
சுந்தர ராமசாமி
சுஜாதா புக்கு வாங்கி வைப்பேன்.

சனிக்கிழமை சாயங்காலம்
ஸ்டார் ஓட்டல் கூட்டிப்போவேன்
சினிமாதான் வெனுமுன்னா
ஹோம் தியேட்டர் கட்டி வைப்பேன்.

மெட்ரோ வாட்டர் வேணான்டி
நெய் ஊத்தி சமைக்கச் சொல்வேன்
மாசத்துல முப்பது நாள்
பட்டுப் புடவை எடுக்கச் சொல்வேன்.

டவுன் பஸ்ஸில் கூட்டமடி
டாடாசுமோ அனுப்பி வைப்பேன்
நாய்க்குட்டி அது எதுக்கு?
மான்குட்டி வளர்க்கச் சொல்வேன்.

என்றெல்லாம் வாக்கு தந்து
ஏமாற்ற மாட்டேன்டி
என் சம்பளம் ஆயிரம்தான்
அதுக்குள்ள வாழலாம் வா....

( கவிஞர் நா.முத்துக்குமார் குறுந்தொகை எனும் தொடரில் 'அனா... ஆவன்னா...' தலைப்பின் கீழ் எழுதியது இது. நான் படித்து ரசித்ததை இங்கே உங்களுக்கும் படிக்கத் தந்துவிட்டேன். )

No comments:

Post a Comment