Thursday 19 January 2012

ஐ.என்.ஜி தமிழ் காப்புறுதி மாநாடு 2012


ஐ.என்.ஜி தமிழ் காப்புறுதி மாநாடு 2012 இன்று தொடங்கி 22ம் தேதி வரை கெந்திங் மலையில் நடைபெறுகிறது.

இதில் நம் பகுதியைச் சேர்ந்த திரு ரமேஷ் சாம்பியன் பட்டத்தை பெற்றிருக்கிறார். முதல் மூன்று ஏஜென்டுகளில் முதலாம் நிலையில் வந்து சாதனையாளராக திகழ்கிறார்.

இதன் உண்மை என்னவென்றால், அவரால் பல குடும்பங்கள் தங்களின் பொருளாதார நிலையை சரி செய்து ஒரு வலிமையான எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்பதே.

உயர்ந்துகொண்டுபோகும் மருத்துவச் செலவுகளிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒவ்வொருவரும் மருத்துவ காப்பீடு அட்டையை பெற்றிருப்பது அவசியம்.

சின்னதாக நாம் இப்போது செலவிடும் ஒரு தொகை பின்னர் பல லட்சம் வெள்ளி மதிப்பிலான மருத்துவ சிகிச்சைக்கு பெறும் பங்காற்றவிருப்பதை நாம் முன்கூட்டியே உணரவேண்டும்.

குடும்ப பொருளாதார திட்டமிடுதலில், காப்புறுதிக்கென ஒரு குறிப்பிட்ட தொகையை தங்களின் வருமானத்திலிருந்து வருடம்தோரும் தனியாக ஒதுக்கிவிட வேண்டியது குடும்பத்தை நல்ல வழியில் கொண்டுசெல்லும் தலைவர் அல்லது தலைவியின் கடமையாகும்.

அடுத்தவர் உதவியை எதிர் நோக்கி வாழ்வது நம் கஷ்ட்ட காலங்களில் நம்மை மன உலைச்சலுக்கு ஆளாக்கும்.

No comments:

Post a Comment