Thursday 6 March 2014

சோமட்டைசேஷன் டிஸ்ஸோடர்...


காப்புறுதி தொழிலில் ஈடுபடும் போது நாம் இப்படியும் ஒரு சிலரை சந்திக்கவேண்டிய சந்தர்ப்பம் கிட்டுவதுண்டு.  மருத்துவர்களிடம் அழைத்துச்சென்று காட்டினாலும் இந்நிலையில் உள்ளோரை சாந்தப்படுத்த முடியாது.

அன்மையில் நண்பர் ஒருவர் தனது மனைவியின் உடல் நிலை குறித்து பல மருத்துவர்களை கலந்தாலோசித்து விட்டலும் இன்னும் திருப்தியாக படவில்லை என்றார்.

" எல்லா ஸ்பெஷலிஸ்ட்டுகளையும் பார்த்துட்டோம் சார். ஆனா, என் மனைவிக்கு அப்படி ஒன்னுமில்லென்னுதான் சொல்றாங்க...." என்றார்.

"அப்படி உங்கள் மனைவி என்ன பிரச்சினையில தான் இருக்காங்க ? "

 " என்ன சார்,
சில நேரங்கள்ல கழுத்து வலிக்குதுங்கறாங்க,
நாக்கு மருத்து போகுதுங்கறாங்க,
இருதயம் படபடக்குதுங்கறாங்க...
இன்னும் தலை சுத்துது,
மயக்கம்மா வருதுன்னு இப்படி பல..."
அவர் சொல்லும்போது முகத்தில் வருத்தம் தெரிந்தது....

" ஆனா பாருங்க சார்,  மருத்துவ பரிசோதனைகளும் அவருக்கு ஒன்னுமில்லன்னுதான் வருது சார்.  "ஐ.ஜே. என்"  இருதய சிகிச்சை மருத்துவமனையில அவங்களுக்கு இருதயம் நல்லாவே இருக்குன்னு சொல்றாங்க. நாக்கு உணர்வற்றுப்போவது பத்தியும் தெளிவா ஒன்னும் கண்டுபிடிக்க முடியலன்னு சொல்றாங்க... கால் வலி, கை வலி இன்னும் தலை வலி எல்லாம் சாதாரணம்னும் சொல்றாங்க....  எந்த நோயும் இல்லன்னா அப்போ இந்த அறிகுறிகள் என்ன...அவங்களுக்கு உண்மையில என்னதான் நடக்குது?"

இரண்டொரு அனுபவத்திற்கு பின்னர் தான் இதைப்பற்றிய சில உண்மைகள் லேசாக விளங்கத்தொடங்கின எனக்கு.... ஆக மருத்துவத்தில் மருந்தில்லாத போது மனோதத்துவத்தில் நம்பிக்கை செல்வது இயற்கைதானே. அதைப்பற்றியும் என்னுடைய நெருங்கிய நண்பரும் மருத்துவருமானவரிடம் பேசிப்பார்த்தேன்.

'இதற்கு மருத்துவ உலகில் " சோமட்டைசேஷன் டிஸ்ஸோடர் " என்று பெயர். மனதின் உணர்வலைகளில் சிக்கித் தவிக்கிறார்கள் என்றும் இதனைக்கொள்ளலாம்.'

வெளி இடங்களுக்குச் செல்வதன் மூலமும், மற்றவர்களோடு கலந்து பேசி மகிழ்ச்சியாக இருப்பதன் மூலமும், சக குடும்ப உறுப்பினர்களின் அன்பான கவனிப்பினாலும் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணலாம்.

"அன்பு ஒன்றே அனைத்தையும் தகர்த்தெரியும் சக்தியினைக் கொண்டது!!!" எனபது மருத்துவரீதியாக எனக்கு தெரியவந்தது.

No comments:

Post a Comment