Sunday 16 March 2014

பழைய பாடல்கள்...

பழைய பாடல்களிலிருந்து இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் போன்றோரின் இசைக்கு மாறுவதற்கு சில காலம் பிடித்தது எனக்கு. எம் எஸ் விஸ்வநாதன் இசையிலே அவருடைய மெல்லிசை மெட்டுக்களை ரசித்தபடி ஆனந்தமாய் இருந்த நேரத்தில் அவரின் புதுப்படங்கள் இல்லாத போது கூட, அவர் இசையமைத்த பழைய படங்களின் பாடல்களில் மெய்மறந்து இருந்த  காலம் அது.

பி.சுசீலா, எஸ். ஜானகி மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களின் இனிமை வேறு
யாருக்கும் அவ்வளவு எளிதில் வந்துவிடாது எனும் எண்ணத்தில் இருந்த போதுதான்,
" தம் தன் தம் தன் தாளம் வரும்..."
எனும் அந்த குரலைக் கேட்டேன். " அட, இந்தப் பெண்ணும் நல்லா பாடுறாங்களே..." என அவரின் குரலில் வந்த பாடல்களை தேடிய போதுதான், புதிய பாடல்களில் மனம் லயிக்கத் தொடங்கியது.

என் வானிலே, ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள், கவிதை தாரகை ஊர்வலம்

ம் ஹும்…ஓ ஹோ……..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
ம் ஹும்…ஓ ஹோ……..

அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளைமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே

இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

அதிலும் அவர் பாடியவற்றுள், இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகியது....

brb

No comments:

Post a Comment