Monday 17 February 2014

அன்றைய பழைய புகைப்படங்கள்...


 நாம் அன்று இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்தோம். அதனால் இயற்கையை வணங்கி நமது சமயத்தில் இணைத்துக்கொண்டோம்....

பழைய புகைப்படங்களைப் பார்க்கும் போது நம் மனதில் தோன்றுவது என்னென்ன?

அன்றைய வாழ்க்கைத் தரம் , அப்போதைய சுற்றுப்புரங்களும் சூழ் நிலைகளும் , அன்றைய மனிதர்கள் மற்றும் அவர்தம் கலை கலாச்சாரம்  போன்ற பலவும்  எப்படி எல்லாம் இருந்திருக்கும் என மனது நிச்சயம் எண்ணிப்பார்க்கும் ...

அந்த நினைவுகள் நாம் இன்று அனுபவிக்கும் நவீன, அதிவேகமான வாழ்க்கைச் சூழலை ஒப்பிட்டுப் பார்க்க வைக்கும். வசதியும் வாழும் வழிகளும் உயர்ந்துவிட்டதென பலர்  சொன்னாலும், ஒரு சில விசயங்களில் நாம் இன்னமும் பின் தங்கிவிட்டது போலவே எனக்குப் படுகிறது.

பல புது மாதிரியான இயந்திரங்கள் நமது வேலைகளை சுலபமாக்க வந்துவிட்டன.  பல புதிய நுட்பமான செயல் திட்டங்கள் நம் சிரமமின்றி வாழ உதவுகின்றன. ஒருவரை ஒருவர் இணைக்கும், ஒரு நாட்டோடு இன்னொரு நாடு கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வதும் தொடர்புத் துறையின் விறு விறுப்பான வளர்ச்சியின் பலன்கள் ஆகும்.

ஆயினும் ஒப்பிடும் போது ஒரு சில கேள்விகள் எழவே செய்கின்றன.

கல்வித் தரம் உயர்ந்து விட்டது, பொது அறிவு வளர்ந்துவிட்டது....
பகுத்தறிவு வளர்ந்ததா....?
சமயம் பரவி விட்டது, மனிதர்கள் இறைவன்பால் கொண்ட பக்தி பெருகிவிட்டது.....
மனித நேயமும் , நன்னெறிகளும் மனிதரிடையே வளர்ந்ததா.....?
புத்தம் புது இயந்திரங்கள் நேரத்தை மிச்சப்படுத்த வந்துவிட்டன....
எந்த நிகழ்ச்சிக்காவது நேரத்தோடு நாம் செல்கிறோமா.....?

ஆக, அன்றிலிருந்ததை விட இன்று பல வசதிகள் நம்மிடம் இருந்தும், நம் தனிப்பட்ட வாழ்க்கை முறை மாறியதாய்க் காணோம்....!

பழைய புகைப்படங்களை நான் பார்க்கும் போது அந்தச் சூழ்நிலையில் தற்போதைய நவீனங்களையும் ஒப்பிட்டுப்பார்ப்பது என்னுள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

1 comment:

  1. அருமையான பதிவுகள்...

    ReplyDelete