சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது.
நண்பர் ஒருவர் தமிழ் நாட்டுக்கு சென்றிருந்தார். பல கோயில்களுக்கும் சென்று அங்குள்ள தெய்வங்களை வணங்கிவிட்டு, பூம்புகார் எனும் இடத்தில் ஒரு கலைக்கூடத்தை சுற்றிப்பார்த்ததாக சொன்னார்.
" அங்கே இருக்கும் சிலைகளில் ஒன்றில் கண்ணகி தன் காலில் அணிந்திருந்த சிலம்பு ஒன்றைக் கோவலனிடம் கொடுப்பதாக இருக்கிறது" என்றார்.
" அட இதில் என்னப்பா சந்தேகம் ? என்றேன் நான். இது நாம் படித்ததுதானே... பின்னர் அ நீதி இழைக்கப்பட்ட கோவலனுக்காக தன்னுடைய மற்றொரு சிலம்பையும் எடுத்துக்கொண்டு அரன்மனைக்குச் சென்று "“நல் திறம் படராக் கொற்கை வேந்தே, என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே!” அதாவது தன்னுடைய காற் சிலம்பு மாணிக்கப் பரல்களைக் கொண்டது எனச் சொன்னதாகத்தான் நாம் படிச்சிருக்கோம்ல...."
நண்பர் தொடர்ந்தார், "அந்த சிலையினில் கண்ணகியின் கால்கள் இரண்டிலும் இரண்டு சிலம்புகள் இருந்ததைப் பார்த்தேன் " என அவர் சொல்லிமுடித்ததும் அவரின் சந்தேகம் எனக்கும் பற்றிக்கொண்டது.
அதெப்படி சரியாகும்....ஹ்ம்ம்...?
மாதவியைப் பிரிந்து, பார்த்து பல காலம் ஆன கண்ணகியை பார்க்க வரும் கோவலன் ஏதாவது தொழில் செய்து பணம் ஈட்டும் சிந்தனையில் வருகிறான். ஆனால் அவனிடம் ஒன்றுமில்லை, இதை அறிந்திருந்த கண்ணகி, தன் கால் சிலம்புகளில் ஒன்றை கழற்றித்தந்து கோவலனுடைய கவலையை தீர்க்கிறார்.
அப்போ அவர் காளில் இன்னும் ஒரு சிலம்பு மட்டும்தானே இருந்திருக்க முடியும்? மூன்றாவது எங்கிருந்து வந்திருக்கும்...? கணக்கு சரியா வரலையே.... நண்பர் தவறாக பார்த்திருப்பாரோ?

No comments:
Post a Comment