Monday, 8 July 2013

உடம்பு நடுங்கிற்று... நாகுழறிற்று...

"உள்ளம் பதபதைத்தது,
உடம்பு நடுங்கிற்று,
நாகுழறிற்று,
கண்ணீர் பெருகிற்று......"

அடடடா.... என்ன அழகான எழுத்துத் திறனைக் கொண்டிருக்கிறார்கள் எழுத்தாளர்கள். சாதாரண வார்த்தைகளா இவை.... ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக் களஞ்சியம் போலல்லவா படுகின்றது...

கல்கியின் நாவல்களில்  இது போன்ற அழுத்தமான வார்த்தைகள் ஆங்காங்கே இடம்பெருவதை பார்த்திருக்கிறேன். இரண்டாம் முறையாக பொன்னியின் செல்வன் படிக்கும் போது அவரின் எழுத்தாற்றலை முழுமையாக விளங்கிக்கொள்ள முடிந்தது.

 நா. பார்த்தசாரதியின்  'கோபுர தீபம்" நாவலில் சம்பவக் கோர்வைகளின் மத்தியில் அழகிய வர்ணனைகளையும், வார்த்தை ஜாலங்களையும் படித்து வியந்ததுண்டு.

இதுபோன்றே சாண்டில்யன் அவர்களின் "கடல் புறா"வில் இடம்பெற்ற வீர வசனங்களின் மூலமாக நிஜ போர் ஒன்று கண்முன் நடப்பது போன்றே நான் ரசித்துப் படித்தேன்.

ரங்கராஜன் அவர்களின் ' பட்டாம்பூச்சி' படிக்கும் போது, தினமும் கதா நாயகனுடன் நானும் தப்பிச் செல்லும் திட்டங்களை பகிர்ந்து கொண்டேன்.

அவ்வளவு சக்திவாய்ந்த எழுத்தாளார்கள் அவர்கள்.

No comments:

Post a Comment