அஸ்ட்ரோ மழையின் போது சரிவர வேலை செய்யாது. அதற்கான அதிகப் படியான கட்டனமாக அவர்கள் பெற்றுக்கொண்டாலும் மழை நேரங்களில் நிகழ்சிகள் கிடைக்காது நாம் கஷ்டப்படுவது அவர்களுக்கு தெரிந்ததாக தெரியவில்லை. எனவே சிலர் இப்படியும் யோசித்து முயற்சி செய்கிறார்கள்.
நகைச்சுவைக்காக போடப்பட்டதே இப்படம். உண்மையில் தேவையற்ற செலவுகளில் ஆஸ்ட்ரோவும் ஒன்று. இதை மீண்டும் ஒருமுறை சொல்ல இப்படத்தை இங்கே பதிவு செய்கிறேன். அவ்வளவுதான்.
சற்று சிந்தித்தோமானால், குறைந்த கட்டனம் எனச்சொல்லி நாம் பார்க்காத அலைவரிசைகளையும் நம்மேல் சுமத்துவதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள் இந்த தனியார் தொலைக்காட்சியின் ஏஜென்ட்டுகள்.
மாதம் ரிம.145 மட்டுமே என்பார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்ட அலைவரிசைகளை நாம் ஒருமுறைகூட திறந்திருக்க மாட்டோம். இதில், சேவைக்கட்டனம் வேறு நம்மிடம் இருந்து பலவந்தமாக பிடுங்கப்பட்டிருக்கும்.
ஆக, மீண்டும் ஒருமுறை யோசியுங்கள். நீங்கள் மாதா மாதம் கட்டும் தொகை நீங்கள் பார்த்துப்பயனடையும் அலைவரிசைகளுக்கா அல்லது வேண்டாதவற்றுக்கும் சேர்த்துத்தானா என மனதில் எண்ணிப்பாருங்கள்.
ஆஸ்ட்ரோவிற்காக மாதா மாதம் செலவிடப் படும் தொகை ஞாயமானதா, அல்லது இன்னும் சற்று குறைக்கப்பட்டிருக்கலாமா?
தண்ணீரை மிச்சப்படுத்துவதைப்போல, மின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது போல தேவையற்ற ஆஸ்ட்ரோ சானல்களையும் நிறுத்திவிடலாமே...
No comments:
Post a Comment