Saturday 3 September 2011

ஈமெயில் அனுப்பிய எல்லோருக்கும் எனது நன்றிகள். . .

ஒரு வாரத்திற்கு பின் இன்றுதான் என்னுடைய ஈமெயிலை திறந்தேன். ஹரி ராயா விடுமுறையில் சரியாக ஈமெயிலைக்கூட பார்க்கமுடியாத ஒரு சூழ்நிலை. 

பினாங்கு, தைப்பிங் என சுற்றுப்பயணத்தில் சுவாரஸ்யமாக நேரம் ஓடிவிட ஈமெயில் பார்ப்பது தள்ளிப்போய் விட்டது.
நிறைய பாராட்டுக்கடிதங்கள். 
"மீண்டும் மீண்டும் பார்த்து அதிசயிக்கிறோம், எப்படி இது போன்ற இரட்டைவேட புகைப்படங்கள் எடுக்க முடிகிறது என்று".



"நகைச்சுவையாக இருக்கும் சில படங்களைப்பார்த்து நாங்கள் அடிக்கடி சிரித்துக்கொள்வதுமுண்டு".

"நன்றாக செல்கிறது உங்களின் இந்த "டபல்ஸ்" புலொக்ஸ்பொட், வாழ்த்துக்கள்."
என பலரும் பாராட்டுவது எனக்கு புதிதான ஒன்றல்ல என்றாலும் அவை ஈமெயிலில் வரும்போது எனது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.
"எப்படி இந்த மாதிரி புகைப்படங்களை எடுக்கிறீர்கள்...?"

"நீங்கள் உபயோகப்படுத்தும் சொப்ட்வேர் என்ன...?
"எங்களாலும்  இதுபோல் செய்ய இயலுமா?"

"நீங்கள் உங்களின் இந்த தனித்திறமையை எங்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமா? அதற்கு ஏதேனும் கட்டணம் உண்டா? "
என்பது போன்ற கேள்விகள் அதிக அளவில் வரத்தொடங்கி விட்டன இப்போது. மிக விரைவில் இதுபோன்ற வித்தியாசமான படங்களை எப்படி எடுப்பது என்பதை உங்களுக்கு விளக்குவேன்.

உங்களின் கடிதங்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் பதில் சொல்ல இயலவில்லை.  "கடிதங்கள்" என்று தலைப்பிட்டு அவ்வப்போது இங்கேயே விளக்கிவிடலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

இதுவரை எவ்வித கட்டணமும் இதற்கு இல்லை. ஈமெயிலில் கேட்போருக்கு இனாமாகவே விளக்கப்படங்களின்றி சொல்லிக்கொடுத்து வருகிறேன். ( இதை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவோர் எண்ணிக்கை அதிகமாகும் போது ஒருவேளை எனது எண்ணம் மாறலாம்.)
ஈமெயில் அனுப்பிய எல்லோருக்கும் எனது நன்றிகள்.
- ராஜ்பாவ்
 

No comments:

Post a Comment