Saturday, 1 December 2012

ஓடி ஒளிவதால் பிரசினை ஓய்வதில்லை. . .

எப்படி எல்லாம் நம்மை நாம் புதுப் புது பரிமாணங்களில் வெளிக்கொணர முடியுமோ அவ்வளவும் நமது வாழ்க்கையை விறுவிறுப்பு குறையாமல் துடிப்புடன் கொண்டு செல்ல உதவும்.

நாம் வகிக்கின்ற எல்லா வேலைகளிலும், பொறுப்புகளிலும், தடைகளும் சோதனைகளும் வருவது சாதாரான ஒன்றே. சிலர் இதுபோன்ற நேரங்களில் வசிக்கும் இடத்தை மாற்றிக்கொண்டு பொறுப்புகளில் இருந்து விலகி தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்கிறார்கள்.

இது போன்றவர்களைச் சந்திக்க நேர்ந்த காலங்களில் நான் அவர்கள் தேர்வு செய்யவேண்டிய சரியான முடிவின் அவசியத்தை கோடிட்டு காட்டியதுண்டு. பிரசினைகளில் இருந்து தூரச் சென்று விடுவதென்பது 'சரியான தீர்வு இல்லை' என்பதே அது. அவற்றை எதிர்கொண்டு தனது சாதுர்யத்துடன் சமாளிப்பதே வாழ்க்கையில் நாம் சுவாரஸ்யம் குன்றாமல் வாழும் சிறந்த வழியாகும்.

" நாம் எப்படி வாழவேண்டும்" என்று முடிவு செய்வது நாம் மட்டும்தாம்.... நமக்கு வரும் பிரசினைகள் அல்ல. இதற்கு ஒரே வழி, நம்முடைய அணுகுமுறைகளை மீண்டும் திரும்பிப் பார்க்கவேண்டும்.

ஒரு பிரசினை இருவருக்கு வரும் போது, இருவரும் வெவ்வேறு கோணத்தில் அதைப் பார்க்கிறார்கள். சிறந்த அணுகுமுறையைக் கையாள்பவர் சோபிக்கிறார். மற்றவர் பிரசினைக்கு பயந்து தன்னுடைய வாழ்வில் பல தவறான முடிவுகளை எடுக்கத் துணிகிறார்.

எந்த ஒன்றையும் நாம் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பதே முக்கியம்.
இதைவிட்டு, " அட,   இப்பவே கண்ண கட்டுதே...." என்றால், இன்னும் பலவும் நம்மைத் துரத்தத் தொடங்கிவிடும்.


ராமாயணத்தைப் படித்திருந்தும் பலர் அதில் உரைந்திருக்கும் சூட்சுமத்தை  புரிந்துகொள்ளவில்லை.

வில்லை முறித்து, சீதையை மணக்கும் ராமன், சகுனியின் சூழ்சிக்கு அடிபனிந்து வன வாசத்துக்கு போகிறார்.

இந்த பகுதிவரை எல்லோருக்கும் விளங்குகிறது.

வனத்தில் வாழும்போது ராவணனால் சீதை சிறையெடுக்கப்படுவதும், அனுமார் துணைகொண்டு போரில் வென்று சீதையுடன் நாடு திரும்பி அரியணை அமர்வதும் நாம் படித்ததே...

இதுவும் எல்லோருக்கும் விளங்குகிறது.

தொடக்கத்தில் இருந்து முடிவு வரை எல்லாமும் விளங்கிவிட்டால், விளங்காததுதான் என்ன...?

இன்னல்கள், இடிபாடுகள், துண்பங்கள் துயரங்கள் என ஒவ்வொன்றாக வந்த போதிலும், நீதி,  நியாயம் , தர்மம் என துணிவுடனும் நம்பிக்கையுடனும் எதிர்த்து போராடுவதே வாழ்க்கையின் தத்துவம் என்பதை மட்டும் எப்படி விளங்கிக்கொள்ள முடியாமல் போகிறது...? இதைத்தானே ராமாயணம் சொல்கிறது...

மேலுள்ள படம் ஒன்லைனில் இருந்து சுட்டது... )

No comments:

Post a Comment