Monday, 17 December 2012

நம்மைச் சுற்றி சில உதாரணங்கள்...

ஒரு சிலரின் வாழ்க்கை 'திரில்லர்' படம் பார்ப்பது போல இருக்கும். அங்கும் இங்கும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பார்கள். சும்மா ஒரு நிமிடமும் இருக்க மாட்டார்கள், இருக்கவும் முடியாது. செய்து முடிக்க வேண்டிய வேலைகள் எவ்வளவோ இருப்பது போன்றே நடந்து கொள்வர். பல வேலைகளும் இவர்களைச் சுற்றியே இருக்கும். அவை மட்டுமல்ல, பலரும் இவர்களைச் சுற்றியே இருப்பார்கள்.

அங்கே உல்லாசம், இங்கே சல்லாபம், இதிலே முதலீடு, அதிலே பணவரவு  என உலன்றுகொண்டிருப்பார்கள். எப்படி மூடி மறைத்தாலும் இவர்கள் செய்வதின் நல்லதும் கெட்டதும் உடனே பொதுவுக்கு வந்துவிடும்.

இவர்களுக்கு நேர்மாறானவர்கள் எதிலும் ஆர்வமின்றி 'ஏதோ இருக்கிறேன்', என நடந்து கொள்பவர்கள். ஆனால், இவர்கள் செய்யும் எதுவும், நல்லதாயிருந்தாலும் இல்லாதவைகளாக இருந்தாலும் அவ்வளவு எளிதில் வெளியே தெரிய வராது. இது போன்றவர்கள் எதிர்மறையாக எதுவும் செய்து அது தெரியவரும் போது நாம் ஆச்சரியப்படுகிறோம். " என்ன ...இவரா அப்படி....?" என.

நம்மைச் சுற்றி உள்ள பல உதாரணங்களில் இந்த இரு வகைகளும் அடங்கும்.

No comments:

Post a Comment