இறைவனிடம் நமது வேண்டுகோளின் முழுப் பயன் கிடைக்கவேண்டுமானால், வேண்டுவதில் " நான் / எனது " என எதையும் முதல் கோரிக்கையாக வைக்கக்கூடாது என்பார்கள். உலகம் செழிக்க வேண்டும், அனைத்து ஜீவராசிகளும் நலம் பெறவேண்டும் என்பதோடு நம்மைச் சுற்றி உள்ளோர் நலத்தையும் நாம் நமது வேண்டுதலில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பது பெரியோர் சொன்ன பலவற்றில் ஒன்று.
எண்ணிப்பார்க்கையில் அதுவும் நல்லதென்றே படுகிறது. அதுபோல சுயநல போக்கு இல்லாது, இவ்வுலகில் வாழும் அனைவரும் அரோக்கியமாக சீரும் சிறப்போடும் வாழவேண்டும் என நினைப்பது நம்மை நல்வழிப் படுத்தி நன்மைகளை பெருக்கிக்கொள்வதாகும்.
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபமே “
என்று பராபரக் கண்ணி எனும் பாடலில் தாயுமானவர் பாடியுள்ளார்.
சுயநலம் தோன்றாத போது தவறுகளும் பாவங்களும் தோன்றுவதில்லை. பாவங்கள் இல்லையேல் இறைவனின் அன்பு முழுமையாக நம்மை வந்தடைய எவ்வித தடைகளும் இல்லை. எனவே மற்றவர் நலனை நினைக்கும் நேரம் நம் வாழ்வும் சிறப்படைகிறது என்று முன்னோர் சொன்னது ஞாயமானதுதானே...

No comments:
Post a Comment