Sunday, 2 December 2012

இருதய நோய். . . பகுதி 2

இருதய நோய் பற்றிய என்னுடைய கருத்தின் முதல் பகுதியை 1.12.2012 பதிவில் காணவும்.
இவை என்னுடைய அனுபவங்களே... இவற்றுக்கான ஆதாரங்கள் வேண்டுவோர் உங்களின் குடும்ப மருத்துவரிடம் இது பற்றி கேட்டறிந்து கொள்ளலாம்.

இருதய நோய்க்கான அறிகுறிகள் ஒருவருக்கொருவர் வேறுபடும். சிலருக்கு ஆரம்பத்திலேயே வலி கொடுக்கும். சிலருக்கு வலியே இருக்காது. ஆனாலும், முதலில் தோன்றும் அறிகுறியினைக்கண்டதும் ஒரு மருத்துவரைச் சந்தித்து பரிசோதித்துக்கொள்வது சாலச் சிறந்தது. இதனால் இந்நோயின் தாக்கம் குறைக்கப்படலாம்.


இருதய நோய் பற்றி பலவாறு சொல்லப்பட்டு இருந்தாலும், அடிப்படை காரணங்களாக அமைவது இரண்டு மட்டுமே.
-  ஒன்று, உணவுக்கட்டுப்பாடு.
-  இரண்டு, தினமும் சீரான உடற்பயிற்சி

உணவுக்கட்டுப்பாட்டின் பலன்களாக,
-  தேவையில்லாத கொழுப்பு நீக்கப்படுகிறது
-  சர்க்கரை வியாதி வருவது வெகு காலத்திற்கு தள்ளிப்போடப்படுகிறது. 

முறையான உடற்பயிற்சினால்,
-  HDL எனும் நல்ல கொழுப்பு நம் உடலில் அதிகரிக்கிறது
- ஆபத்தான LDL கொழுப்பு அகற்றப்படுகின்றது.

நல்ல படியான இரத்த ஒட்டம் உடல் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி செய்கிறது.


No comments:

Post a Comment