'பாவ்ஸ் டபுள்ஸ்' என்னும் இந்த பதிவுகளை ஆர்வமுடன் படித்துவரும் நண்பர்களுள் திரு ரகுவும் ஒருவர். ஒரு கால் சென்டரின் மேற்பார்வையாளர், பதிவில் சேர்த்துக்கொள்ளச் சொல்லி விரும்பிக் கேட்டுக்கொண்ட அவரின் குட்டிக் கதை இது.
கச்சேரி ஆரம்பிப்பதற்கான ஆரம்ப வேலைகள் நடந்துகொண்டிருந்தன. மத்தளம் வீணையைப் பார்த்து ஏளனமாக சிரித்தது.
"வீணையே, நீ இவ்வளவு நீளமாக இருந்தும் உன்னை வாசிக்கும் போது உனது குரல் மெல்லியதாக அவ்வளவு சத்தமில்லாமலே கேட்கிறது. நான் உன்னைபோல இல்லாமல் சின்னதாக இருந்தாலும் அதிக சத்தமுடன் பலமாக ஒலிக்கிறேன்..."
சிரிது நேரத்தில் கச்சேரி துவங்கியது. வீணையை ஒரு குழந்தையைப் போல மடியில் வைத்து வாசித்தார் வீணை வித்வான்.
மத்தளமோ இரு பக்கமும் அறை வாங்கிக்கொண்டு கதறியது, 'தாம் தூம்' என...
கர்வம் கொள்பவர்கள் எப்படி தங்களைப் புகழ்ந்து கொள்வது போல மட்டம் தட்டிக் கொள்கிறார்கள் என்பதற்கு இந்தக் கதை ஒரு எடுத்துக்காட்டாம். நண்பர் சொன்னது இது.
( உங்களிடம் ஒரு கதையோ துணுக்கோ இருந்தால், இந்த பதிவுகளில் இடம் பெற வேண்டுமென நீங்கள் விரும்பினால், மின்னஞ்சலில் எனக்கு அனுப்பிவைக்கலாம். உங்கள் பெயரிலேயே சேர்த்துக்கொள்ளப்படும். )

No comments:
Post a Comment