Thursday, 27 December 2012

மலைத் தேனா...சர்க்கரைப் பாகா...?

காட்டில் உள்ள மலைத் தேனுக்கு எப்போதுமே பெரிய எதிர்பார்ப்பு உண்டு.  ஆதன் மருத்துவ குணங்கள் ஆச்சரியப் படும் படி இருக்கும் என்பார்கள்.

தேனீக்களை வளர்த்து , அவை அருகில் உள்ள பூந்தோட்டங்களில் இருந்து எடுத்து வரும் தேனை விட, காடுகளின் அடர்த்தியில் அதுவும் மலைகளில் இயற்கையான தேன் கூடுகளில் இருந்து  எடுக்கப்படும் தேன் சுவையிலும், தரத்திலும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.


மலைகளில் கட்டப்படும் தேன் கூட்டில் இருக்கும் தேன், மனிதர்கள் செல்ல சிரமப்படும் காடுகளில் உள்ள அரிய வகை பூக்களின் மகரந்தத்திலிருந்து தேனீக்களால் சேமித்து வைக்கப்படுகிறது.

ஆனால் சில நேரங்களில், தேனீக்கள் சாலை ஓர சிற்றுண்டிச் சாலைகளில் உள்ள தின்பண்டங்களில் அமர்ந்து, அந்த இனிப்பை திருடிச் சென்று தங்களின் தேன் கூட்டில் பத்திரப்படுத்துகின்றன.  இப்படிச் சேர்க்கப்படும் தேன் நல்லதா என தெரியவில்லை. சர்க்கரைப் பாகில் இருந்து எடுக்கப்படும் இனிப்பானது உடலுக்கு நல்லதா…? யோசிக்கவேண்டிய விசயம் இது.

கேமரன் மலைக்கு விடுமுறைக்கு போகும் வழியில் ஓய்வுக்கு வாகனத்தை நிறுத்தும் போது அங்குள்ள சிற்றுண்டிச் சாலையில்
 சில தேனீக்கள் இன்னிப்பான தின்பண்டங்களில்  அமர்ந்திருந்தன.  பின் அவை பறந்து போவதும், வேறு சில வந்து அந்த ‘இனிப்புப் பலகாரங்களை’ ஆக்ரமிப்பதும் என் கண்ணில் பட்டது.

என் யூகம் சரியென்றால், அங்கு நடந்தது ஒரு ‘கொள்ளை’.  சில தேனீக்கள் ஒன்றாக சேர்ந்து திட்டமிட்டு அந்த ‘சர்க்கரை கொள்ளையை’ நடத்திக்கொண்டிருந்தன.

குறுக்கு வழி மனிதனுக்கு மட்டும்தான் என யார் சொன்னது….?

No comments:

Post a Comment