பதுங்கிப் பாய்வது புலியின் குணம். நமக்கும் புலியின் பாதி குணம் உண்டு....
பல விசயங்களில் நாம் பதுங்குகிறோம், ஆனால் பாய்வதே இல்லை...
முன்னேறுவதற்கான எல்லா நல்லெண்ணங்களும் நம்மிடம் உண்டு. அதுவும் நம் மலேசிய நாட்டில் பல சந்தர்ப்பங்கள் நமக்கு கிட்டுகின்றன. ஆனால் அவை யாவும் செயல் வடிவம் காண்பதில்தான் எல்லா பிரசினைகளும் அடங்கி இருக்கின்றன.
முன்பு நாம் அனைவரும் இந்தியர் என்றே அழைக்கப் பட்டோம். தமிழ் முக்கிய மொழியாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மதிக்கப்பட்டு வந்தது. 60களில் நம்மிடையே பிரிவினை இல்லை.
ஆனால், ஐம்பது வருடங்கள் கடந்துவிட்ட இப்போது, மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி என்றும் அதற்குள்ளே, கிளாஸ் ஒன்று, இரண்டு, மூன்றென்றும் பிரித்துப் பேசத் தொடங்கி விட்டோம். மேடையில் கூச்சமின்றி முழங்குகிறோம். நமது ஒற்றுமையின்மையினை உலகம் முழுவதும் விளம்பரப் படுத்திக்கொள்கிறோம். இது நல்லதல்ல என எல்லோருக்கும் தெரிகிறது....ஆனால்... பிடிவாதத்துடன் தனித்தனியே இருப்பதையே விரும்புகிறோம்.
இந்நிலை நீடித்தால், 'பாதிப் புலி' கதைதான் நமக்கும். எண்ணத்தில் இருக்கும் அனைத்து திட்டங்களும் அப்படியே இருக்கும், மற்றவர் நம்மை முந்திச் சென்று விடுவர்.

No comments:
Post a Comment