Friday, 21 December 2012

உலகம் அழியவில்லை...

ஆக, 'டூம்ஸ்டேய்' வந்தது கூட தெரியாமல் சென்றுவிட்டது. நாம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறோம். இப்போது பலருக்கும் தெரிந்திருக்கும், எதை நம்புவது எதை நம்பக்கூடாதென்று.

மாயன் கணிப்பு மட்டுமல்ல, இன்னும் பல் வேறு கணிப்புகளையும்  இந்த நோக்கில் மட்டுமே நாம் பார்க்கவேண்டும். அதை விடுத்து வீண் கவலை கொண்டோமானால், நம் சிந்தனையில் எதோ கோளாறு என்றே பொருள்.

'பிளேக் ஹோல்' எனப்படும் ஆகயத்தில் ஏற்படக்கூடிய புதைகுழியும், பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் 'விண்கல்' ஒன்றும் இன்னும் மிச்சம் இருக்கின்றது, நாம் கவனத்தில் கொள்ள.

சூரியனை மையமாகக்கொண்டு சுற்றி வரும் குறுங்கோள்களில் ஒன்று தான் இந்த  'விண்கல்' .  வழக்கமாக இதுபோன்ற விண்கற்கள் புவி ஈர்ப்பு வட்டத்துக்குள் நுழைந்தவுடன் பூமியை அடையுமுன்னரே எரிந்து சாம்பலாகிவிடுகின்றன என்றாலும், இந்த ஒரு கல் மட்டும் அதையும் தாண்டி நமக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என நிபுணர்கள் சொல்கின்றனர். 2029 ஆண்டு முதல் 2038  ஆண்டுக்குள் அது பூமியை அடைந்துவிடும் என கணக்கிடப்பட்டுள்ளது.

 அந்த நேரத்திலும் இது போன்று 'ஆஹா ஹோ ஹோ..." என ஒரு ஆர்ப்பாட்டம் வந்து மறையும் என்று எதிர்பார்க்கலாம்.

 இந்த வதந்தியிலிருந்து நாம் மீண்டாலும், மரம், செடி, கொடி மற்றும் நீர் வளங்களை பத்திரப் படுத்தி பாதுகாப்பதின் வழி ஏனைய இயற்கை பேரிடர்களை தவிர்க்கவும் நாம் முயலவேண்டியது அவசியம்.  இதனால் ஆயிரமாயிரம் அப்பாவி மக்களின் உயிரிழப்பை நாம் நிறுத்த முடியும்.

உலகம் அழியப்போறிறது என்று உண்மையிலேயே நம்பி பலர் செய்த ஆச்சரியப்படும்படியான விசயங்கள் நம் காதுகளுக்கு எட்டியிருக்கும் இந்நேரம்.  என்ன செய்வது...? இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என நம் வாழ்க்கையை தொடர வேண்டியது தான். 

புத்தாண்டு வெகு அருகில் இருக்கிறது.   புது வருடத்துக்கான முன்னேற்றகரமான விசயங்களில் இனி கவனத்தை செலுத்தி நம் வாழ்வை செப்பனிட்டுக் கொள்ள வேண்டியது நலம்.

 வழக்கம் போல செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என இரு பட்டியல்கள் இந்த புத்தாண்டு மறுமலர்ச்சி திட்டங்களில் பலருக்கும் முக்கியமானதாக இருக்கும்.

என்னைக் கேட்டால், அனாவசிய செலவுகளையும் ஆடம்பரமாக வாழ்வதையும்  தவிர்ப்பதை முக்கியப் படுத்த வேண்டும் என்பேன்.

No comments:

Post a Comment