Monday, 17 December 2012

குழந்தைகளின் பள்ளிப்பாடங்களில் பெற்றோர். . .

குழந்தைகள் பள்ளிப்படிப்பில் அக்கறை உள்ள பெற்றோர் செய்ய வேண்டிய முக்கியமானது, பாடப் புத்தகங்களை அவர்களே பையில் இருந்து எடுத்து, அன்று அவர்களுக்கு பள்ளியில் நடத்தப்பட்ட பாடங்களைப் பற்றி பிள்ளைகளோடு கலந்துறையாடுவதுதான்.

ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். ஆனால், பள்ளி நாட்கள் அன்றே கடமை உணர்வோடு பெற்றோர்கள் இதைச் செய்துவிட வேண்டும். இதனால் பல நன்மைகள் :

-  பள்ளிக்கூட பையில் பள்ளிப் புத்தகங்கள் தவிர வேறு ஒன்றும்       இருக்காது.

-  புத்தகங்கள், பெண்சில், பேனா போன்றவை சீராக இருக்கும்.

-  பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை பிள்ளைகளுக்கு விளக்கலாம் அல்லது பிள்ளைகளிடம்   இருந்து கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

-  ஆரம்பத்தில் அசௌகரியப் பட்டாலும் போகப் போக அம்மா, அப்பாவின் செயல் பிள்ளைகளுக்குப் பிடித்துப் போய்   பின்பு நன்கு படிக்க ஆர்வம் கொள்வர்.

-  பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றாகச் சேர்ந்து செலவிடும் பயனுள்ள நேரமாக இது மாறும்.

-  பிள்ளைகளை கண்கானித்து அவர்களின் தேவைக்கான அனைத்தையும் செய்து அவர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் நல்லதொரு சந்தர்ப்பமாக இது அமையும்.

குழந்தைகள் பராமரிப்பு என்பது உணவூட்டி அவர்களை வளர்ப்பது மட்டுமல்ல, அதற்கும் மேல். கல்வி கேள்விகளில் அவர்களுக்கு தேவையானவற்றை தங்களால் இயன்றவரை செய்து தருவதும் அதில் அடங்கும்.

வானளாவிய நம்பிக்கையை பிள்ளைகள் மேல் வைத்துவிட்டால் மட்டும் போதாது. அன்பின் துணை கொண்டு அறிவின் அவசியத்தை பிள்ளைகள் விளங்கிடச் செய்வதும் பெற்றோர்களாகிய நம் கடமையே...

No comments:

Post a Comment