சிறு குழந்தைகள் போல் குதூகலமாக ஆடிப் பாடி களித்திருப்பது வாழ்க்கையின் பாதிப் பகுதியை கடந்த சிலருக்கு இயலாமல் போகலாம். ஆனால், அப்படி ஆனந்தமாக, செய்வது எதுவென்றாலும் அதில் மன மகிழ்ச்சியோடு நேரத்தை செலவிடுவது மீதம் சிலருக்கு மிகச் சாதாரண ஒன்று.
எப்படி இவர்களால் இப்படி முடிகிறது என சில நேரங்களில் நான் ஆச்சரியப் பட்டதுமுண்டு.
படுக்கையில் வந்து விழுந்தவுடனே, இவர்கள் நன்றாக தூங்க ஆரம்பித்து விடுவர். இது எல்லோராலும் முடியாதது. அப்படியும் இப்படியும் புரண்டு கொண்டு சதா ஏதாவது சிந்தனையில் உளன்று கொண்டு தூங்கும் நேரத்தை செலவிடுவோரே நம்மில் பலர்.
மனதை இலகுவாக வைத்துக்கொள்வதனாலேயே இப்படி படுக்கையில் சாய்ந்ததும் தூங்கும் நிலை. இதை உணர்ந்து கொள்ள சில காலம் பிடித்தது எனக்கு.
எல்லா விசயங்களையும் உணர்ச்சி வசமாகப்பேசி முடிவெடுப்பது பலரின் இயல்பான குணம். இதனால் அப்ப்டி எடுக்கும் முடிவுகள் மிகச்சரியானதாக அமைவதில்லை பல சந்தர்ப்பங்களில்.
சிலர் என்னிடம் வந்து மற்றவர்களின் குறைகளை சொல்லி முறையிடும் போது, அவர்களுக்கு ஒன்றை மீண்டும் மீண்டும் சொல்வென்.
" உங்களை அளவு கோளாக வைத்து மற்றவர்களை எடை போடாதீர்கள் "
எல்லோரும் நம்மைப் போல் இருப்பதில்லை. அப்படி இருந்துவிட்டால் இவ்வுலகில் எந்தப் பிரசினையும் தோன்றி இருக்காது. அதேபோல நாமும் மற்றவர்களைப் போல் ஆகமுடியாது என்று உணரும்போது அடுத்தவரின் செயலில் இருக்கும் குறைகள் நமக்கு பெரிதாக தெரியாது.

No comments:
Post a Comment