Saturday, 15 December 2012

உள்ளூர்ப் பாடல்கள் . . .

தமிழ்த் திரைப்பாடல்களுக்கு இணையாக நம் நாட்டில் கவிஞர்கள் இருந்திருக்கின்றனர் பாடல்கள் எழுத. கவிதை நயத்தோடு தனித்து நிற்கும் கதைக்களஞ்சியம் போன்ற வரிகளோடு, மனதுக்கு இதமான இசையமைப்பில், இனிய குரலில் பாடல்கள் வெளிவந்த காலம் அது. ஆனால் ஏனோ, இசையின் தூக்கலில் பாடல் வரிகள் அடிபட்டுப்போகின்றன இன்று. காதில் விழும்போது  கவிதைத்தன்மையும் மாறிவிடுகின்றது.

அப்படி அன்று நான் ரசித்த நம் உள்ளூர்ப்பாடல்களை நினைத்துப் பார்க்கிறேன். மலேசிய வானொலியின் பொன்னான காலம் அது. அவற்றில் சில...

" எனக்கென்றுதான் நீ பிறந்திருப்பாய் - என்
உள்ளத்தில் என்றும் நிறைந்திருப்பாய்
உனக்கெனத்தான் நான் ஓடி வந்தேன் - உன்
உள்ளத்தை பரிசாய்  கேட்க வந்தேன் "

- - 00 - -

"இதயத்தில் இடம் கேட்டு வந்தாள்
இன்று என்னுயிரைச் சொந்தமாக்கிக் கொண்டாள்
உதயத்தில் மலர்ந்தாடும் தாமரை - நான்
உனக்காக வாழ்ந்திருந்தேன் இதுவரை... ஒருமுறை
இதயத்தில் இடம் கேட்டு வந்தாள்"

- - 00 - -

"சிங்கார மேடையிலே செல்லக்கிளி ஆடுது
செல்லக்கிளி ஆட்டத்துக்கு சிட்டுக்குறுவி பாடுது"

- - 00 - -

"நோய் ஒன்று கண்டால்
மருந்தொன்று தேவை
நோய் தீர வேண்டும்
வருவாளா பாவை. . ."

- - 00 - -

"உன்னை மறக்கவில்லை நானே
என்னை மறப்பதெல்லாம் வீணே...
இந்த மேடையில் அந்தப் பார்வையில்
மறைவாகிடும் நாடகமா...."

- - 00 - -

"செந்தாழம் பூவாய்
செவ்வாழை மெருகாய்
பந்தாடும் பாவை எதிர் நின்றாள்"

- - 00 - -

"பூவான மஞ்சம்
பெண்ணே உன் நெஞ்சம்
பொழுதோடு உறவாடுவேன் நான்
பொய்யாக நான் ஏங்குவேனா...."


மற்றும்,

- நீதான் ஒரு ரோஜா மலர்

- நெஞ்சமே தீயில் வெந்தாயோ

- எனக்காக ஒரு பாடல் பாடு

என பல பாடல்கள் நமது மலேசிய மண்ணின் தனிச் சிறப்பில் வெளிவந்தன.



No comments:

Post a Comment