Saturday, 1 June 2013

வஜ்ரவேலு அண்ணன் ...

வஜ்ரவேலு அண்ணன் அவர்களை எனக்கு 'பாம் கார்டன் கோல்ப் கிளப்' எனும் இடத்தில் வேலை செய்யும் போதிருந்து  தெரியும். அது 1993லிருந்து 1995 வரைக்குமான எனது கோள்ப் திடலின் அனுபவ காலம்.

மெக்சி 5 தானியங்கி நீர் பாசன கருவிகளின் மூலம் கணினி துணை கொண்டு பச்சை பசேல் என இருக்கும் புல்லுக்கு நீர் பாய்ச்சுவது என் கவனிப்பில் இருந்த காலம் அது. மண்டோர் எனும் உதவியாளர் வரிசையில் முதன்மையாளராக என்னுடன் வேலை செய்து வந்தவர் இவர். அன்றைய கால கட்டத்தில் கணினி கற்றிருந்தோர் வெகு சிலரே. அந்த வகையில் எனக்கு அந்த பொறுப்பு வழங்கப் பட்டிருந்தது.

நல்ல திறமையானவராகையால் அதிக சம்பளம் தர ஏற்பாடு செய்து நான் வேலை மாறிச் செல்லும் இடமெங்கும் எனக்கு உதவியாளராக அழைத்துச் சென்றது பசுமையாக நினைவில் இருக்கிறது. 

அண்ணன் வஜ்ரவேலு பழக இனிமையானவர், எப்போதும் நகைச்சுவையுடன் உரையடிய படியே இருப்பதால், இவர் இருக்கும் இடத்தில் எல்லாம் மகிழ்ச்சியான சூழ்நிலையை காணமுடியும்.


பக்திப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர். ஓய்வு நேரங்களில் தேவாரப் பாடல்களை பாடச்சொல்லி கேட்டு மகிழ்வேன். பல பாடல்களைக் கற்றுக்கொண்டதும் இவரிடமிருந்துதான்.

"குற்றாயினவாறு" எனத் தொடங்கும் பாடல் இவர் குரலில் கேட்போர் காதுகளில் தேன் துளியைப் போல் மிக இனிமையாக ஒலிக்கும்.

இங்கே அவரது பேரக்குழந்தைகளின் இரட்டை வேடப் படங்களை தந்திருக்கிறேன். சிவப்பு டீ சட்டையில் அமர்ந்திருப்பவர்,அண்ணன் வஜ்ரவேலு அவர்கள்.








No comments:

Post a Comment