Thursday 6 June 2013

படித்ததில் பிடித்தது... "தப்பு"



என் ஒரு வயதுக் குழந்தையுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தேன். பிஞ்சுக் கால்களால் தத்தித் தத்தி நடந்து வந்தவன் சுவரில் இலேசாகத் தலை இடித்துக்கொள்ள, வீலென்று கத்தினான்.

" அடடா, இடிச்சிடுச்சா? அழாதே கண்ணு. இதோ பார், சுவரை அடிச்சிடலாம்" என்று அவன் கையையே எடுத்து சுவரை மெதுவாக ஒரு அடி அடித்ததும், மந்திரம் போட்ட மாதிரி அழுகை நின்றது.

"கீதா" என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். பக்கத்து வீட்டு ராஜி அக்கா. இது என்ன, பின்னாலேயே அவள் பையன் அழுதுகொண்டு?

" என்னக்கா  ?"

" உன் மூத்த பையன் பண்ணின காரியத்தைப் பார்த்தியாடி? இவனைப் போட்டு அடிஅடின்னு அடிச்சிருக்கான்..."

" ஏன், இவன் ஏதாச்சும் வம்பு பண்ணினானா?"

"அதெல்லாம் ஒன்னுமில்லேடி. சும்மா நின்னிட்டிருக்கையிலே அவன் தான் கவனிக்காமே சைக்கிளை மோதிட்டு 'ஏண்டா வழியிலே நின்னே?'ன்னு அடிச்சிருக்கான்.."

"ஸாரிக்கா."

மீண்டும் அதே சுவரில் தலையை இடித்துக்கொண்டு குழந்தை அழத்தொடங்கினான்.

"அழாதே கண்ணு.. சுவரை அடிச்....."

 நோ நோ, என் தப்பு இப்போது புரிந்து போயிற்று... அப்படியானால் நானேதான் இதுவரை இப்படிப்பட்ட ஒரு தவறான பழக்கத்தைக் கற்றுக் கொடுத்திருக்கேனா?

 நாலைந்து வருடங்களுக்குப் பின் இவன் வளர்ந்து விளையாட ஆரம்பிக்கையில் இதே மாதிரி கம்ப்ளைன்ட் மீண்டும் வராது.

( குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லித் தாருங்கள். சதா சர்வ காலமும், அனாவசிய அழுகையையும், அடம்பிடிப்பதையும் நிறுத்துங்கள். குழந்தைகளானாலும் கண்டிக்கும் நேரம் கண்டிப்புடன் இருங்கள். இல்லையேல், எதிர்காலம் சுற்றி உள்ளோருக்கு நரகமாகிவிடும். )

 நன்றி : குமுதம் ( ஒரு பக்க கதை )

No comments:

Post a Comment