ஏட்டில் படித்ததோடு
இருந்துவிடாதே - நீ
ஏன் படித்தோம் என்பதையும்
மறந்துவிடாதே!
நாட்டின் நெறிதவறி
நடந்துவிடாதே - நம்
நல்லவர்கள் தூற்றும்படி
வளர்ந்துவிடாதே!
மூத்தோர்சொல் வார்த்தைகளை
மீறக்கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும்
மாறக்கூடாது!
மாற்றார் கைப்பொருளை நம்பி
வாழக்கூடாது - தன்
மானமில்லாக் கோழையுடன்
சேரக்கூடாது!
துன்பத்தை வெல்லும் கல்வி
கற்றிட வேணும்!
சோம்பலைக் கொல்லும் திறன்
பெற்றிட வேணும்!
வம்பு செய்யும் குணமிருந்தால்
விட்டிட வேணும் - அறிவு
வளர்ச்சியிலே வான் முகட்டைத்
தொட்டிட வேண்டும்!
வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப்
பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல்
விளங்கிட வேண்டும்!
பெற்ற தாயின் புகழும், நீ பிறந்த
மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு
வாழ்ந்திட வேண்டும்!
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லித் தரவேண்டிய நற்பண்புகள் என கோடிட்டுக் காட்டிய பாடல்கள் இவை. ஒவ்வொரு வரியும் தனியே பல கதைகளுக்குச் சமம்.
இன்றோ,
"என் உச்சி மண்டையிலெ டொர்ருங்குது...",
"மம்மி டாடி வீட்டிலில்ல",
"டங் டங் டிக டிக டங் டங்"
என பாடல்கள் இயற்றப்படுகின்றன.
இருந்துவிடாதே - நீ
ஏன் படித்தோம் என்பதையும்
மறந்துவிடாதே!
நாட்டின் நெறிதவறி
நடந்துவிடாதே - நம்
நல்லவர்கள் தூற்றும்படி
வளர்ந்துவிடாதே!
மூத்தோர்சொல் வார்த்தைகளை
மீறக்கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும்
மாறக்கூடாது!
மாற்றார் கைப்பொருளை நம்பி
வாழக்கூடாது - தன்
மானமில்லாக் கோழையுடன்
சேரக்கூடாது!
துன்பத்தை வெல்லும் கல்வி
கற்றிட வேணும்!
சோம்பலைக் கொல்லும் திறன்
பெற்றிட வேணும்!
வம்பு செய்யும் குணமிருந்தால்
விட்டிட வேணும் - அறிவு
வளர்ச்சியிலே வான் முகட்டைத்
தொட்டிட வேண்டும்!
வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப்
பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல்
விளங்கிட வேண்டும்!
பெற்ற தாயின் புகழும், நீ பிறந்த
மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு
வாழ்ந்திட வேண்டும்!
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லித் தரவேண்டிய நற்பண்புகள் என கோடிட்டுக் காட்டிய பாடல்கள் இவை. ஒவ்வொரு வரியும் தனியே பல கதைகளுக்குச் சமம்.
இன்றோ,
"என் உச்சி மண்டையிலெ டொர்ருங்குது...",
"மம்மி டாடி வீட்டிலில்ல",
"டங் டங் டிக டிக டங் டங்"
என பாடல்கள் இயற்றப்படுகின்றன.
No comments:
Post a Comment