Friday 7 June 2013

நாகரீகமும் பண்பாடும்...

வெளிப்புற மாற்றங்களை நாகரீகம் என்கிறோம். அதே நேரம்,  அதிகம் மாறாத மனதுள் நிலைக்கும் ஒழுங்கு நெறிகளை பண்பாடு என்கிறோம்.

புத்தம் புதிதாக  உருவாகும் நவீன உடை அலங்காரத்தை உடனே தருவித்து அணிந்து கொள்வது நாகரீகம். மறைக்க வேண்டிய அவயங்களை மறைத்து ஆடை அணிவது பண்பாடு.

விருந்தினர் நம் இல்லம் தேடிவர,  அவர்களை உபசரித்து உணவுக்கு வழி செய்வது நாகரீகம்.  அவர்கள் உணவருந்திய பின் அல்லது அவர்களோடு  அமர்ந்து நாமும் உணவருந்துவது பண்பாடு. 

நிமிடத்துக்கு  நிமிடம் மாறுவது  நாகரீகம்.  ஆனால், பல காலமானாலும் மாறாதிருப்பது அல்லது சற்றே நகர்ந்து சின்னதாக  இடம் விடுவது பண்பாடு.

 "கல் தோண்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி" என்ற பெருமை நம் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் உண்டு.  நம் இனம் உலகின் முதன்மையானதும் மிகத் தொன்மை வாய்ந்ததுமாகும். இதில் நாகரீகத்திலும் பண்பாட்டிலும் நாமே முன்னுதாரணமாக திகழ்கிறோம்.

No comments:

Post a Comment