ஆனால், இன்றைய நிலை வேறு. அதே போல வாழ நாம் ஏதாவதொரு ஆசிரமத்திற்கு சென்றால் தான் முடியும். அப்படிப்பட்ட சூழ் நிலை அங்கேதான் கிடைக்கின்றது. அதுமட்டுமல்ல, அதுபோன்ற இடங்களில் இப்போது ஞானிகளும், இறைவனை நோக்கி தவம் செய்யும் பக்தர்களும் மட்டுமே வாழ்கிறார்கள்.
நமது மூதாதையர் கற்பித்த அந்த இயற்கை வாழ்வு முறையை நாம் எப்படி தொடர முடியாமல் போய்விட்டது ? நவீனம் எனும் பெயரில் நாம் நமக்கிழைத்துக்கொண்ட செய்வினைகளா...?
இயற்கையை நேசித்த மனிதனுக்கு அது ஆபத்தை தடுக்கும் நண்பனாகவும், அதை அழிக்க நினைத்த நேரங்களில் இயற்கையே ஒரு பெரும் அசுரனாகவும் மாறி பல சேதங்களை ஏற்படுத்தி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
No comments:
Post a Comment