ஒரு காலத்தில் பத்து வெள்ளி சம்பாதிக்க கஷ்டப்பட்ட நாம் இப்போது ஆயிரமாயிரமாக சம்பாதிக்கின்றோம். மலேசியாவில் இந்தச் சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைக்கிறது. நமது நாட்டை மேம்பாடடையச் செய்தவர்களில் நாமும் முன்னனியில் இருப்பவர்களே. அந்த தார்மீக அடிப்படையில் நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் ஏராளம் ஏராளம்.
கல்விகூட இரண்டாம் பட்சம் என்கின்றனர் சிலர். கொஞ்சம் பொது அறிவு, கொஞ்சம் சுறுசுறுப்பு, முதலீட்டுக்கான கொஞ்சம் பணம், இயற்கைக்கு புறம்பாக செயல்படாத குணம், ஒரே ஒரு சந்தர்ப்பம்... இவையே கைநிறைய சம்பாதிப்பதற்கான கலவை. அனுபவப்பட்டோர் சொல்லும் ரகசியம் இது.
சம்பளத்திற்காக வேலைக்குச் செல்வதில் எவ்வித தவறும் இல்லை. அதனில் இருந்து அடுத்த நிலைக்கு போவதற்கு சொல்லப்படுபவைதான் மேலுள்ளவை.
இந்த இரண்டு நிலைகளையும் மீறிய இன்னொரு குழுவினரும் உண்டு.
அதிர்ஷ்டம் அழைக்கட்டும் என அலாவுதீன் பூதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள். லாட்டரி டிக்கட்டுகளில் நம்பிக்கை வைப்போரும் இதில் அடங்குவர். ஓரிருவர் வெற்றி பெற்றாலும், ஏனைய அனைவரும் இருப்பதையும் இழந்துவிட்டு தவிப்பவர்களே. வெளியே சாதாரணமாக தோன்றும் இவர்கள் உள்ளுக்குள்ளே ஒருவித விரக்தியுடனேயே வாழ்கிறார்கள்.
"தூர நோக்கு" குணம் கொண்டோர், கிடைக்கும் அரிய சந்தர்ப்பத்தை வெற்றிகரமாக வடிவமைத்து நம்பிக்கையுடன் புதுத் தொழில்களிலும், முதலீடுகளிலும், இதர ஞாயமான பொருளீட்டும் அம்சங்களிலும் துணிகிறார்கள். இவர்களே ஆயிரங்களிலும் இலட்சங்களிலும் புரளும் தகுதி பெறுகிறார்கள்.
"உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு..."
என எம்ஜிஆர் பாடியதில் உண்மை உண்டு. அது வெறும் உடல் உழைப்பு மட்டுமல்ல மூளையின் பங்களிப்பையும் சேர்த்து சொல்லப்பட்டதென நாம் தெரிந்துகொண்டால் சரி.

No comments:
Post a Comment