புகழ்பெற்ற மருத்துவ மனை அது.
அலுவலக ஃபைல்களை வைக்கும், உள்ளே தள்ளி வெளியே இழுக்கும் பெட்டிகளைப் போல சுவற்றோடு வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் அந்த பெரிய அறையின் மூன்று பக்கங்களிலும் இருந்தன. (சிலர் இதை பிணக் கிடங்கு என்கிறார்கள். இப்படிச் சொல்வது ஏதோ தகாத ஒரு இடம் போல படுகிறது. )
சில வருடங்களுக்கு முன்னர் ஒரு வேலைக்கான சிபாரிசு கையெழுத்து கேட்டு என்னிடம் வந்திருந்த ஒரு இளைஞர் அன்று அங்கு அந்த அமரர் அறை சிப்பந்தியாக பணியில் இருந்தார்.
என்னைப்பார்த்ததும் முகம் மலர,
" நீங்க இங்க....?"
என என் பதிலுக்கு காத்திருந்தார்.
"ஒன்னுமில்ல, நண்பரோட தந்தையை 'எடுத்துச் செல்ல' அமரர் வாகனம் வந்துகிட்டு இருக்கு. 'ஃபோர்மலிட்டிக்காக' இந்த பேப்பர்ஸ்ஸை பார்த்துட்டு உடம்பை அவர் பிள்ளைகளிடம் ஒப்படைக்கனும்...."
எல்லாம் சரியாக உள்ளதென கையொப்பமிட்டுத் தந்தார். அமரர் ஊர்தி வந்து சேர்வதற்காக காத்திருந்தோம்.
"சார், அவங்க வருவதுக்குள்ளே சிலவற்றைக் காட்டுறேன், வாங்க..."
என்றபடி அங்கிருந்த பெட்டிகளை ஒவ்வொன்றாக வெளியே இழுத்து என்னிடம் காட்டியபடி,
" இன்றைக்கு மட்டும் ஏழு பேர்... ஒரு விபத்துல இறந்தவங்க..ரெண்டு பேரை அனுப்பிவச்சாச்சி. மூணு பொணம் இங்கிருக்கு. வார்டிலே இருந்து இன்னும் கொஞ்ச நேரத்திலே ரெண்டு இங்கே வந்திடும். மொதல்லேயே "போற'' நிலையிலே இருக்குன்னு செய்தி வந்திச்சி" என எவ்வித உணர்ச்சியும் இன்றி சொல்லிக்கொண்டு போனார்.
' நீங்கதான் இன்டர்நெட்டுல புளொக் எழுதுவிங்கலாமே, கேள்விப்பட்டேன்... அப்படியே வீணே விபத்துக்களிலே உயிர் இழக்கிறது பத்தியும் கொஞ்சம் எழுதி வையுங்களேன்..." என்றார்.
ஒருவாறு தலையாட்டிவிட்டு, அந்த அமரர் அறையிலிருந்து வெளியே வந்தேன். அன்றைய விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர் தத்தம் உறவினரின் உடலை 'வாங்கிச் செல்ல' அந்த அறைக்கு வெளியே காத்திருப்பது கண்ணில் பட்டது.
எல்லார் முகத்திலும் சோகம்.
" அவனுக்கென்ன, மகராசன் போய் சேர்ந்துட்டான். இருக்கிற சொச்ச காலத்திலே குடும்ப நிலைமை என்னவாகப் போவுதோ...."
என அங்கிருந்த ஒருவர் சொல்ல, சம்பந்தப் பட்ட குடும்பத்தினரின் இருண்ட எதிர்காலத்தை நினைத்து ஒவ்வொருவரும் கண்ணீர் சிந்தினர்.
விபத்துக்களில் உயிர் துறப்போர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
"சாலையில் கவனம் வைப்போம், வீண் மரணங்களைத் தவிர்ப்போம்..."

No comments:
Post a Comment