உடல் பல நுட்பமான செயல்களைச் செய்யும் ஒரு
தொழிற்சாலை. ஆனால், துயரங்கள்., தாங்கொனா வேதனைகள், கடும் விமர்சனங்கள் என
தினமும் நெஞ்சைத் துளைக்கும் செயல்பாடுகளினால் உள்ளம் பாதிப்புக்குள்ளாகும்
போது, நம் உடலும் நோய்களில் வீழ்கிறது.
நோய்களில் பெரும் நோய், மன அழுத்தம். இதனால் பாதிக்கப்படுவரின் நோய்எதிர்ப்பு ஆற்றல் குறையும், நோயினைத் தாக்கும் வல்லமை அற்று பல இன்னல்களுக்கு உடல் பலியாகும். வெளியில் தெரியும் உடல் நலக் கோளாறுகளைத் தவிர்த்து, நம் கண்களுக்கு புலப்படாத, மனதளவில் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரிக்கும்.
இதன் தொடர்ச்சியாக தீவிர சிகிச்சை அளிக்க வேண்டி வரும். சிகிச்சைக்கு பணம்? ஆக, பொருளாதரத்திலும் சிக்கல் வந்துவிடும்.
இதற்கு மருந்து ...? இருக்கிறது.
நமக்குள் இருக்கும் நகைச்சுவைத் தன்மையை வளர்த்துக் கொண்டால், எல்லா பிரச்சினைகளும் நமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கும்.
இதை நான் சொல்லவில்லை. மேல்
நாட்டு அறிஞர்களும், வல்லுநர்களும் சொல்கிறார்கள்.
சிரிப்போம்....சிறப்படைவோம்....
சிரிப்போம்....சிறப்படைவோம்....
No comments:
Post a Comment