இப்படத்திற்கு " பழைய பாவங்கள் புதிய தண்டனைகள்" எனக்கூட பெயரிடலாம். திரைக்கதையும் அப்படித்தான் இருக்கிறது.
ஏஜன்ட் 007னைப் போன்ற திறமையைக்கொண்ட 'எம்'மின் கீழ் வேலை செய்த முன்னாள் அதிகாரி எதிரிகளிடம் மாட்டிக்கொண்டு தான் அனுபவித்த சித்திரவதைகளுக்கு 'எம்' தான் காரணம் என எண்ணி 'எம்'மையும் அவரின் மற்ற ஏஜன்ட்டுகளையும் கொலை செய்வது தான் இந்த படத்தின் அதிரடி கதை. தனது பாஸ் 'எம்'மைக் கொல்வதற்கு வில்லன் சீறிப்பாய்ந்து வரும் போது 'எம்'மை தாம் சிறுபிராயத்தில் வளர்ந்த இடத்திற்கு பாதுகாப்புக்காக அழைத்துச் சென்று விடுகிறார் ஜேம்ஸ்பாண்ட். அவர்களை பின் தொடர்ந்து வரும் வில்லனும் அவனது அடியாட்களும் என்ன ஆனார்கள், பாண்ட்டும் 'எம்'மும் தப்பித்தனரா அல்லது 'எம்' கொல்லப்பட்டாரா.... மிகவும் விறுவிறுப்பான கதை முடிவு.
இப்படத்தில் கதா நாயகிக்கு அதிகம் வேலை இல்லை. படம் முழுவதும் வில்லைனைத் துரத்துவதிலும், தேடுவதிலும் பின்பு அவனை தனதிடத்திற்கு வரவழைத்து சண்டை இடுவதிலேயே நேரம் ஓடிவிடுவதால் வழக்கமான அழகிகளின் அரங்கேற்றம் இதில் இல்லை. ஆனாலும் பாவம், சில நிமிடங்களே வரும் இந்த அழகி ஜேம்ஸ்பாண்டுக்காக உயிரையே தியாகம் செய்கிறாள்.
மற்ற பாண்டுகளுக்கும் டேனியல் கிரேக்கிற்கும் உள்ள வித்தியாசம் ஒன்றுள்ளது. இவர் நல்ல ஓட்டக்காரர். மூலை முடுக்கெல்லாம் ஓடி வில்லனைத் துரத்துவது இவரின் மூன்று படங்களிலும் தொடர்கிறது. உண்மையில் இவர் ஓடும் காட்சிகளும் ரசிக்கும்படியாகவே உள்ளது.
கோர்ட்டில் இருக்கும் தனது பாஸ் 'எம்'மைத்தேடி வில்லன் வர, 'எம்'மைக் காப்பாற்ற இப்படி ஓடி வரும் பாண்ட்.
முதல் நாள், முதல் காட்சி... ஸ்கைஃபால்... First day, first show...skyfall... பார்க்க வேண்டிய படம்...
( மேலுள்ள படங்கள் : சில இணையத்தளங்களிலிருந்து எடுக்கப்பட்டவை )
No comments:
Post a Comment