Friday, 30 November 2012

மலரும் நினைவுகள் :பாம் கார்டன் கோல்ப் கிளப். . .

ஒரு பழைய படம்... என்னுடைய மலரும் நினைவுகளில் இருந்து.
இடம் : பாம்  கார்டன்  கோல்ப் கிளப்.


படத்தில் இருப்பவர்கள் :
வலப்பக்கம் நின்று பாம் கார்டன் அலுவலக அதிகாரி 'ரஞ்சிட் கவுர்' அவர்களை கவனிப்பது, சிதம்பரம்.
எனக்குப் பின்னால் உட்கார்ந்தவாறு புகைப்படம் எடுப்பவரைப் பார்த்துக்கொண்டிருப்பவர், காலம் சென்ற  'கலை'. 
அதே மேஜையில் இடதுபுறம் இருக்கும் இருவர் பேசிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருப்பவர், கோல்ப் பற்றிய தொழில் நுணுக்கங்களையும், ரகசியங்களையும் எனக்குச் சொல்லித்தந்த 'திரு. முனுசாமி' அவர்கள்.
இடது பக்கம் பேசிக்கொண்டிருப்பவர்கள், 'திரு. பெரியண்ணனும', 'பழனியும்'. 
இதில் இன்னொரு முக்கியமானவரும் உண்டு. நான் வேலை மாற்றலாகி இரண்டு இடங்களுக்குப் போகும் போது என்னுடனே என்னைத் தொடர்ந்து வந்த, என்னுடைய "ஏ" டீமின் ஐந்து பேரில் ஒருவரான, 'சீஃப் மெக்கானிக்' 'சுஹைமி', திரு. கலைக்குப் பின்னால் வெள்ளை நிற முழுக்கை சட்டையில் அமர்ந்திருக்கிறார்.

சுமார் இருபது வருடங்களுக்கு முன் எடுத்தப் புகைப்படம் இது. வேலை நேரத்தின் ஊடே 'காவல் தெய்வமான' முனீஸ்வரருக்கான பூஜையில், ஆடு வெட்டி விருந்தும் வைப்பது வழக்கம். அப்படி ஒரு விருந்தில் கலந்து கொண்டபோது எடுக்கப் பட்ட படமே இது.


No comments:

Post a Comment