Thursday, 8 November 2012

பாவங்களும் பாவமன்னிப்பும்...

பாவமன்னிப்பு எனும் சாக்கில் பாவங்களைத் தொடர்ந்து செய்வோர் நம்மிடையே பலர் இருக்கிறார்கள். ஈடு படும் பல காரியங்களில் 'இதயம்' இல்லாதவர் போல மனிதாபிமானமற்ற கடுமையான, கொடுமையான வழிகளில் பிறரிடம் நடந்து கொள்கின்றனர்.

" அட, அதுதான் பாவத்தைப் போக்க புண்ணியஸ்தலங்களுக்கு போய் வான்னு' பெரியவங்க சொல்லி இருக்காங்களே...அப்படி போயிட்டு வந்துட்டா போச்சி...." என கிண்டலாகவும், நக்கலாகவும் சொல்வோர் பலர்.

இது ஞாயமா, இப்படியும்    பாவமன்னிப்பு கிட்டுமா என்று தெரியாவிட்டாலும், இப்படி நினைத்து ஒரு தகாத செயலில் ஈடுபடுவதே பெரும்பாவம் என்பதும் இது எவ்வகையிலும் ஆரோக்கியமானச் செயலாக இருக்க முடியாது  என்பதும்   நமக்கு நிச்சயம் தெரியும் ஒன்று.

தெரியாமல் செய்துவிட்ட தவற்றுக்கு மனம் வருந்தி இறைவன் முன் மன்னிப்பு கேட்பவர் சிறந்த மனிதர் என்று பெரியோர் சொல்லி இருந்தாலும், அதன் பின் அப்பாவங்களை தொடராதே எனத்தான் நமக்கு அறிவுறுத்திச் சென்றிருக்கின்றனர். யாரும், எங்கும் "மீண்டும் பாவம் செய்தால் மீண்டும் பவமன்னிப்பு கேள்.." எனச் சொல்லியதாகக் காணோம்.

மதத்தையும் இறை நம்பிக்கையையும் இவர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன் படுத்திக் கொள்கிறார்கள். அப்படி சொல்லப்படுவதன் உண்மை காரணத்தைக் கண்டறிய எவ்வித முயற்சியும் எடுத்துக்கொள்வதில்லை.

எல்லா பழைய பாவங்களுக்கும் ஒரு புதிய தண்டனை உண்டு என்பதை தெரிந்து கொண்டால் மேலும் மேலும் பாவங்களில்  ஈடுபடுவதை நிறுத்திக் கொள்வார்களோ என்னவோ.... 

No comments:

Post a Comment