Thursday, 29 November 2012

நம் நாடும் நாமும்...

மாஸ்மீடியா, கம்யூனிகேஷன், தகவல் பரிமாற்றம், சுகாதாரம், தொழில் வளர்ச்சி என நம் நாடு மற்ற நாடுகளிடம் போட்டியிட்டவாறு முன்னேறி போய்க்கொண்டிருக்கும் காலம் இது.

இந்த நேரத்தில், சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நமது பங்களிப்பை எண்ணி நாம் பெருமை கொள்ளத்தான் வேண்டும். இந்த தேசத்தின் ஆணிவேர்களில் நாமும் பிண்ணி  பிணைந்திருக்கிறோம்.

இப்போதுள்ள சரித்திரப் பாட புத்தகங்களில் நம்மைப்பற்றிய உண்மைச் செய்திகள் அவ்வளவாகக் காணோம். இது எப்படி நேர்ந்தது என தெரியாவிட்டாலும்,  கொடிய மிருகங்களோடு வாழ்ந்து வந்த அதே நேரம் நாட்டின் வளத்திற்கு நாம் ஆற்றிய தொண்டினை சில எழுத்தாளர்களின் புத்தகங்களை படிக்கும் போது ஆச்சரியம் மேலிடுகிறது.

ஜப்பான், கொரியா போன்ற நாடுகளின் நிறுவனங்கள் இங்கு வருவதற்கு முன் நாம் நம்பி இருந்தது இரப்பர் மரங்களையே.   ஈயமும், ஈச்சமரமும் இதர இயற்கை வளங்களாக நாட்டுக்கு சொற்ப வருமானத்தை ஈட்டித் தந்தன. ஆயினும் அன்றைய நம் நாடு மேம்பாடடைய முதற்காரணம் இரப்பர்தான்.

இரப்பர் மரங்கள் இருந்த தோட்டப்புறங்களில் தான் நாமும்  வாழ்ந்து வந்தோம்.  அன்றைய நம் நாடு, 'இக்னிஷனில்' ஸ்டார்ட் ஆகி கிடு கிடு வேகத்தில் உயர்வை நோக்கிச் செல்லக்  காரணம் நம் பங்களிப்பும் தான்.

இதில் இன்னொமொரு சந்தோஷப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், பல்லின மக்களைக் கொண்ட இந்த நாட்டில் நாம் அனைவரும் ஐக்கியமாகவும்  மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறோம் என்பதே.

அதுவே நம் பிரார்த்தனையும்கூட.  இனி வரும் காலங்களிலும் இந்த நல்லிணக்கம் தொடரவேண்டும்.   நம்மைப்பற்றிய நாலு நல்ல விசயங்கள் மறைக்கப்படாமல் வெளிப்படையாக பேசப்படவேண்டும்.

No comments:

Post a Comment