Wednesday, 28 November 2012

வாழ்வின் அஸ்திவாரம் இளமையே...

நம் அனைவருக்கும் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு சிந்தனை இருக்கும். நாமிருக்கும் இன்றைய நிலை ஐந்து வருடங்களுக்கு, பத்து வருடங்களுக்கு அல்லது அதற்குப் பின்னரோ எப்படி இருக்கும் என எண்ணத்தில் அவ்வப்போது தோன்றி மறையும். ஆக்கபூர்வமான இது போன்ற பார்வைகளே நம் வாழ்வின் வெற்றிப் பயணத்தை தீர்மானிக்கின்றன.

'இளமையில் முடியாதது' ஏதுமில்லை என்பார்கள். ஒளிமயமான எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் அமைப்பது இளமையில்தான். சுக போகங்களில் இருந்து தன்னை  விடுவித்துக் கொண்டு சுய கட்டுப்பாட்டுடன் கல்வி ஞானங்களில் ஈடுபாடு காட்டுவோரே, வாலிப வயதில் பொருள் தேடுவதிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள், முதுமையில் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள்.

தம் வாழ்வு சென்றடைய வேண்டிய இலக்கு எதுவென அறியாதவர்கள் வெற்றியடைவதில்லை. வாகனத்தில் தொற்றிக்கொண்டு பயணிப்போர் போல வெற்றி பெரும் யாருடனாவது தன்னை இணைத்துக்கொண்டால் ஒரு வேளை இது சாத்தியப் படலாம்... 

No comments:

Post a Comment