Wednesday, 10 August 2011

குழந்தை வளர்ப்பு....

பிறந்தது முதல் சில வருடங்கள் வரை குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருப்பது பெற்றோர்களே. நல்லதையும் கெட்டதையும் இவர்களைப் பார்த்தே பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள்.

இந்த இளம் வயதில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து நல்ல பழக்க வழக்கங்களையும் ஊட்டி வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் மிக முக்கிய கடமை. ஏனோ தானோவென இருப்பது குழந்தை வளர்ப்புக்கு உகந்ததல்ல.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்'. இளம் பிராயத்திலேயே வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான கணிதத்தையும் மொழிக்குத் தகுந்தாற்போல் எழுத்துக்களையும் பெற்றோர் சொல்லித்தந்து பிள்ளைகளின் நல்ல பழக்கங்களை வழக்கத்துக்கு கொண்டு வந்துவிட வேண்டும்.

குறும்பு செய்யும் அரும்பு வயதில் மழலைகளின் மூளை வளர்ச்சி கிடு கிடு வேகத்தில் இருக்கும் என்கிறது அறிவியல். அப்போது நாம் புகட்டுகின்ற நல்ல பழக்க வழக்கங்களும், சொல்லித்தருகின்ற பள்ளிப் பாடங்களும் பசுமரத்து ஆணி போல நிலையாக நிற்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

எனவே, பிள்ளைகள் பெரியவர்களாகும் போது எப்படி இருக்கவேண்டும் என்பதை பெற்றோர்கள் முடிவு செய்யும் காலம் குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும் அந்த சில வருடங்களே...

பெற்றோர்களின் பெரிய கவலையாக தெரிவது பிள்ளைகள் சரிவரச் சாப்பிடாமல் போவது. ஆனால் அதே நேரம் " சாப்பிடு. . . . சாப்பிடு " என பிள்ளைகளைப் பெற்றோர்கள் தொந்தரவு செய்யக்கூடாதாம். அப்படி மீறி கட்டாயப்படுத்தினால், பிள்ளைகள் வழக்கத்தை விட குறைவாகவே உணவு உண்கிறார்களாம். பல நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட ஆய்வுகளின் முடிவு இது.

" அட, பெத்தவங்க பிள்ளைங்க மேல உள்ள பாசத்துல 'சாப்பிடுடா என் செல்லம்..."ன்னு கெஞ்சி சாப்பிட சொன்னா, பசங்க ஏட்டிக்கு போட்டியா இல்ல இப்போ செய்யுறாங்க...." என நாம் அங்கலாய்த்துக் கொண்டாலும், சாப்பிடும் விசயத்தில் அன்பு அளவோடு இருக்கவேண்டுமாம். 


குழந்தைகளை வலுக்கட்டாயமாக சாப்பிடச் சொன்னால், உணவின் மீது வெறுப்பு வளர்கிறதாம் அவர்கள் மேல் நடத்தாப்பட்ட ஆய்வு இதையும் சொல்கிறது.

அதே நேரம் அவர்களை சாப்பிடச் சொல்லாமலும் தன்னிச்சையாக விட்டு விடக் கூடாதாம். தகுந்த நேரத்தில் அவர்களுக்கு உணவைச் சாப்பிடும் படி நினைவுறுத்தவும் வேண்டுமாம்.

"குழந்தை வளர்ப்பு"ன்னா சும்மாவா என்ன. . ..?



No comments:

Post a Comment