Wednesday, 10 August 2011

எம்ஜிஆர் பற்றி கண்ணதாசன்.... 2

 1956 – ஆம் ஆண்டில் புட்சி நடிகர் பற்றிக் கவியரசர் பார்வை:-

 ‘கலைவாணர் வரிசையிலே கொடை கொடுப்பதில் இப்பொழுது புரட்சி நடிகர் இடம்பெறுகிறார்!’ என்ற கண்ணதாசன் கருத்து, வளர்ச்சி பெற்ற வளமான உண்மையாகவே வருங்காலத்தில் உருவெடுத்தது.

 1956 – ஆம் ஆண்டில் ஒரு சவரன் (பவுன்) ரூபாய் நூறுக்கும் குறைவாகவிற்றபோதே, பல்லாயிரக்கணக்கில் வாரி வாரி வழங்கிய வள்ளலே எம்.ஜி.ஆர். என்பதனை அறியும்போது, அவர்மக்கள் திலகம்என்ற மகுடத்தைப் பெற்ற மகிமை நம் மனங்களுக்கு நன்கு புரிகிறது.

 பின்னாளில் 1959 – ஆம் ஆண்டில் மட்டும் மருத்துவமனைகள், பள்ளிக்களுக்கு எம்.ஜி.ஆர் வாரி வழங்கிய நிதி ரூபாய் மூன்று இலட்சமாகும்.

 1961, 1964 – ஆம் ஆண்டுகிளல் அடையாறு ஔவை இல்லத்திற்கு வழங்கிய நிதி ரூபாய் அறுபது ஆயிரங்கள்.

 1960, 61, 64 – ஆம் ஆண்டுகளில் சென்னை வெள்ளநிவாரண நிதிக்கு வழங்கிய ரூபாய் எண்பத்தைந்தாயிரம்.

 1960, 62, 64 – ஆம் ஆண்டுகளில் மதுரை, தஞ்சை, திருச்சி, நகரங்களின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய ரூபாய் ஒரு இலட்சமாகும்.

 1961 – ஆம் ஆண்டு ரிக் ஷா தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வாங்கி, வழங்கிடத் தந்த தொகை ரூபாய் அறுபதாயிரம்.

 1962 – ஆம் ஆண்டு சீனப்படையெடுப்பின் போது எம்.ஜி.ஆர் வழங்கிய யுத்த நிதி, ரூபாய் ஒரு இலட்சமாகும்.

 1964-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பில் தீக்குளித்த தியாகிகளுக்கு வழங்கிய நிதி ரூபாய் இருபதாயிரம். இதே ஆண்டில் பண்டிதர் நேரு பிரான் நினைவு நிதிக்கு வழங்கிய தொகை ரூபாய் இருபத்தைந்தாயிரமாகும்.

 1965-ஆம் ஆண்டில் பரங்கிமலைத் தொகுதியில் பாலம் கட்டவும், நீர்த்தேக்கம் அமைக்கவும் தந்த தொகை ரூபாய் 41,500 ஆகும்.

 1968-ஆம் ஆண்டில் மட்டும் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி, விழுப்புரம் கல்லூரி, செங்கல்பட்டு கல்லூரி, கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, மராட்டிய மாநில வெள்ள நிவாரணங்கள், ராஜஸ்தான் பஞ்சநிவாரணம், ஒரிஸ்ஸா பூகம்ப நிவாரண மற்றம் பல நற்செயல்களுக்கும் வழங்கிய தொகை இலட்ச ரூபாய்களுக்கும் மேலாகும்.

 இவ்வளவுதானா? …. 1968 – ஆம் ஆண்டே சென்னையில் தீப்பிடிக்காத வீடுகள் கட்டித் தந்த தொகை ரூபாய் ஒரு இலட்டசமாகும்.

 சிலம்புச்செல்வர் .பொ.சி. விழாக்களுக்கு மட்டும் பலமுறை தந்த ரூபாய் ஐந்து இலட்சங்கள்.

 இவை போன்று எத்தனையோ, தமிழ்ச்சான்றோர்கள், கலையுலகப் பிரமுகர்கள், நலிந்த கலைஞர்கள் எம்.ஜி.ஆரிடம் தனிப்பட்ட முறையில் பெற்ற நிதி ஏராளம்! ஏராளம்!

 தாராளமாய்க் கலியுகப் பாரிவள்ளலாம் எம்.ஜி.ஆர். கரங்கள் ஈந்த நிதிக்கு எல்லாம் பட்டியல் ஈந்தால் அதிவே ஒரு நூலாக மலர்ந்து விடும்.

 இவற்றையெல்லாம் இங்கு குறிப்பிடக் காரணம், கவியரசர் பார்த்த பார்வையில் எம்.ஜி.ஆர் இறுதி வரையில் ஈயும் மனத்தோடு இருந்தார் என்பதனைச் சுட்டிடவே என்பேன்.

 அதுமட்டுமல்ல… ‘கண்ணதாசன் என்ற கவிஞரின் வாக்கு, பொய்த்ததில்லைஎன்பதனை இந்தப் தமிழ்ப்புவியும் அறியவேண்டும் என்ற ஆவலுமே எனலாம்.

 கவிஞரின் பாராட்டுக் கடிதத்தில் பவனி வரும் சில சொல்லோவியங்களைப் பாருங்களேன்!

 இதய கீதமாக மட்டுமா எம்.ஜி.ஆர் திகழ்ந்தார். இலட்சோப இலட்சம் மக்களின் இதய தெய்வமாக அல்லவா எம்.ஜி.ஆர் திகழ்ந்தார். இன்றும் திகழ்ந்து கொண்டல்லவா இறந்தும், இறவாயிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

 இன்னும் கவியரசரின் கணிப்பைச் சற்று, காண்போமா?

 இது கணிப்பு மட்டுமல்ல… 1954 – 56 – ஆம் ஆண்டுகளில் வெளிவந்த படங்கள் சரிந்திர சாதனைகளுமே எனலாம்.

 புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்து 1956 – ஆம் ஆண்டில் வெளிவந்த படங்கள் மூன்று. அவை முறையே,

அலிபாபாவும் 40 திருடர்களும்
 மதுரை வீரன்
 தாய்க்குப்பின் தாரம்

 இம்மூன்று படங்களுமே வித்தியாசமான கோணங்களில் வெளிவந்து மகத்தான வெற்றிகளை ஒரே ஆண்டில் கண்ட ஒப்பற்ற படங்களாகும்.

 12.1.1956 அன்று வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் வெளியீடான, டி.ஆர். சுந்தரம் இயக்கியஅலிபாபாவும் 40 திருடர்களும்தமிழில் வெளியான முதல் கலர் திரைப்படமாகும்.

 இத்திரைப்படம் மகத்தான வெற்றி வெற்றதோடு, மதுரைசிந்தாமணிதிரையரங்கில் தொடர்ந்து, தினமும் மூன்று காட்சிகளாக 168 நாள்கள் ஓடி, சாதனை படைத்தது.

 ‘மதுரை வீரன்’ – இப்படத்தின் பெரும் பெருமைகளில், சிலவற்றைக் கண்டு மகிழ்ந்தோம்.

 ‘தாய்க்குப்பின் தாரம்’ 21.9.1956 அன்று வெளியிடப்பட்ட வெற்றிப் படமாகும். இப்படமும் மதுரை மாநகர் சந்திரா டாக்கீஸில் 161 நாள்கள் ஓடி, சாதனை படைத்தது. இப்படத்தின் சிறப்புகளையும் கண்டோம்.

 ஆக, புரட்சி நடிகர் நடித்து 1956 – ஆம் ஆண்டில் வெளிவந்த மூன்று திரைக்காவியங்களும் மகத்தான வெற்றிகளைக் கண்டன என்பதனை நாம் அறியலாம்.

 இனி இரண்டு படங்கள் எவை?

 மலைக்கள்ளன்,

 குலேபகாவலிஎனும் இவையே.

 ‘மலைக்கள்ளன்’, அன்றைய தமிழக அரசின் ஆஸ்தானக் கவிஞராக இருந்த நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை எழுதிய கதையாகும். இக்கதை பட்சிராஜா பிலிம்ஸாரின் சார்பில் திரைப்படமாகத் தயாரித்தபோது, கலைஞர் மு. கருணாநிதி, வசனங்களைத் தீட்டினார். 1954 – ஆம் ஆண்டு வெளியான இப்படம் மகத்தான வெற்றியைப் பெற்றதோடு, ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப்படம் என்ற பேற்றினையும் பெற்றது. அப்படம் கோவையில் 150 நாள்கள் தொடர்ந்து ஓடியது.

 குலேபகாவலிஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில், டி.ஆர் ராமண்ணா இயக்கத்தில் உருவானது. இப்படத்தின் பாடல்கள், வசனங்களைத் தஞ்சை இராமையதாசு எழுதினார். 1955 – ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படமும் மகத்தான வெறியைக் கண்டது. திருச்சி பிரபாத் திரையரங்கில் இப்படம் 166 நாள்கள் தொடர்ந்து ஓடிச் சாதனை படைத்தது.

 பெரும் அதிசயம் என்னவெனில், இந்த ஐந்து படங்களும் இலங்கையில் பல திரையரங்குகளில் நூறு நாள்களுக்கும் மேலாக ஓடி மேன்மைமிகு சரித்திரங்களைப் படைத்துக் காட்டின.

 இந்த ஐந்து படங்களில், ‘குலேபகாவலிதவிர ஏனைய நான்கு படங்களில் நடிப்பின் இலக்கணமாய்த் திகழ்ந்த பி. பானுமதியே புரட்சி நடிகருடன் கதாநாயகியாய் நடித்துப் பெருமை பெற்றார்.

 தமிழ்ப்படவுலக வரலாற்றில் வசூல் சாதனைகளைச் செய்து காட்டிய இந்தப் படங்களைத் தொடர்ந்து, மக்கள் திலகம் நடித்த ஏனைய படங்களும் எல்லையற்ற சாதனைகளைச் செய்து காட்டின.

 அப்படங்களின் பட்டியலைப் பாருங்களேன்.

 1957 – ஆம் ஆண்டு;

 சக்கரவர்த்தி திருமகள்

 மகாதேவி

 புதுமைப்பித்தன்

 ராஜராஜன்.

 இவற்றில் முதல் மூன்றும் இணையற்ற சாதனைப் படங்களே.

 1958 – ஆம் ஆண்டு;

 நாடோடி மன்னன்.

 நம்பிக்கை நாயகனாக எம்.ஜி.ஆரை மாற்றி, நாட்டிலேயே பெரும் புரட்சியை உருவாக்கிய படமே நாடோடி மன்னன்.

 1959 – ஆம் ஆண்டு;

 கல்பனா கலா மந்திர் தயாரித்த , அறிஞர் அண்ணா கதை எழுதி, இராம. அரங்கண்ணல் வசனம் எழுதி, ஆர்.ஆர். சந்திரன் இயக்கத்தில், அருமையான பாடல்களோடு வெளிவந்த படமேதாய் மகளுக்குக் கட்டிய தாலிஎன்ற புரண்ட்சிக்கருத்துகள் நிறைந்த படம்.

 புரட்சி .நடிகரோடு, ஜமுனா கதாநாயகியாக நடித்த இப்படம் எதிர்பாத்த வெற்றியை ஈட்டவில்லை.

 இப்படத்தில் கவியரசரின்,

 “ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்என்று தொடங்கும் ஒப்பற்ற பாடல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 1960 ஆம் ஆண்டு:

 பாக்தாத் திருடன்

 மன்னாதி மன்னன்

 ராஜா தேசிங்கு

 இம்மூன்றில், எம்.ஜி.ஆரோடு வைஜயந்திமாலா இணைந்து நடித்த, பாக்தாத் திருடன் பெரும் வெற்றியைப் பெற்றது.

 கவியரசர் கண்ணதாசனின் கதை, வசனம், பாடல்களைத் தாங்கி, வெளிவந்தமன்னாதி மன்னன்முதலில் பரபரப்பான வெற்றியை எட்ட இயலாத நிலையில் இருந்து, பின்னர் யாரும் எதிர்பாராத வெறியை ஈட்டியது. ன்றளவும் இப்படம் மக்களால் பெரிதும் வரவேற்கப்படும் வெற்றிப்படமாகவே திகழ்கிறது.

 கவியரசர் வசனத்தில், எம்.ஜி.ஆர். பானுமதி, பத்மினி, கலைவாணர், டி.. மதுரம் போன்றோர் நடித்து, மதுரை வீரனைத் தயாரித்த லேனா செட்டியார் தயாரிப்பில், டி.ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளியானராஜாதேசிங்கு’, இஸ்லாமியக் கோட்பாடுகளில் சில சிக்ல்களால் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

 இதன்பின்னர், ஜீபிடர் பிக்சர்ஸ் வெளியீடானஅரசினங்குமரி’: .எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் வெளியிட்ட, கண்ணதாசன் வசனத்தில் வெளிவந்ததிருடாதே’; தேவர் பிலிம்ஸ் வெளியீடானதாய் சொல்லைத் தட்டாதே’, ‘குடும்பத் தலைவன்ஆகிய படங்களெல்லாம் மக்களால் வர்வேற்கப்பட்ட மகோன்னத வெற்றிப்படங்களாய்த் திகழ்ந்தன. எம்.ஜி.ஆரின் புகழ்க்கொடியை ஏந்திப் பறக்க வைத்தன.

 இன்னும் நம் இனிய கவிஞர் சொன்ன இதயம் கவர்ந்த கருந்துகள் ஒன்றிரண்டைக் காண்போமே! அவை நல்கும் ஒப்பற்ற செய்திகளை அறிவோமே!

 1955 – 56 – ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பெற்றராணி லலிதாங்கிதிரைப்படத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடிக்கத் தொடங்கினார். தஞ்சை இராமையதாஸின் வசனம் பாடல்கள் இடம்பெற்ற இப்படத்தில், எம்.ஜி.ஆரின் இயக்கக் கொள்கைகளுக்கு மாறுபட்ட கதையமைப்பும், பாடல் காட்சிகளும் இடம்பெறத் தொடங்கின.

ஆண்டவனே இல்லையே!
 தில்லையம்பல நடராஜனைப்போல்
 ஆண்டவனே இல்லையே!’

என்ற பாடல் காட்சியில், நடிக்க இயலாது என்று எம்.ஜி.ஆர் சொல்லியும், தயாரிப்பாளர் சார்பில் விட்டுக்கொடுக்காத நிலை உருவாகியது.

 உடனே, எம்.ஜி.ஆர். தான் நடித்த காட்சிகளுக்கான செலவனைத்தையும் தந்துவிட்டு, படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டார். பின்னர் சிவாஜிகணேசன், பானுமதியோடு இணைந்து நடித்து, அப்படம் 1957 – ஆம் ஆண்டு வெளியானது.

 ஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில், டி.ஆர். ராமண்ணா தொடங்கியகாத்தவராயன்படத்தில், கட்சிக்கோட்பாடுகளைக் கருத்தில் கொண்டு, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடிக்க மறுத்துவிட்டார். இது போன்று, கட்சிக் கொள்கைகளுக்காக எம்.ஜி.ஆர் பல இலட்சங்களை இழந்தார். ஆனாலும் பல இலட்சம் இளைஞர்களின் இதயங்களை எம்ழஜி.ஆர், பரிசாகப் பெற்றுத் திகழ்ந்தார் என்பது மட்டும் அன்றே பெருமைக்குரிய செய்தியாகத் திகழ்ந்தது.

 புரட்சி நடிகர் தன்னுடைய கோட்பாடுகளில் இருந்து, மாறுபட்ட காட்சிகள் அமைந்து, திரைப்படம் தயாரிப்பவர்களின் மடங்களில் என்றுமே நடித்ததில்லை. 1967, 68 – ஆம் ஆண்டுகளில், அன்றைய பிரபல இயக்குநர் ஸ்ரீதர், தயாரித்து இயக்கியஅன்று சிந்திய ரத்தம்என்ற தலைப்பிலான படத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. எம்.ஜி.ஆரின் கொள்கை கோட்பாடுகளுக்கு, மாறுபட்ட ஓரிரு காட்சிகள் படத்தில் உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றில் எம்.ஜி.ஆர். நடிக்க மறுத்து, ஸ்ரீதரிடம் வாங்கிய தொகையைக் கொடுத்துவிட்டு வந்தார்.

 அதன்பின்னர், அந்தப் படம் சிவாஜி நடித்துசிவந்த மண்என்ற பெயரில் வெளியானது. ‘அன்று சிந்திய ரத்தம்என்ற தலைப்பு ஜெய்சங்கர் நடித்த வேறொரு படத்தின் பெயராகிப்போனது.

 காலவோட்டத்தில் மீண்டும் ஸ்ரீதர், தனக்கு ஏற்பட்ட சோதனையான காலகட்டத்தில், புரட்சி நடிகரைப் பார்த்து உரையாடி, ‘உரிமைக்குரல்’, என்ற படத்தைத் தயாரித்து, வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

 இவற்றையெல்லாம் இங்கே குறிப்பிடக் காரணம்: கண்ணதாசன், எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் மனிதசக்தியைப் பார்த்து, கணித்துச் சொன்ன கருத்துகள் எனல்லாம் உண்மைகளாய், என்றும் உயர்ந்து நின்றன என்பதனை அனைவரது உள்ளங்களிலும் பதியவைத்திட வேண்டும் என்பதற்காகவே.

 இன்னும், எம்.ஜி.ஆர். நடிகர் சங்கத் தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளை வகித்தபோதும்; பதவிகளில் இல்லாத போதும், சங்கத்திற்காக ஆற்றிய பணிகள் சரித்திர சாதனைகள் படைத்தனவே. அவரது பணிகளை நடிகர் உலகமே நன்கறியும், அவரது அரும்பணிகளின் அடியொற்றி, இன்றைய சங்கத்தலைவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நடிகர்கள் பட்டாளத்தை ஓரணியில் திரட்டி, நடிகர் சங்கத்தையமு, கட்டடத்தையும் கடனில் இருந்து மீட்டுள்ள சாதனையை எம்.ஜி.ஆர். சார்பில் பாராட்டி மகிழ்வோமாக.

 ‘நடிகன் குரல்என்ற மாத இதழை, வித்துவான், வே. இலட்சுமணனைச் சிறப்பாசிரியராக நியமித்து, பல்லாண்டுகள் எம்.ஜி.ஆர் சிறப்புற நடத்தி வந்த சாதனையையும் யாரும் மறந்திட இயலாது.

 தி.மு.கழகத் தலைவர்களும் எம்.ஜி.ஆரிடம் கொண்டிருந்த பற்றும், பாசமும், மதிப்பும் போற்றுதற்குரியனவே. அறிஞர் அண்ணாவே, ‘எனது இதயக்கனி எம்.ஜி.ஆர்என்று புகழ்ந்து கூறினார் எனில், இதனைவிட வேறு சான்று என்ன வேண்டியுள்ளது.

 ‘எம்.ஜி.ஆர். நமது வீட்டுப் பிள்ளைகளில் ஒருவர்!’ என்று, 1956 – ஆம் ஆண்டில், கண்ணதாசன் கூறினார். நாட்டு மக்களோ, 1965 – ஆம் ஆண்டில் இருந்தே, ‘எங்க வீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆர்!; எங்க வீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆர்என்றே போற்றிப் புகழ்ந்தார்கள். இன்றும் புகழ்கிறார்கள்! இன்னும் புகழ்வார்கள்! இது நிச்சயம்.

 ‘எம்.ஜி.ஆர். புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது!’ என்று கண்ணதாசன் 1956 – ஆம் ஆண்டில் வாழ்த்தி எழுதினார்.

 அந்த வாழ்த்தை, நாற்பத்தேழு ஆண்டுகள் கழித்து, நாம் நினைக்கும்போது நம் நெஞ்சங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?

 ‘எம்.ஜி.ஆரி புகழில் நாம் பெருமைப்படப் பெரிதும், பெரிதும் நியாயங்கள் இருக்கின்றன!’ என்றல்லவா சொல்லத் தோன்றுகின்றன.

 கவியரசர் எண்ணங்களில் எழுந்த வாக்குகள், புவியரசராய்த் திகழ்ந்த எம்.ஜி.ஆர். என்ற மாமனிதர் வாழ்வில் என்றும் பலித்தன என்பதனை அவரது திரையிசைப் பாடல்கள் மூலமும் பார்ப்போமாக.

 அதற்கும் முன்னால், ‘வாக்குப் பலிதம்என்றால் என்ன? என்பதனையும் சற்றே பார்த்துச் செல்வோமாக.
வாக்குப்பலிதம் என்றால்?!….

 கணிப்பொறி யுகத்தில், இணைய தளத்தில் உலகினையே வீட்டுக்குள்ளே உட்கார்ந்துகொண்டு வரவழைக்கும் காலத்தில் வாக்காவது? பலிதமாவது? என்று பகுத்தறிவு படைத்த பலரும்ஏன்? சில ஆன்மீகவாதிகளும்கூட யோசிக்கலாம்!

 ஆனால், நம்மையெல்லாம் விஞ்சி, சில அதிசயங்கள் நடக்கின்றனவே! என்று ஒருவர், மற்றொருவரை எச்சரிப்பார்! அது நடந்து விடுகிறது.

 ‘அந்த ஜோதிடர் சொன்னால், அப்படியே நடக்கும்!’

 ‘இந்த டாக்டர் கைராசிக்காரர்; கை தொட்டுப் பார்த்தாலே நோய் உடனே குணமாயிடும்!’

 ‘காலையிலே அந்த அம்மா எதிரிலே வந்தாங்கலட்சுமிதேவியே வந்த மாதிரிஇன்னக்கி எல்லாக் காரியமும் நல்லபடியா முடிஞ்சது!’

 இவை போன்ற பேச்சுகளையும், நாம் நாளும் நம் வாழ்க்கையில் கேட்கத்தானே செய்கிறோம்.

 இவற்றைத்தான் வாக்குப்பலிதம், யோகம் என்றெல்லாம் சொல்லுகிறோம்.

 கவியரசர் கண்ணதாசனின் உதவியாளராகவும், ‘தமிழரசுஅரசு மாத இதழில் பணியாற்றியவருமான புலவர் தமிழ்ப்பித்தன் எழுதியபாட்டுக்குயில் கண்ணதாசன்என்ற நூலில் இருந்து, இது குறித்து அவர் கூறியுள்ள கருத்துகளைச் சுருங்கக் காண்போம்!

 ‘செந்தாமரைஎனும் படத்தில் அவர் பாடும் பாடலொன்றை எழுதும் பொறுப்பு கவிஞரிடம் ஒபடைக்கப்பட்டது.

 கவிஞரும், கதையமைப்பிற்குப் பொருந்துமாறு, புது உத்தியைக் கையாண்டு,

பாடமாட்டேன்நான் பாடமாட்டேன்!”

என்று தொடங்கி,

பாவலர் செய்த தமிழ்க் கலைப்பாட்டன்றி
 வேறு எதையும்பாடமாட்டேன்!”

என்று, பாட்டைத் தொடர்ந்து எழுதினார்.

 பகுத்தறிவில் வளர்ந்த கே.ஆர். ராமசாமியும் இப்பாடலை நன்றாகவே பாடினார். பல்லாண்டுகள் கடந்தே படமும் வெளிவந்தது.

 ஆனால், எப்படியோஒரு மோசமான சூழ்நிலை, வளமான கே.ஆர். ராமசாமியின் குரல், பாடலைப் பாடும் நிலையிலிருந்து மாறிவிட்டது.

 அப்போது அவர் நடித்து வந்தஅவன் அமரன்என்னும் படத்தில் அவர் பாடவேண்டிய பாடலை சீர்காழி கோவிந்தரஜனே பாடவேண்டியதாயிற்று.

 வளமான குரல் வளத்துடன் பாடி நடித்த கே.ஆர். ஆர். பாட்டுக்கு வாயசைக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்.

 இங்கேதான்,

பாடமாட்டேன்நான்
 பாடமாட்டேன்!”

என்ற பாடல் சொற்கள் அறம் விழுந்த சொற்களோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.

 கவிஞரின் வாக்கு, பலிதமாகி விட்டதோ என்ற நினைப்பையும் தோறுறுவிக்கிறது.

 இந்த உண்மையை உணர்ந்த கவிஞரும், இதன்பின்னர் அறம் விழும் சொற்களைத் திவிர்த்தே பாடல்களை எச்சரிக்கையாக எழுதினார்.

 இருப்பினும் அவரையும் அறியாமல்,

விடியும் விடியும் என்றிருந்தோம்அது
 முடியும் பொழுதாய் விடிந்ததடா!”

என்று, ‘சிவகெங்கைச் சீமைபடத்திற்காக, பாடல் ஒன்றை எழுதினார்.

 படமும் தோல்வி கண்டதோடு, ‘கண்ணதாசன் புரசடெக்சன்ஸ்என்ற நிறுவனமும் கலைக்கப் பெற்றது.

 இங்கு கவிஞரின் வாக்கே, கவிஞருக்குக் கஷ்டங்களைத் தந்துவிட்டது.”

 இதுவரை, தமிழ்ப்பித்தன் குறிப்பிட்ட வாக்குப்பலிதங்களைப் பார்த்தோம்.

 திரைப்படவுலகில் கொடிகட்டிப் பறந்த டி.ஆர்.மகாலிங்கம், நடிப்பதற்குப் படங்களின்றி நலிந்த நிலையில் இருந்தார்.

 அப்போதுதான் கண்ணதாசன்,

எங்கள் திராவிடப் பொன்னாடே!”

 “செந்தமிழ்த் தேன்மொழியாள்!”

போன்ற பாடல்களை எழுதி, தனதுமாலையிட்ட மங்கைதிரைப்படத்தில், டி.ஆர். மகாலிங்கம் பாடி, நடித்திடும் வாய்ப்பினை நல்கினார்.

 அதன் பின்னர் டி.ஆர். மகாலிகத்தைத் தேடி, ஒப்பந்தம் செய்திடப் படத் தயாரிப்பாளர்கள் படையெடுத்தார்கள்.

 கவிஞரின் மங்கள வார்த்தைகள், மகாலிங்கத்திற்கு மறுவாழ்வைப் பெற்றுத்தந்தது.

 ‘வானம்பாடி’ – இது கவிஞர் தயாரித்த இனிமையான பாடல்கள் நிறைந்த வெற்றிச்சித்திரம். இதில் கதாநாயகன் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். பாடுவது போன்ற பாடல் காட்சிக்காக ஒரு பாடல்.

 பாடலைக் கவிஞர்,

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்அவன்
 காதலித்து வேதனையில் சாகவேண்டும்!”

என்ற பல்லவியுடன் எழுதியிருந்தார்.

 பாடலைப் பாடவந்த டி.எம். சௌந்தரராஜன், ‘கடவுள் சாகவேண்டும்!’ என்ற பல்லவியைப் பார்த்து பயந்து, ‘நான் பாடமாட்டேனுங்க!’ என்று சொல்லிவிட்டார்.

 அவர் மறுப்பு, கவிஞருக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது என்றாலும், வார்த்தைகளை வாரி வழங்கும் மன்னர், பாடகரின் உணர்வுக்கு மதிப்புத் தந்து.

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்அவன்
 காதலித்து வேதனையில் வாட வேண்டும்!”

என்று, பல்லவியை மறுவிநாடியே மாற்றித் தந்தார்.

 இன்றுவரை, கவிஞரின் திறமைக்கும், இசையமைத்த் கே.வி. மகாதேவனின் பெருமைக்கும், டி.எம். சௌந்தரராஜனின் கடவுள் பக்திக்கும் ஏற்றங்கள் தரும் பாடலாகவே இப்பாடல் திகழ்கிறது.

 ‘வானம்பாடிபாடல் பற்றிய விசயம் தமிழ்ப்பித்தனால் குறிப்பிடப்பட்டதாகும்.

 இப்படிவானம்பாடிபடத்தில் பாட மறுத்த டி.எம்.எஸ் மன்சூர் கிரியேசன்ஸ் தயாரித்தஒருதலை ராகம்படத்தில்,

என் கதை முடியும் நேரமிது!”

 “நான் ஒரு ராசியில்லா ராஜா!”

 இவ்வாறு தொடங்கும் இரண்டு பாடல்களையும் பாடி, உச்சத்தில் இருந்த தனது பின்னணி பாடும் நிலையை, மிகவும் பின்னுக்கு தள்ளிக் கொண்ட கதையையும், தனக்குத்தானே வாக்குப் பலிதம் செய்துகொண்டதாகத்தானே கூறவேண்டும்.


 இப்போது வாக்குப்பலிதங்களை, நமது இதயங்கள் ஓரளவு ஏற்றுக்கொள்ளும் அல்லவா?







No comments:

Post a Comment