ஈப்போவிலிருந்து எனது நண்பர் அருள் அனுப்பி வைத்த பொன்மொழிகள் கீழே...
புற்கள் தாக்குபிடிக்கும் புயலில் புன்னைமரங்கள் வீழ்ந்துவிடுகின்றன. வெண்ணெயை உருக்கும் அதே கதிரவன் தான் களிமண்ணை இறுக்கவும் செய்கின்றது. அன்பாயிருங்க, அதுக்குனு அடிமையாயிடாதீங்க இரக்கம் காட்டுங்க, ஆனால் ஏமாந்திடாதீங்க. நீ திருந்து.. நாடே திருந்தும்… தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. அதிக உயரங்களை எட்டுவதற்கு உதவும் நண்பரைப் பெற்றிருப்பது சிறந்தது. ஆனால், அதிக உயரங்களிலிருந்து விழும்போது தாங்கிப் பிடிக்கும் நண்பரைப் பெற்றிருப்பது, கடவுளின் பரிசு. நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ அவரை நினைத்துக்கொள்வாய்! நீ துயரத்தில் இருக்கும்போது, உன்னை யார் விரும்புகிறாரோ அவரை நினைத்துக்கொள்வாய்! வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும். "நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்…" "நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது……." "உன் மனத்தின் உயரமே… உன் வாழ்க்கையின் உயரம்…" நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப் பிறந்திருக்கிறாய். ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத் தேடிக் கொண்டிருக்கிறாய்? இந்த உலகம் உன் வெற்றிக் கதையைப் படிக்கக் காத்துக்கொண்டிருக்கிறது. வெற்றி என்பது என்ன? உங்கள் கையொப்பம், ஆட்டோ கிராபாக அதுவே வெற்றி. வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்; தோல்விக்குப் பிறகு தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்! நண்பனை காணாவிடத்திலும், ஆசானை எவ்விடத்திலும், மனையாளை பஞ்சணையிலும், வேலையாளை வேலை முடிவிலும் போற்றுக. ஒன்றுக்குச் சான்றுகள் இல்லாமை என்பது அது இல்லாமைக்குச் சான்றில்லை "வலுவான விதியே! ஒரே ஒரு கோடைகாலம் எனக்கு அளி! மெலிதான கானங்கள் நிறைந்த ஒரே ஒரு வசந்தம் எனக்குக் கொடு அந்த கானங்களை நிரப்பிக் கொண்டபின் விருப்பத்தோடு என் இதயம் இறக்கத் தயார்” -ஃப்ரெட்ரிக் ஹோல்டர்வன் இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி கண்பார்த்து சிரிப்பவன் காரியவாதி கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன் கொடுக்கும்போது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன் முதியோர் சொல்லும் முதுநெல்லியும் ஒரே மாதிரி. முன்பு கசக்கும், பின்பு இனிக்கும். மனிதன் உணவின்றி 40 நாட்களும் நீரின்றி 3 நாட்களும் காற்றின்றி 3 நிமிடமும் உயிர் வாழலாம். ஆனால் நம்பிக்கையின்றி 3 நொடிகூட வாழ இயலாது. குழந்தையின் மழலை, பைத்தியக்காரனின் பிதற்றல், மகானின் பொன்மொழி இவற்றுக்கெல்லாம் பொதுவான ஒரு தன்மையுண்டு; இலகுவாகப் புரியாது. சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை. அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும். அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை! நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால் உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்! அந்தக் கண்ணீர் உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்! அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்! இளைஞனே! ஓடுகின்ற கால்கள் ஓய்வெடுக்கும் போது நீ எடுத்துக்கொண்ட பயணம் முடிந்திருக்க வேண்டும்! வாழ்ந்த நாட்களை திரும்பிப் பார்க்கும் போது உன் பெயரை சிலர் உச்சரிக்க வேண்டும்! கோபுரங்களின் அழகை அஸ்திவாரங்கள் தாங்குவது போல் நீ பிறந்ததின் பயனை ஊரறியச் செய் - யாரோ ஏதாவது ஒரு தரப்பில் சேருங்கள். நடுநிலைமை வகிப்பது அக்கிரமக்காரனுக்குத்தான் உதவியாக இருக்கும். அக்கிரமத்துக்கு உள்ளாகிறவனுக்கு உதவாது. மௌனம் சாதிப்பது கொடியவனுக்கே ஊக்கம் அளிக்கும். கொடுமைக்கு உள்ளாகிறவனுக்கு ஊக்கமளிக்காது |
No comments:
Post a Comment