எஞ்ஜியோகிராம் . . . என்பது ஒருவித ஐயோடின் கலந்த திரவத்தை இருதயத்துக்கு அனுப்பி அங்குள்ள ரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்களை கவனிப்பதென்பதாகும். வழக்கமாக கால்களின் தொடைப்பகுதியின் மேல் ப்பக்கமாக இவ்வித திரவம் செலுத்தப்படும். சில சமயங்களில் கைகளிலும் செய்வதுண்டு.
வட்ட வடிவமான அந்தக்கருவி நம் இருதயத்தின் மேல் நின்று உட்செலுத்தப்பட்ட அத்திரவம் செல்லுகின்ற பாதையினை கண்டறிந்து நமக்கு அங்கிருக்கும் சிறப்பு மோனிட்டர்கள் வழி காட்டும்.
இருதயத்தில் இருக்கும் ரத்த நாளங்களில் ஐயோடின் திரவம் போகாத போது அது அடைப்பு எனக்கொள்ள வேண்டும்.
பொதுவாக இது ஆபதில்லாதது என டாக்டர்கள் சொன்னாலும் அவ்வப்போது ( எப்போதும் அல்ல ) எஞ்சியோக்ராம் செய்யும் மேஜையிலேயே உயிர் போவதும் நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான்.
இந்த முறையினால் இரத்த ஒட்டத்தின் தடைகளை துள்ளியமாக தெரிந்து கொண்ட பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு மருத்துவர்கள் தங்களின் நோயாளிகளை தயார் படுத்துகின்றனர்.
பொதுவாக 'பைபாஸ்' எனப்படும் அறுவை சிகிச்சைக்கு முன்னர் செய்யப்படும் சோதனையே இது.
No comments:
Post a Comment