Wednesday, 30 May 2012

இயற்கை. . .


இயற்கையோடு ஒன்றித்து வாழ்தல் உடளுக்கும் உள்ளத்துக்கும் நாம் செய்யும் மாபெரும் தொண்டாகும்....

ஃபேஸ் புக் என்னும் முகநூல் . . .

இன்றைய நவீன காலத்தில் பல பெற்றோர்களுக்கு கம்ப்யூட்டரின் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லை.

வசதி இருந்தால்தான் கம்ப்யூட்டர் வாங்க முடியும் என்கின்ற காலம் போய்விட்ட பின்பு கூட பலர் தங்கள் வீடுகளில் கம்ப்யூட்டரினை அறிமுகப்படுத்த தயாராக இல்லை. 

தப்பான, தவறான பல அதில் இருப்பதால் பிள்ளைகள் கெட்டுவிடுவர் என்கின்றனர். இது ஒருவகையில் உண்மையே...

அதிலும் ஃபேஸ்புக் என்னும் முகநூல் மேல் மோகம் வந்த பின் பிள்ளைகள் கெட்டுத்தான் போகிறார்கள். பாடங்களில் இருக்கும் கவனம் சிதறுண்டு போவது வெளிப்படையாக தெரிகிற ஒன்றுதான். பள்ளி மாணவர்களுக்கு முகநூல் எவ்விதத்திலும் உபயோகம் இல்லை.

பதினெட்டு வயதுக்கு மேல் என குறிப்பிட்டிருந்தும் ஏனோ இளம் வயதுக் குழந்தைகளும் பொய்யான பிறந்த தேதியிட்டு அங்கு சென்று ஆட்டம் போடுவது சாதரணமாக நடந்து கொண்டிருக்கிறது இப்போது. எண்ணிலடங்கா ஒன்லைன் விளையாட்டுக்கள் அங்கிருப்பதால், அதிக நேரத்தை அங்கே செலவிடுகிறார்கள். இது பின்பு ஒருவித வெறியாகிறது.  இவர்களை மேற்பார்வையிட வீட்டில் சரியான ஆள் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

 ஏன் 21வது வயதில் சாவியினை பரிசாக கொடுக்கிறோம்? காரணம் அன்றுதான் இளைஞர்கள் முறையாக  சிந்திக்கத் தொடங்குகிறார்கள் என்னும் கருத்தினை எல்லோரும் ஏற்றுக் கொள்வதனால்தான்.

ஆயினும் முகநூலின் வயதுக் கட்டுப்பாட்டை குழந்தைகள் மீற பெரியவர்களே சில சமயங்களில் அனுமதிக்கிறோம். அப்புறம் எப்படி பிள்ளைகளை குறை சொல்ல முடியும்,  சரிவர கல்வியில் அவர்களுக்கு  நாட்டம் இல்லாத போது??

முன் பின் அறிமுகமில்லாதவர்களோடு பழக்கம், அதனால் ஏற்படும் அனாவசிய பிரச்சினைகள், வயதுக்குமீறிய எண்ணங்கள், வரம்பு மீறும் வார்த்தைகள், ஆபாசப் படங்கள், பேங்க் சேமிப்பின் எண்கள், வீட்டு முகவரி போன்ற அபாயகரமான தகவல் பரிமாற்றம்... இப்படி எதுவுமே சரியில்லை.

பெற்றோர்களின் ஞாயமான கவலைகள் இவை. கட்டிக்காக்கும் குடும்ப கௌரவம் என்னவாகும் என்று பெற்றோர் கேட்பது விளங்குகிறது.

இதற்கு ஒரே தீர்வு, பதினெட்டு வயதிற்கு குறைந்தவர்கள் முகநூலில் இருந்து தவிர்க்கப்படவேண்டும். பக்குவமில்லா அவர்களின் கம்ப்யூட்டர் நேரத்தை பெற்றோர்களும் ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும். சில இடங்களில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் முக நூலில் உலா வருவதை ஆதரிக்கின்றனர். இது சரியல்ல. 21 வயதுக்குப் பின் அவர்களுக்கு நிறைய நேரமுண்டு இது போன்ற வற்றை எண்ணிப்பார்க்க.

எஸ்பிஎம் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே இவர்களின் கவனத்தில் இருக்கவேண்டுமே அன்றி, வேறு எதுவும் நல்ல நிலைக்கு இட்டுச் செல்லாது  எனபதனை அவர்கள் உணரச்செய்யவேண்டும்.

சொல்லத் தெரிய வேண்டுமே. . .

அனைத்துலக பள்ளியில் ஒரு அதிகாரியாக பணியாற்றிய போது ஒரு நாள்,மாணவன் ஒருவனோடு அவனின் பெற்றோர் எங்கள் பள்ளியின் 'கவுன்சலிங்' ஆசிரியரை சந்திக்க வந்திருந்தனர்.


பிரச்சினையான மாணவர்களுக்கு புத்திமதி சொல்லி நல்வழி திருத்துவது இந்த கவுன்சலிங் ஆசிரியர்களின் கடமையாகும். எல்லோரும் திருந்தி விடுவார்கள் என சொல்ல முடியாவிட்டாலும், ஏதோ ஒன்றிரண்டு பேர் சில முன்னேற்றகரமான மாறுதல்களை காட்டினால் போதும் என்னும் நிலை அப்போது. 


"இவன் படிப்பை பாதியிலேயே விடப் போகிறானாம், அடம் பிடிக்கிறான். உங்கள் உதவி நாடி வந்திருக்கிறோம்" என்றார் மாணவனின் தந்தை.

பொறுப்பாசிரியர் பையனைப்பார்த்தார்.

பக்கத்திலிருந்த ஒரு பிரத்தியேகமான அறைக்கு அவர்களை அழத்துச்சென்றார். அங்குதான் வீடியோ கருவியும் பள்ளிப்பிள்ளைகளுக்கான போட்டி விளையாட்டு டேப்புகளும் இருக்கும். அவர்களுக்கு தன்முனைப்புத் தூண்டல் பயிற்சிக்காக அவற்றை ஆசிரியர்கள் பயண்படுத்துவர்.


ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் கேசட் ஒன்றை எடுத்தார் ஆசிரியர். அதை வீடியோவில் உள்தள்ளியவாறு,

"தம்பி, இந்த பந்தயத்தைப் பார்" என்றார் அம்மாணவனைப் பார்த்து.

 நெடுந்தூர ஓட்டப் பந்தயம் அது.

"தம்பி, இந்தப் போட்டியில் எத்தனைப்பேர் கலந்து கொள்கிறார்கள்?"

"15 பேர்"

'எத்தனைப்பேருக்கு பரிசு கிடைக்கும்?"

'ஒருவருக்கு மட்டுமே."

 நால்வரும் அந்தப் பந்தயத்தைப் பார்த்தார்கள். மாணவன் சொன்னதுபோல ஒருவர் மட்டுமே போட்டியை வென்றார்.

"தம்பி, ஒன்றைக் கவனித்தாயா? வெற்றிபெற மாட்டோம் எனத் தெரிந்திருந்தாலும் மற்றவர்கள் ஓடுவதை நிறுத்தவில்லை, கடைசிக் கோடுவரை வந்திருக்கிறார்கள் பார்...."

மாணவன் சற்று நேரம் அதை பார்த்தவாறு நின்றான். பின்பு தனது பெற்றோரிடம் ஏதோ சைகை காட்ட, அவர்களும் ஆசிரியரின் கைகளை குலுக்கிவிட்டு விடைபெற்றனர்.

ஒருவருடம் சென்றபின் தற்செயலாக அவனைப் பார்த்துவிட, அவனுடைய தற்போதைய மதிப்பெண்களைப் பார்க்க அவனுடைய வகுப்பின் பதிவினைத் தேடினேன்.

முதல் நிலைக்கு வராவிட்டாலும் முன்பை விட இப்போது முன்னேற்றம் தெரிந்தது.

மாணவர்கள் கேட்கும்விதம் சொன்னால் கேட்டுக் கொள்கிறார்கள்தான்.

அவன் மட்டும் அன்று அடம் பிடித்து "இனி மாட்டேன் " என பள்ளியிலிருந்து விலகி இருந்தால் இன் நேரம் அவன் நிலை???

எண்ணிப்பார்க்க ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.

எஞ்ஜியோகிராம் . . .



எஞ்ஜியோகிராம் . . .  என்பது ஒருவித ஐயோடின் கலந்த திரவத்தை இருதயத்துக்கு அனுப்பி அங்குள்ள ரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்களை கவனிப்பதென்பதாகும். வழக்கமாக கால்களின் தொடைப்பகுதியின் மேல் ப்பக்கமாக இவ்வித திரவம் செலுத்தப்படும். சில சமயங்களில் கைகளிலும் செய்வதுண்டு.

வட்ட வடிவமான அந்தக்கருவி நம் இருதயத்தின் மேல் நின்று உட்செலுத்தப்பட்ட அத்திரவம் செல்லுகின்ற பாதையினை கண்டறிந்து நமக்கு அங்கிருக்கும் சிறப்பு மோனிட்டர்கள் வழி காட்டும்.

இருதயத்தில் இருக்கும் ரத்த நாளங்களில் ஐயோடின் திரவம் போகாத போது அது அடைப்பு எனக்கொள்ள வேண்டும்.

பொதுவாக இது ஆபதில்லாதது என டாக்டர்கள் சொன்னாலும் அவ்வப்போது ( எப்போதும் அல்ல ) எஞ்சியோக்ராம் செய்யும் மேஜையிலேயே உயிர் போவதும் நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான்.

இந்த முறையினால் இரத்த ஒட்டத்தின் தடைகளை துள்ளியமாக தெரிந்து கொண்ட பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு மருத்துவர்கள் தங்களின் நோயாளிகளை தயார் படுத்துகின்றனர்.

பொதுவாக 'பைபாஸ்' எனப்படும் அறுவை சிகிச்சைக்கு முன்னர் செய்யப்படும் சோதனையே இது.


வாழ்க்கை ரொம்பவும் விசித்திரமானது.


மழலையாக தொடங்கும் வாழ்வினில் 
மனிதன் மகிழ்வாகவே இருக்கிறான். 
தன்மீது திணிக்கப் படும் 
பல்வேறு எதிர்பார்ப்புகளால் 
பிறகு அவன் நிலை தடுமாறுகிறான். 
தோல்வியில் துவண்டிடும் அவன் 
எண்ணுதற்கறியா குற்றங்கள் புரிந்திட 
மிருகங்களுக்கு ஒப்பாகிறான். 
காலம் காட்டிடும் 
கருணையின் விளைவாக 
நல்வழி திரும்புகிறான். 
திருந்திடும் அவனை 
வாழ்த்திட ஆயிரம் பேர்.....


ஏதோ ஒரு திரைப்படக் கதை போல தெரிகிறது, இல்லையா?
நன்றாக யோசித்திடும் போது, பலரின் வாழ்விலும் இது போல ஏற்ற இறக்கங்கள் இருந்திடக் காணலாம். உடல் வலுவிழந்திடும் நேரம் ''வாய்ச்சவடால்'' வல்லவனும், நல்லவனாகிறான். வந்திடும் விதி நல்லதாய் இருந்திட வேண்டுகிறான்.
பலருக்கும் ஏமாற்றம் தராத முடிவு சிலருக்கு கொடூரமாக அமைந்து, மற்றவருக்கு படிப்பினையைத் தந்துவிடுகிறது.

திரு பாலா, கோலசிலாங்கூர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்....


ஆரோக்கியமாய் இருக்க வேண்டுமானால், இயல்பாய், இனிமையாய் நம்மோடு பழகுபவர்களாக நண்பர்களும் உறவினரும் இருப்பது அவசியம். இது உளவியல் நிபுணர்கள் கூற்று.
சற்றும் இடைவெளி விடாது, நகைச்சுவை வெடிகளை அள்ளித்தெளித்த ஒரு அன்பான குடும்பம் நட்புக்கு நட்பாகவும், உறவுக்கு உறவாகவும் அமைந்தது பற்றி இங்கு குறிப்பிடுவதில் பெருமைப் படுகிறேன்.
சனி மாலை எங்கள் இல்லம் வந்திருந்து குடும்பத்துடன் சிரிப்பையும் சிந்தனையையும் பகிர்ந்து கொண்ட திரு. திருமதிBalakrishnan Raman & Anggammah Vythianathan ஆகியோர்.


வக்காய்...








காய்கறிகளில் அதிகம் கேள்விப்படாத ஒன்று இந்த கோவக்காய். 
இணையதளங்களில் தேடிப்பார்த்திட பல நன்மைகளை பட்டியலிட்டிருக்கிறார்கள்.
- நீரிழிவு நோயை கட்டுப் படுத்துகிறது
- கண்களுக்கு நல்லது
- இரத்தத்தில் சேரும் நச்சுக்களை அகற்ற உதவுகிறது
இப்படி பட்டியல் நீளுகிறது.
உடலுக்கு ஒருவித பாதுகாப்பாகவும், நல்ல சுவையாகவும் இருப்பதால், எங்கள் உணவில் இது இடம்பெற தொடங்கிவிட்டது.
நீங்களும் சமைத்து, ருசித்துப் பார்க்கலாமே.....

பாசம் என்பது பிறப்பினில்தானா. . .


"பார் மகளே பார் " என்றொரு தமிழ்ப்படம். சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்று.

வளர்ந்து பெரியவர்களாகும் இரு மகள்கள். அதில் ஒருவரே சொந்த மகள், மற்றவர் வளர்ப்பு மகளென தெரிய வருகிறது.

இதை மையமாக வைத்து ஒரு பாடல் ... "பார் மகளே பார்" என படத்தின் நடுவே வரும். தந்தையின் தவிப்பை உணர்த்தும் நல்லதொரு பாடல்.

ஆனால், இதே தலைப்பில் திரைப்படத்தின் தொடக்க இசையில் எம் எஸ் விஸ்வநாதன் "பார் மகளே பார்" என தலைப்புப் பாடலை பாடியிருப்பார். அந்தப்பாடலில்தான் தூய உறவினையும் பாசத்தினையும் விளக்கிச் சொல்லும் ஒரு வரி வரும்...

" வாசம் என்பது மலர்களில் தானா
  மனதினில் ஏன் இல்லை....
  பாசம் என்பது பிறப்பினில்தானா
  வளர்வதில் ஏன் இல்லை...?"



 

Mission : Impossible

mission impossible double...

In the late sixties and early seventies, there was one tv series called, MISSION : IMPOSSIBLE.  An american team of experts of seven  who were called IMPOSSIBLE MISSION FORCE ( IMF) was in action then.

This was a fantastic suspense thriller, shown week after week for seven years. This tv show attracted many, including me and made me glued to the tv set each time it was aired.

Unlike the movies where Tom Cruise has spoiled the theme 'as a one man show', the series then was of a strong bond between a few experts coming under the leadership of  Jim Phelps ( Peter Graves ).

And not only that, I started wondering how the 'face-offs' were done and the disguises were slotted in according to the scripts. Each episode was unique and on its own. The music, the suspenseful story and the plot by the leader to carry out the mission and the superb ending where the mission was accomplished in style. It was really a wonderful tv program that I enjoyed when I was young.

Still my all time favourite tv show, MISSION IMPOSSIBLE,  has given me the unique idea of creating the 'doubles', the theme of this blogspot....

Those who have not seen this before, don't worry. There are so many episodes available in 'you tube' now. See for yourself how this show was created and made everybody so crazy about it then. Im very sure you will like it too. 

























 

எண்ணங்கள் ஆயிரம் . . . "டபுள்ஸ்"

எண்பதுகளின்  'இரட்டைவேட'  படங்கள் சிலவற்றை இங்கே பதிவில் போட்டிருக்கிறேன். சுமார் 25 வருடங்களுக்கு முன் எடுத்தவை இவை.

பத்திரப்படுத்தி வைத்திருந்த பல புகைப்படங்களை நண்பர்கள் கேட்கிறார்கள் என்று கொடுத்துவிட்டதால் இப்போது அதுபோன்ற எதுவும்  கைவசம் இல்லை.

 அந்த நேரத்தில் டிஜிட்டல் பயண்பாடு இன்னும் அமுலுக்கு வரவில்லை. ஒருவித ரசாயனத்தில் கழுவி காய வைத்தே புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அதிகபட்சம் 36 படங்களை எடுக்கக்கூடிய பிலிம்களே அன்று நாங்கள் உபயோகித்தோம்.

இன்றைய நிலை மாறிவிட்டது. ஆயிரம் படங்களைக்கூட ஒரே ஒரு 'மெமரி' கார்ட்  வசதியுடன்  அதற்கான  தனி  மிசின்கள் மூலம் தயார் படுத்தி விடலாம். அதுவும் ஒரு சில நிமிடங்களில்.






Monday, 28 May 2012

Kelinik Arul 3

A very rare photo of Dr Arul...


Sunday, 27 May 2012

சிறந்த மருத்துவர் இவரே....


கிளினிக்குக்கு  வருபவர்கள் எல்லோருக்கும் ஒரே கவலை.

டாக்டர் அருள் இடம் மாற்றலாகிப் போவதை யாரும் மனப்பூர்வமாக எற்றுக்கொள்ளத் தயாராய் இல்லை. வெளிப்படையாகவே தங்களின் ஆதங்கத்தை காட்டுவதைக் கண்டேன்.

" இத்தனை வருஷம் என் உடல் நிலையைப் பற்றி நான் எண்ணிப்பார்த்ததே இல்லை. அதை எல்லாம் டாக்டரே பார்த்துக் கொள்வார். வரச்சொல்வார், வருவோம். மற்றது அவர் சொல்றது மாதிரிதான்.  இப்போ டாக்டர் வேறு இடத்துக்கு மாறிப்போவதை நினத்தால், மனதுக்கு கொஞ்சம் கஷ்ட்டமாத்தான் இருக்கு..." என பலரும் கூறுவதைக் கேட்கும் போது எனக்கும் ஒரு மாதிரித்தான் இருந்தது.

கடந்த பத்து வருடங்களாக வாரத்தில் நான்கைந்து நாட்கள் காலை உணவை 'கோப்பிதியாம்" கடையில் அவருடன் ஒன்றாக சாப்பிட்டு பழகி விட்டது. இனி எப்போதாவதுதான் அந்த சந்தர்ப்பம் கிடைக்கும். இதை நினைக்கையில் எனக்கும் வருத்தம் தான். இருக்காதா என்ன...  அவரை காலையில் சந்திப்பதற்கு முன் அன்றைய முக்கிய செய்திகளை இனையத்தில் தெரிந்து கொண்டுதான்  அவரோடு உணவருந்த வருவேன்.  நடப்பு விஷயங்கள் 'குட் மோர்னிங் மலேசியா' போல அலசி ஆரயப்படும் ஒவ்வொரு நாள் காலையிலும்.

இனி அந்த ஒரு மணி நேரத்திற்கு வேறு ஏதாவது செய்ய வேண்டியதுதான்.

 நோயாளிகளும் கவலை படுகிறார்கள், அவர்களை கிளினிக்குக்கு கூட்டிவரும் அவர்களது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் கவலைப் படுகிறார்கள்.

வேறு எங்கே இப்படி ஒரு இனிமையான சிரித்துக்கொண்டே இருக்கும் ஒரு டாக்டர் கிடைக்கப்போகிறார்...?

சிரிப்பே சிறந்த மருந்து என்பதை அனுபவத்தில் சொல்லிக்கொடுத்த டாக்டாராயிற்றே இந்த டாக்டர் அருள். அவரை சந்திக்க அறையினுள் நுழையும் நோயாளிகள் வெளிவே வரும்போது ஒருவித புன்னகையோடல்லவா வருவார்கள். இனி இதுபோல அவர்களை அக்கறையுடன் யார் கவனித்துக்கொள்ளப் போகிறார்கள்?
இதுவே பலரின் பிரதான கவலையாய் இருக்கிறது இப்போது.

இன்று காலையில் அவரை வைத்து 'டபுள்ஸ்" எடுத்த பின் வந்திருந்த நோயாளிகளுடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களின் பேச்சிலிருந்து டாக்டரை அவர்கள் ரொம்பவும்  'மிஸ்" பண்ணப்போகிறார்கள் எனப்பட்டது.

சீன, மலாய்க்கார மற்றும் இந்தியர்கள் என்கின்ற வேறுபாடு காட் டாதவர். நோயாளிகள் அனைவரும் ஒன்றுதான் இவருக்கு. அவர்களின் துண்பம் தீர்ப்பதே இவரது தலையாய கடமை.

இவரது நோயாளிகள் ஒவ்வொருவர் உடல் நிலையிலும் தனிப்பட்ட கவனம் காட்டுவார். மருத்துவ பரிசோதனைக்குப் பின் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  உடல் நலம் விசாரிப்பார்.

அவசரமாக வரும் சீரியஸான நோயாளிகளை உடனுக்குடன் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து அவர்களின் நோய்க்கான காரணங்களை கடிதம் வழி மருத்துவ மனை டாக்டர்களுக்கு தெரிவித்து உடனடி நிவாரணத்திற்கு வழி செய்வார். அவ்வப்போது அவர்கள் மேற்கொண்டு செய்ய வேண்டிய சிகிச்சை பற்றியும் அவர்களுக்கு விளக்குவார்.

'ஐ.ஜே.என்' எனப்படும் 'தேசிய இருதய மருத்துவ மனைக்கு' இவர் அனுப்பி வைக்கும் நோயாளிகள் நன்கு கவனித்துக் கொள்ளப்படுவர். காரணம் இவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது இவரோடு படித்த அல்லது இவரோடு ஆரம்ப காலங்களில் வேலை பார்த்த டாக்டர்கள் அங்கு நிறைய பேர் உண்டு.  அதனால், 'அருள் சொன்னா, அதுக்கு அப்பீல் கிடையாது'.( இப்படித்தான் சிலவருடங்கள் அவரோடு இருந்த பின் எனக்குப் பட்டது.)

 நோயாளிகள் என்றால் நோயாளிகள் என்றே பார்க்கும் குணம் கொண்டவர் டாக்டர் அருள். இதானால் இவருக்கு நண்பர்கள் வெகு சிலரே.

 நோயாளிகளோடு நட்பை வளர்த்துக்கொண்டால் அவர்களுக்கான சிகிச்சையில் தடங்கல்களும் இடையூறுகளும்  ஏற்பட்டு விடும் என்பார். நண்பராக ஒரு நோயாளியை பார்க்கத் தொடங்கும் போது அங்கு சிகிச்சை முழுமைபெறாது என்பார்.

இவரைப் பார்க்க வரும் இவருடைய உறவினர்களுக்கும் இதே நிலைதான். நோயாளி என்றால் வேறு சிறப்பு சிகிச்சையெல்லாம் இவரிடம் கிடையாது.

எனவே, இவருக்கு நண்பர்கள் மிகவும் சிலரே. அதிலும் பந்திங் வட்டாரத்தில் வேறு யாரும் இவருடைய நண்பர்களாக கிடையாது....அப்படி ஒரு தியாக மனப்பன்மை இவரிடம்.

Thursday, 24 May 2012

Kelinik Arul 1

அருள்: ஒரு டாக்டராகவும் நண்பராகவும்

1999ல் ஜூலை 17ல் எனக்கு மாரடைப்புக்கான அறிகுறிகள் தோன்றத்தொடங்கின. அடுத்த நாள் பந்திங் நகரில் 'ஸ்பெஷலிஸ்ட்' டாக்டர் ஒருவரின் கிளினிக்கிற்கு நான் அழைத்துச்செல்லப்பட்டேன்.

டாக்டர் அருள் என எனக்கு அறிமுகம் செய்யப்பட்ட அவர் பின்னாளில் எனக்கு ஒரு நெருங்கிய நண்பராவார் என்று அப்போது நான் எண்ணியதில்லை.

அன்றிலிருந்து இன்றுவரை அவர் எனக்கொரு நல்ல மருத்துவராகவும், உற்ற நண்பராகவும் விளங்கி வருகிறார்.

 'பேஷன்ட்' ஆக போய் 'பெஸ்ட் பிரென்ட்' ஆன நிகழ்வுகளே எனது மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றன.  காரணம், இம்மாதம் 31ம் தேதியோடு அவரது கிளினிக் மூடுவிழா காண்கிறது.

தொழிலில் குறையில்லை, அவர் தற்போது ஒரு  மருத்துவ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக முழு நேர  பொறுப்பில் அமரவிருக்கிறார். அவ்வளவே.

ஆயினும் இந்த 13 ஆண்டுகளில் நடந்தவற்றை மீண்டும் நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியத்தோடு ஒரு புன்னகையும் மலர்கின்றது.

 நான் நோய்வாய்ப் படுவதற்கு முன்பு வரை, மருத்துவமனையில் கொடுக்கப்படும் அடுத்த வருகைக்கான தேதிப்படி நாமே நினைவு வைத்து செல்லவேண்டும். ஆனால், டாக்டர் அருளின் வைத்தியச் சாலையில் நம்முடைய அடுத்த வருகையினை அவர்களே முறைப்படி நமக்கு நினைவூட்டுவார்கள்.

இது அப்போதைய கால கட்டத்தில் நடப்பில் இல்லாத ஒன்று. இதன் மூலம் கிளினிக் அருள் பல வகைகளில் ஏனைய தனியார் மருத்துவச் சாலையிலிருந்து மாறுபடத்தொடங்கியது.

 நோயாளிகளின் சிகிச்சை அட்டவனை தயாரிக்கப்பட்டுவிடும் இங்கு. அதன்படி, தேதி தவறாமல் எப்பொய்ன்ட்மென்ட் அழைப்புகள் அவர்களை நாடி வந்து விடும்.

அப்படி அழைப்புக்குப் பின் அழைப்பாக அவரிடம் சென்று சிகிச்சைப் பெற்று வந்தவர்களில்  நானும் ஒருவன்.

என்னுடைய நோயின் தாக்கம் அதிகரிக்க அப்போது எனக்கு அடுத்த கட்ட சிகிச்சை தேவைப்பட்டது.

தேசிய இருதய மருத்துவமனைக்கு டாக்டர் அருளின் உதவியால் அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கு டாக்டர் ஜஸ்வான்ட் சிங் மற்றும் சுரேன்டர் கவுர் ஆகிய இருவரின் சிகிச்சையின் மூலம் நலமடைந்து வழக்க நிலைக்கு திரும்பினேன்.

இந்த கால கட்டம் நான் உடல் நிலையில் மட்டுமல்ல, மன நிலையிலும் மிகவும் பாதிகப்பட்ட ஒரு சிறமமான காலமாகும்.

'உங்கள் நோயை நன்றாகத் தெரிந்து கொண்டால் அதிலிருந்து விடுபெற சுலபம் என்பார்.

 குலைவலி என்று பெரியவர்கள் சொன்ன கேஸ்ட்ரிக் வலியின் சூசகமான அறிகுறிகளும் ஏறக்குறைய இருதய நோய் போன்றே தோன்றுவதால், எதற்கான சிகிச்சையை எங்கு தேடிச்செல்ல வேண்டும் என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கும். அதை நிவர்த்தி செய்ய இரண்டினையும் நன்கு தெரிந்து கொள்ளவேண்டும் என்று அடிக்கடி சொல்வார்.

இது பின்னாளில் எனக்கு பெரிதும் உதவியது. இதுபோன்றே பல வித நோய்களைப்பற்றி இவரிடம் கலந்து பேசுவது சுவாரஸ்யமாகப்பட்டது.

அதுமட்டுமல்ல, என்னைச்சார்ந்த நோயால் அவதியுறும் நண்பர்களையும் உறவினர்களையும் இவரிடம் அழைத்துச்சென்று சிகிச்சையடையச்செய்து நலம் பெற உதவுவேன்.

காலப்போக்கில் இருவரும் நண்பர்களாகிவிட்டோம். காலை வணக்கம் சொல்லவேண்டிய நேரங்களில்,

" அட நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறீர்களே?" என்பார்...

அப்புறம் என்ன, இவரோடு பழகத்தொடங்கிவிட்ட கொஞ்ச நாட்களில் நோய் பயமும் போய்விட்டது.

 

Monday, 21 May 2012

பேயும் நாயும். . .

நாயின் கண்களுக்கு பேய் தெரியுமாம். அதிலும் கருப்பு நாய் என்றால் தெளிவாகத் தெரியுமாம், சொல்கிறார்கள்.
 
முதலில் பேய் உண்மையா இல்லையா என்றே தெரியாது.  இதில் நாயின் கண்களுக்கு பேய் தெரியும் என்றால் எப்படி நம்புவது?

நாயே வந்து சொன்னால் தான் உண்டு.

தற்சமையம் கார்டூன் நாய்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றன. நிஜ நாய்கள் எப்போது பேசத் தொடங்குகின்றனவோ அப்போது தெரியும் உண்மை.

அது சரி, "நாய் கண்களுக்கு பேய் தெரியும் போது, பேய்க்கு நாய் இருப்பது தெரியாதா?" என கேட்கிறார் என் நண்பர்.

ஊளை இடும் நாய்கள் பயத்தை தோற்றுவிப்பவை. அகால நேரங்களில் நாய்களின் ஓலம் கேட்க அச்சம் கொள்ளச்செய்யும் ஒன்றாக இருந்தது முன்பு. அதற்கு ஒரு காரணம் இருந்தது. 

 நான் தங்கி இருந்த பகுதியில் நாய் ஊளை இடும் போதெல்லாம் அடுத்த நாட்களில் ஏதாவது இறப்புச் செய்தி வரும். அருகாமையில் யாராவது இறந்திருப்பர். அது போன்ற நாட்களில் அக்கம் பக்கத்துக்காரர்கள் " நான் அப்போவே நினைச்சேன்... நாய் ஊளை இட்டுச்சே ராத்திரி...." என பேசிக்கொள்வார்கள். அந்தச் சிறு வயதில் அதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

எந்த நாய், எங்கே  ஊளை இட்டாலும் பேய் வருகிறது, எமன் வருகிறான் என்பது போன்ற கற்பனைகளே மனதை பயம் கொள்ளச் செய்யும்.

ஆனால், சில வருடங்களிலேயே இதைப்பற்றிய தெளிவு பிறந்துவிட்டது.
 நமக்கிருப்பதுபோல் அவற்றுக்கு கைபேசியோ, வேறு எந்த தொலைத் தொடர்பு சாதனங்களும் இல்லாதிருக்கும்போது, காவல் பணியில் இருக்கும் அவை ஒன்றோடொன்று தொடர்பு கொள்ள இப்படி ஒலி எழுப்பும் என்பது தெரிந்து விட்டது.

பேய் இருக்கிறதா இல்லையா என்பது எப்போதுமே ஒரு கேள்விக்குறியாக இருந்தாலும், இலக்கியத்திலும் பிணந்தின்னும் பேய் பற்றி சொல்லி இருக்கிறார்கள்.

"கேசும் படியோ ரிளங்கொடியாய் ஆசிலாய்
செய்தவ மில்லோர்க்குத் தேவர் வரங்கொடார்
பொய்யுரையே யன்று பொருளுரையே கையிற்
படுபிணந்தா வென்று பறித்தவள்கைக் கொண்டு
சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்கிருளிற் சென்றாங்
கிடுபிணந் தின்னு மிடாகினிப்பேய் வாங்கி
மடியகத் திட்டாள் மகவை இடியுண்ட"

பொருள் :
"பிறரைப் பழிக்கும் வடிவையுடையதொரு பெண் வடிவாய்த் தோன்றிப் பாடு கிடந்தாளை நோக்கி,  குற்றமற்றவளே,  செய்யப்பட்ட தவமுடைய ரல்லார்க்குத் தேவர் வரங்கொடார்,  இது பொய்யுரை அன்று மெய்யுரையே எனச் சொல்லி,  கையிலுள்ள குழவி இறந்த பிணத்தைப் பார்ப்பதற்குத் தாராயென்று, அவள் கையினின்றும் பறித்து, சுடுகாட்டுக் கோட்டத்தில்,  செறிந்த இருளிற் போய்,  அங்கே குழியிலிடும் பிணங்களைத் தின்னும்,  இடாகினிப் பேயானவள்,  அக் குழவியை வாங்கி வயிற்றிலே இட்டாள் "

 - - நான்மணிக்கடிகையில் வரும் பாட்டிது.

ஆங்கிலம். . .

இந்தியர்களும் சீனர்களும் மேல் நாட்டு 'அவுட் சார்ஸிங்' வேலைகளுக்கு போட்டியிட்டபோது அதிக சந்தர்ப்பம் இந்தியர்களுக்கே வழங்கப்பட்டதாம்.

ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின்  கீழ்  இருந்த காரணத்தாலேயோ என்னவோ இந்தியர்கள் பொதுவாகவே ஓரளவு ஆங்கிலம் பேசுகின்றனர்.

பல குடும்பங்கள் அமெரிக்காவிற்கு போவதையே குறி வைத்து செயல்படுவதால், அவர்களின் ஆங்கில வெறி ஏறுமுகமாகவே இருக்கின்றது.

ஆனால், சீனா இந்த மொழிப் பிரச்சினையை அழகாக கையாண்டது. ஆங்கில அறிவின் அனுகூலங்களை பட்டியலிட்டு மக்களுக்கு பலவிதங்களில் ஊக்கமளித்தது.

தொலைக்காட்சிகளில், தொலைபேசிகளில், பொது இடங்களில் என எல்லா இடங்களிலும் மக்கள் ஆங்கிலத்தில் மற்றவர்களோடு பேசிப் பழக பல வசதிகளைச் செய்து கொடுத்தது.

இதனால் இப்போது வெளி நாட்டு மூலதனங்களும் கூடிவிட்டன, மக்களுக்கும் தன்னம்பிக்கை அதிகமாகி விட்டது. ஆங்கிலம் கற்றுக்கொள்வது இன்னும் பெருகிவிட்டது. கல்வி நிலையங்களிம் அதிகமாகிவிட்டன. இயன்றவரை ஒருவரோடு ஒருவர் ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்கிறார்கள்.

கூச்சப்படுவோர் இதுபோன்ற ஆங்கில மையங்களில் சேர்ந்து தங்களின் உலகமொழித் திறனை வளர்த்துக்கொள்ளலாம்.

ஆங்கிலத்தில் அதிக ஆர்வம் காட்டுவதனால் அவர்களின் தாய்மொழி  உணர்வு மங்கிவிட்டதாக நினைக்கவேண்டாம். ஆங்கில மோகம் இரண்டாம் பட்சம் தான் அவர்களுக்கு. ஆனாலும் பாருங்கள் அதிலும் சோபிக்கத்தொடங்கிவிட்டனர் உலக அரங்கில்.

இன்டர்நெட் தொழில் நுட்பம் விரிவடைந்து வரும் இந்தக் காலத்தில் அனைத்துலக  தொடர்புக்கு ஆங்கிலமொழி  மிக மிக அவசியமான ஒன்றாகிவிட்டது.

ஆங்கிலம் பயில குறுக்கு வழிகள் ஏதும் கிடையாது. பலரும் பயணடைந்த சுலபமான சில வழிகள் இருக்கலாம். நமக்கு ஏதுவான ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்வது சிறப்பு.

 நல்ல தரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நமக்கு 'போர்' அடிக்காமல் அறிவைப் புகட்டலாம். செய்திகள் தற்சமையம் நடக்கும் நடப்புகளை சொல்லும் அதே நேரம் உங்களுக்கு பல முக்கியமான சொற்களையும் சொல்லித்தரலாம். 

குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது ஒரு ஆங்கில நாளிதழை வாங்கிப் படிப்பது நல்லது. இன்னும் இதற்கு தயாராகாதவர்கள், சிறுவர்களுக்கான ஆரம்ப நிலை பள்ளிப்புத்தகங்களிலிருந்தே தொடங்கலாம். வெட்கப்படத்தேவை இல்லை.

நான் எனது 24ம் வயதில் என்னுடைய பத்தாம் வகுப்பு புத்தகங்களை மீண்டும் படித்தது நினைவுக்கு வருகிறது இப்போது. இன்றைய சரளமான நிலைக்கு வருவதற்கு அதுவும் எனக்கு பெரும் உதவியாய் இருந்தது.


வீட்டில் உள்ளோரிடம்  மெல்ல  மெல்லப் பேசிப் பழகுங்கள் அடுத்தது உங்கள் நலனில் ஆர்வம் கொண்டோரோடு பேசுங்கள். முதலில் ஓரிரு வார்த்தைகள். பின்னர் ஒன்றிரண்டு வாக்கியங்கள். நாளடைவில் நீங்கள் ஆச்சரியப்படும் மாற்றங்கள் கண் முன்னே தெரிந்துவிடும்.

சின்ன சின்ன கட்டுரைகள் எழுதுவது, படித்த கட்டுரைகளுக்கு கேள்விகளை தயார் செய்வது போன்றவை உங்கள் ஆங்கில அறிவுக்கு சிறப்பு சேர்க்கும்.

கம்ப்யூட்டர் பயண்படுத்துவோர் பொதுவாக ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். ஆனாலும் மற்றவர்களோடு பேச கூச்சப்படலாம். அதிலிருந்து அவர்களும் வெளி வர வேண்டும்.

திரும்பத் திரும்ப சொல்லும் போதுதான் ஒரு வார்த்தை மந்திரமாகிறது. அடிக்கடி ஒன்றை பயண் படுத்தும் போது தான் அதில் நீங்கள்   வல்லவர் ஆக முடியும்.  ஆங்கில மொழியும் அப்படியே.

 நாம்  பின்தங்கி விடாதிருக்க தாய்மொழியாம் தமிழ் மொழியோடு ஆங்கிலத்தில் உரையாடுவதையும் வழக்கத்தில் கொள்வோம்.

நாம் பேச நம் குழந்தைகளும் நம்மைப் பின் பற்றி பேசத் தொடங்குவர்...

Sunday, 20 May 2012

'ஸ்கிரபள்' . . .

'ஸ்கிரபள்' என்பது கொடுக்கப்பட்ட ஏழு எழுத்துக்களில் ஒரு வார்த்தையை அமைக்கும் விளையாட்டாகும்.

இது ஆங்கில விளையாட்டு. அதில் இருக்கும் 26 எழுத்துக்களைக்கொண்டு விளையாடுவது.

Friday, 18 May 2012

வாஸ்து சாஸ்திரம் . . .

ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அழைத்தவர் எனது கருத்தினைக் கேட்டார்.

"  வாசப்படிய மாத்தி இந்தப்பக்கம் வைக்கணுமாம், ஐயா  சொல்றார்... பின் பக்கம் கதவு வேண்டாம், வேணும்னா பெரிய ஜன்னலா வச்சிக்குங்கன்னு சொல்றார். நீங்க கொஞ்சம் வந்து அவருகூட பேசினா எங்களுக்கு நல்லா இருக்கும்..."

'ஐயா' என அவர் குறிப்பிட்டது ஒரு வாஸ்து சாஸ்திர நிபுனரை.

"வேண்டா, நான் வரல. நான் வந்து பேசினா அப்புறம் அவருக்கும் எனக்கும் சண்டைதான் வரும். பலபேரை நான் பார்த்துட்டேன், நான் கேக்கிற ஒரு கேள்விக்கு பத்து பதில்கள தயாரா வச்சிருக்காங்க. நீங்களே பேசி முடிச்சுக்குங்க.." என ஒரேயடியாக சொல்லிவிட்டேன்.

அந்தக் காலத்தில் சூரிய வெளிச்சத்தையும் நல்ல காற்றையும் வீட்டின் உள்ளே கொண்டுவர தங்கள் வசதிக்கேற்ப ஜன்னல்கலையும் வாசல்களையும் மாற்றி வைத்துக் கொண்டனர் அன்றைய மக்கள்.

இப்போது மின் பயன்பாடு சர்வ சாதாரனமாகிவிட்ட பின்னும் இந்த வாஸ்துவின் 'காலம்கடந்த' குறிப்புகளை நாம் இன்னும் பற்றிக் கொண்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது.


பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையத் துடிக்கும் பலரும்  இதன் மூலமாக  தங்களுக்கு ஏதும் நல்ல காலம் வராதா என தப்பாக நினைத்துக்கொண்டு 'முயன்றுதான் பார்ப்போமே' என்கின்றனர்.

பொருள் ஈட்டுவதற்கு நல்ல கல்வித்தகுதியும், கடின உழைப்பும், தகுந்த நேரத்தில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை சாதகமாக மாற்றிக்கொள்ளும் திரனும் தேவையே அன்றி, வேறு  எவ்வித சம்பந்தமும்  இந்த வாஸ்து சாஸ்திரத்தில்  இருப்பதாக தெரியவில்லை.

வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் உங்களை வந்தடைய இறைவனை வேண்டுங்கள். அவன்பால் நம்பிக்கை வைத்து கல்வி, உழைப்பு, மகிழ்ச்சி எனும் வெற்றிப்படிகளில் ஏறுங்கள். முன்னேற துடிக்கும் இளையோருக்கு முற்போக்கு சிந்தனைகளே கைகொடுக்கும்.


அன்றைய  மக்கள் வீட்டை கட்டுவதற்கு வீட்டின் தலைவரைக் கொண்டே, அவரின் காலடியினை அளந்து, அதை 'மோல்ட்' எடுத்து, வீட்டின் ஜன்னல்களோ, சமையல் குளியல் அறைகளோ எங்கெங்கே இருக்கவேண்டும் என முடிவு செய்தனர்.  இது என்றோ கைவிடப்பட்ட ஒன்று. யாரும் இப்போது இப்படி அளப்பதில்லை. அளவெடுக்கும் 'டேப்' பயன்பாட்டுக்கு வந்துவிட்ட பின் இந்த பழங்கால யுக்தி மறைந்து விட்டது.


சமையல் பகுதியை சரியான இடத்தில் அமைக்கவேண்டும் இல்லையேல் அன்னம் தட்டுப்பாடாகிவிடும் என பயமுறுத்துகின்றனர்.


அன்றிருந்தோர் மரக்கட்டைகளை கொண்டு சமையல் செய்தனர்.  சமையல் பாதிக்கா வண்ணம் காற்றுவரும் திசை அறிந்து அடுப்பை வைத்தனர். இன்றோ, எல்லோர் விட்டிலும் "கேஸ்" அடுப்பு உள்ளது. அதிக வெப்பத்தால் நம் உணவு சேதமடைவதுமில்லை, காற்றில்லையே என பூ பூ என ஊதிக்கொண்டிருப்பதுமில்லை. இன்னும் திசை மாற்றம் தேவையா???

அறிவியலுக்கு உடன்படாத, அறிவுக்கும் நடைமுறைக்கும் சாத்தியப் படாத இன்னும்   பல விஷயங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் கலந்திருப்பதால் அதை நான் நம்புவதில்லை.

நாம் வசிக்கும் வீடுகளுக்கு வாஸ்து சாஸ்திரத்தை கொண்டு வந்தால், பின்பு 'தாமான்'களில் இருக்கும் வீடுகள் அனைத்தும் ஒரு கட்டுக்கோப்பின்றி கோணல்களாக மாறிவிடும்.

அதுமட்டுமல்ல, விகிதாச்சாரப்படி இந்த வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றி வீடுகளை மாற்றியமைத்தோரில், வெற்றி பெற்றவர்கள் எண்ணிக்கை அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றே எனக்குப் படுகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன் என் பக்கத்து வீட்டார் இப்படித்தான் பார்த்து பார்த்து வீட்டின் ஒவ்வொன்றையும் மாற்றியமைத்தனர். ஆனால் அடுத்த வருடமே வேலை மாற்றலாகி வீட்டை காலி செய்து வேறிடத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று.

"தப்புத்தண்டா ஏதும் நடந்திடுச்சா, சாமி???"
என சாமி பார்த்தாலும் கூட உண்மை நிலவரம் என்னவென்று இனி கனிக்கமுடியா சூழ் நிலைகள் தோன்றிவிட்ட பின், எங்களூரில் அதில் பலருக்கும் நம்பிக்கை போய் விட்டது.

இது ஒரு உதாரணம் மட்டுமே.

Thursday, 17 May 2012

மகிழ்ச்சியாக வாழ 3

எண்ணங்களை எளிமையாக்கி, மனதையும் அறிவையும் ஒரே அலை வரிசையில் செயல்பட வைப்பதன் அவசியத்தை நாம் முன்பு பார்த்தோம்.

மகிழ்ச்சியாக வாழ அடுத்து முக்கியமான ஒன்றாகப் படுவது, பணம்.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என பெரியோர் சொல்லியதாலேயே இதன் மகத்துவம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும் இந்நேரம்.

பணம் மிக மிக அவசியம் இவ்வுலகில். உண்மையில் இதுதான் மிக அவசிமானதாக பட்டியலில் முதல் இடத்தில் இருந்திருக்க வேண்டும்.
ஆனால், அனுபவங்களைக் கருத்தில் கொண்டு பொருள் ஈட்டுவதன் முக்கியத்தன்மையை நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.

பணம் இல்லையேல் எதுவும் இல்லைதான்... ஆனால், பணமே எல்லாமும் இல்லை.

இப்படி முன்னுக்குப் பின் முரண் போல் படுவதை இன்னும் சற்று அலசி ஆராய்ந்து அதன் தத்துவத்தை நாம் உணரவேண்டும்.

நேர்மையாக பணத்தை சம்பாதிக்க பல வழிகள் உண்டு.

வெட்கமும் கூச்சமும் படாதோர் பணமீட்டுவது பற்றி கவலைப்படுவதில்லை. எத்தொழிலானாலும் அதில் நேர்மையோடு நாம் இறங்கும் போது தோல்வி என்பது நிச்சயம் வராது.

 எண்ணித்துணிக கர்மம், துணிந்தபின் எண்ணுவோம் என்பது இழுக்கு என்பதுபோல்,கவனமான திட்டமிடல் தேவை.


இங்கே, "பகல் வெல்லும் கூகையை காக்கை, இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும்பொழுது" என்னும் குறளை நாம் நினைவு கொள்ளுதல் நன்மை பயக்கும்.

பொருத்தமான நேரம், , சரியான அனுகுமுறை இவைகளினால் தொழில் எதுவானாலும் அவற்றில் வெற்றிபெற நமக்கு வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன.

அகல கால்வைக்காமல் நாம் செய்யும் ஒவ்வொரு முயற்ச்சியும் நன்மைகளையே ஈட்டுத்தரும்.

பொருள் சம்பாதிக்க நாம் எடுத்துக்கொள்ளும் இவை ஒருபுறம் இருக்க, கவனிக்க வேண்டிய மற்ற விஷயங்களும் பல இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

குடும்ப மேம்பாடு எப்போதும் நம் கவனத்தில் இருக்க வேண்டும்.  இதற்கு பணம் மட்டும் போதுமானதல்ல, நமது சேவையும் குடும்பத்திற்கு தேவை.

சிலர், வேலை வேலை என வருடம் முழுவதும் வேலையிலேயே ஆயுட்காலத்தை முடித்து விடுகிறார்கள். வாழ்க்கையின் முக்கால் வாசி நேரம் பணம் தேடுவதிலேயே கழித்து விடுகிறார்கள்.

எதில் எப்படி முக்கியத்துவம் கொடுப்பது என்று உணராதவர்கள் இவர்கள்.

வெளியூர்களில் வேலை பார்ப்போர், பணம் அனுப்பிவைத்துவிட்டால் போதும், குடும்பம் தானாக செழித்தோங்க ஆரம்பித்துவிடும் என்று தவறாக நினைக்கிறார்கள். அப்படியல்ல, நீங்கள் உடன் இருந்து உங்கள் குடும்பதினரோடு பாசத்தோடும் பரிவோடும் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது போல் நீங்கள் எட்டி நின்று, குடும்பத்தினருக்கு இடும் உத்தரவுகள் உங்கள் குடும்பத்திற்கு போதாது.

தற்காலிக முயற்ச்சியாக இது இருக்கலாம்.  நிரந்தர தீர்வு, நீங்கள் இருக்கும் இடம் உங்கள் குடும்பத்தினரும், உங்கள் குடும்பத்தினர் இருக்கும் இடம் நீங்களும் இருப்பதுதான்.


மற்ற எதிலும் இல்லாவிட்டாலும், பனம் சம்பாதிப்பதில் மட்டும் எல்லோருக்கும் ஒருவித தடுமாற்றம் இருந்து கொண்டே இருக்கும்.


பொருளீட்டும் பணி முக்கியமான ஒன்று தான். அதிலும், உங்கள் ஒருவரை மட்டுமே நம்பி பலரும் உங்கள் குடும்பத்தில் இருந்தால் இந்த தடுமாற்றம் ஞாயமானதாகவே படும். அயராது உழைக்கும் குணமுடையோர் பெருமைப்பட வேண்டியோரே. இதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.


ஆனால், வாழவேண்டிய வாழ்வினை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, அதன் சாதக பாதக பலன் களை கவனிக்கும் போது பணம் சம்பாதிப்பதென்பது வாழ்க்கைக்கு தேவையான ஒன்றாகத்தான் படுகிறதே தவிர, பணமே எல்லாமும் இல்லை. 


மகிழ்ச்சியான வாழ்விற்கு பணமும் தேவை....பணம் மட்டுமல்ல.

பலவீனங்கள் பலமாகட்டும்...

நம்முடைய பலவீனங்களை மட்டும் நாம் பலமாக்கிக் கொண்டோமானால், வாழ்வில் நாம் அடைய நினைக்கும் அனைத்தையும் அடைந்து விடலாம்.

இயலாமையை எண்ணி வருந்துவது நன்மை பயக்காது. அவற்றை சரிகட்டி நாம் எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையே நம் வாழ்வில் முக்கியமானது.

உதாரணமாக புதிதாக வெளி வரும் ஒரு பட்டதாரி, ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரிந்திருந்தால் கிடைக்கூடிய வேலை வாய்ப்புக்கள் மிக அதிகம். இதற்கு அவர் பல்கலைக் கழக படிப்பினை மட்டும் நம்பிக்கொண்டிருக்காது சுய முயற்சியில் ஆங்கிலத்தின் நுணுக்கங்களைக் கற்றுத் தேரவேண்டும்.

நம் மலேசிய நாட்டில் வேலை தேடி பலரோடு போட்டியிடும் போது நமக்கென சில தனித்துவங்கள் இருப்பது நம்மை வெற்றி வாய்ப்பிற்கு இட்டுச் செல்லும் என்பது சொல்லித் தெரிய வேண்டுமா என்ன...?

அதனால் தான் சில கருத்துக்களை மீண்டும் மீண்டும் இங்கு சொல்கிறேன். நமது சமூகத்திய மாணவர்கள் தமிழ், மலாய் மொழியோடு, ஆங்கிலத்தில் புலமைப் பெற்றிருப்பதும் மிக அவசியம்..

இப்படி நமது பலவீனங்களை அடையாளம் தெரிந்து களைந்து விட்டால், தொடரும் நம் சாதனைகள் பலராலும் பேசப்படும்.

Tuesday, 15 May 2012

பொன்னித்திரு நாள். . .

9.9.1960ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் "பொன்னித்திரு நாள்". ராஜசுலோச்சனா கதா நாயகியாக நடிக்க  G. முத்துக்கிருஷ்ணன் என்பவர் ஜோடியாக  நடித்திருந்தார்.

கே. வி. மகாதேவன் இசையில் பி. பீ. ஸ்ரீநிவாஸ், பி. சுசீலாவுடன் பாடிய புகழ்பெற்ற பாடல்  இது.


வீசு தென்றலே வீசு
வேட்கை தீரவே வீசு
மாசு இல்லாத என் ஆசை காதலன்
வந்து செந்தமிழில் சிந்து பாடவே


பாடு கோகிலம் பாடு
பாசமாக நீ பாடு
தேடும் காதலன் ஓடி வந்தனன்
சிந்து பாடிடு நீ சேர்ந்து பாடுவாய்


ஆண் முகம் காணும் பெண்
மனம் நாணம் அடைவதும் ஏனோ
அதிசயம் தானோ

ஆண் முகம் காணும் பெண் மனம்
நாணம் அடைவதும் ஏனோ
அதிசயம் தானோ


ஆண்மையை வெல்லும் நாணமே
எங்கள் அணிகலம் அதுவே
துணை பலம் அன்றோ

ஆண்மையை வெல்லும் நாணமே எங்கள்
அணிகலம் அதுவே
துணை பலம் அன்றோ


பாடு கோகிலம் பாடு
பாசமாக நீ பாடு
தேடும் காதலன் ஓடி வந்தனன்
சிந்து பாடிடு  நீ சேர்ந்து பாடுவாய்


நிலவினை எங்கே காணோம்
இந்த நேரத்திலே தனியாக ஆனோம்

நிலவினை எங்கே காணோம்
இந்த நேரத்திலே தனியாக ஆனோம்

தலை மறைவாகவே
கலை மதி முகமே
சாகசம் செய்வதில் தான் என்ன சுகமே


தொட்டால் குளிரும்
விட்டு விலகினால் சுடுமே காதல் நெருப்பு

தொட்டால் குளிரும்
விட்டு விலகினால் சுடுமே காதல் நெருப்பு

விட்டு விலகுதல் இனி ஏது
விட்டு விலகுதல் இனி ஏது
எந்த வெப்பமும் நம்மை அணுகாது


வீசு தென்றலே வீசு
வேட்கை தீரவே வீசு

மாசு இல்லாத என் ஆசை காதலன்
வந்து செந்தமிழில் சிந்து பாடவே

வீசு தென்றலே வீசு


இது போன்ற இனிய இசையாலும் தமிழ் வார்த்தைகளின் வண்ணக் கோர்வைகளாலும் பல பழைய பாடல்கள் இன்னும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.

"ஏன் சிரித்தாய் என்னை பார்த்து. . ."    
பி. பீ. ஸ்ரீநிவாஸ் அவர்களின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து

விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே
விளையாடும் வெண்மதி நீதானா
விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே
விளையாடும் வெண்மதி நீதானா
எந்தை முன்னோர்கள் இயல் இசை நாடகம்
எந்தை முன்னோர்கள் இயல் இசை நாடகம்
பயின்றதெல்லாம் உன்னிடம்தானா

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து

சோலை நடுவிலே தூய தமிழ் பாடும்
நீல குயிலும் நீதானா
சோலை நடுவிலே தூய தமிழ் பாடும்
நீல குயிலும் நீதானா
கானில் வாழ்ந்திடும் மானின் இனத்திலே
கானில் வாழ்ந்திடும் மானின் இனத்திலே
கவரி மான் என்பதும் உன் இனம்தான

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து



Sunday, 13 May 2012

அன்னையர் தின வாழ்த்துக்கள்...

சுபத்திரா தேவிகள் இருவர் தங்களது பெற்றோருடன்...



Mr Joe's family photos pt 2