ஆங்கிலத்தில் ட்ராகுலா என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படி கேள்விப்படாதோர், "ட்ராகுலா", "வெம்பையர்", "ஸோம்பிஸ்" போன்றவற்றை தெரிந்து வைத்துக் கொள்ளுவது நல்லது. இவைகளே நமது கண்களுக்கு தெரியும் தீய சக்திகளின் மொத்த உருவங்கள்.
நமது இன்றைய கதையில் ட்ராகுலா தனது இருண்டு உதவியாட்களான இரத்தம் குடிக்கும் வௌவால்களை அழைக்கிறான்.
" டேய் பசங்களா.. நான் லீவுல போகப்போறேன். எனக்கு அடுத்து உங்களில் யாருக்கு என் இடத்திற்கு வருவதற்கு தகுதி இருக்குன்னு எனக்கு தெரியனும். ஆகவே ஒரு சின்ன பரீட்சை வைக்கப் போறேன்.. நீங்க ரெடியா?"
இரவினில் எழுந்து மானிட இரத்தம் குடிப்பதே இவற்றின் வேலை.
இரண்டு வௌவால்களும் தலைவன் தொழில் தனக்கு வந்தால் நல்லதுதானே என சரியென தலையை ஆட்டின.
"இன்னும் சரியாக ஒரு நிமிடத்தில் பொழுது விடிந்துவிடும்.அதற்குள் யார் சென்று நிறைய இரத்தம் குடித்து வருகிறாரோ அவரே எனக்கு அடுத்து தலைவனாகக்கூடியவர்." ட்ரகுலா சொன்னது.
உடனே முதல் வௌவால் வலது பக்கம் பறந்து சென்றது. சிரிது வினாடிகளிலேயே திரும்பியும் வந்தது. வாயில் இரத்தம்.
ஒரு சில நொடிகளுக்குள் தமது உதவியாளன் திறம்பட இரத்தம் குடித்து வந்தது கண்டு ட்ரகுலா தலைவனுக்கு மகிழ்ச்சி.
நேரம் சென்று கொண்டிருந்தது.
இரண்டாவது வௌவாலின் மனதில் ஒன்று தோன்றியது. "ஹ்ம்ம் முதல் வௌவால் வலது பக்கம் போய்தான் யாரையோ கடித்து இரத்தம் உறிஞ்ஜிக்கொண்டு வந்திருக்கவேண்டும்... நாமும் அங்கேயே சென்று பார்ப்போம்.." என மனதில் கூறிக்கொண்டது.
இன்னும் பத்து வினாடிகளே சூரியக்கதிர் பூமியில் விழ. அதற்குள் இரண்டாம் வௌவால் பறந்து சென்று வெற்றிகரமாக இரத்தம் குடித்து வரவேண்டும்.
வௌவால் வேகமாக பறந்தது...
வலது பக்கம் திரும்பி..... 1, 2, 3, 4 என வினாடிகள் கடந்துகொண்டிருந்தன.
இரண்டாம் வௌவால் திரும்பிவிட்டது. அதன் வாயெல்லாம் நிறைய இரத்தம். முதல் வௌவாலைவிட அதிக இரத்தம் வாயில் சொட்டிக்கொண்டிருந்தது.
ட்ரகுலாவிற்கு ஆச்சரியம்.
வெற்றியாளரான இரண்டாவது வௌவாலை அறிவுக்கும் முன், வந்திறங்கிய இரண்டாவது வௌவால் நேராக முதலாம் வௌவாலிடம் போனது.
தனது பலம் முழுவதையும் கொண்டு ஒரு அறை விட்டது.
"அட மடையா அந்த வலது பக்கத்தில் ஒரு மதிற்சுவர் இருந்ததை நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை?" என சண்டையிட ஆரம்பித்து விட்டது.

No comments:
Post a Comment