Friday, 20 April 2012

வனதிற்குள் ஒரு வண்ணத்துப் பூச்சி. . .

வலைத்தளத்தில் நான் கண்ட,  என்னை  மலைக்க வைத்தவை பல.

 படிக்கும் ஆர்வமுள்ள எனக்கு நல்லதொரு விருந்தாக தினமும் அமைவது தமிழில் இருக்கும் மிக அருமையான இலக்கிய எழிலைப் பேசும் வலைத்தளங்களாகும்.

 'புரோஜெக்ட் மதுரை' எனும் இனையப் பக்கத்தில் நமது சமையம் சார்ந்த அனைத்துவகை நூல்களும் இனாமாக படிக்கக் கிடைக்கும்  வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.

 நேர்த்தியான, மிகவும் பயனுள்ளதான ஒரு வலைத்தளம் இது.

 " திருக்குறள், கொன்றைவேந்தன், ஆத்திச்சூடி, திருவாசகம், திருமுறை எனத் தொடங்கி பகவத்கீதை மற்றும் பல வேதாந்த நூல்கள்" இடம் பெற்றிருக்கும் இடம் இந்த வலைத்தளம்.

 இதன்  "யூ ஆர் எல் : http://www.projectmadurai.org/pmworks.html

 தனி ஒருவரின் அறிவுப்பசிக்குத் தீனி இவ்விடத்தில் நிச்சயம் இண்டு. பல தேன்தமிழ் சிறப்பு வெளியீடுகளை இங்கே காணலாம்.

அழகிய, அடர்ந்த, உயரமான பழங்கால மரங்களைக் கொண்ட வனத்தினுள் நுழையும் ஒரு வண்ணத்துப் பூச்சியாகவே நான் என்னைக் காணுகிறேன்.  எவ்வளவு ரம்மியமான உலகம் இதுபக்திரசம் சொட்டும் பாமாலையா?  கல்கியின் பொன்னியின் செல்வனா,  சிவகாமியின் சபதமா?
ஐம்பெரும்  காப்பியங்களா அல்லது ஏனைய அற நூல்களா...? அனைத்தும் இங்கே ஆச்சரியப் படும்படி இருக்கின்றன. தமிழை ரசிப்போர், படிப்போர் தினமும் வர வேண்டிய இடம் இது.


எங்கு  பார்க்கினும்  படிக்க ஏதாவதொன்று  இருந்துகொண்டே இருக்கிறது.

1995ல் வலைத்தள  உலகுக்கு முதன் முதலில் அறிமுகமானேன்.  அடுத்த பத்து வருடங்களில் தமிழில் இணையத்தளங்கள் தோன்றத்தொடங்கின.

 கடந்த  ஏழு வருடங்களில் இமாலய சாதனைகளுடன் இன்னும் தொடர்ந்து வெற்றி நடை போட்டுச் சென்று கொண்டிருக்கிறது இணையத்தமிழ்.

அறிவுக்கும், அறிவியலுக்கும்  சம்பந்தமான நிறைய விசயங்கள் இங்கு இருக்கின்றன. நேரத்தை பகிர்ந்து படித்துப் பயன் பெறுவோர்களுள் நாமும் இருப்பது நல்லது.

1 comment:

  1. Thank you. I checked the website and it's true, what a wonderful website it is.

    ReplyDelete