கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன்
சுதியோடு லயம் போலவே-
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே...
(கல்யாண மாலை..)
வாலிபஙகள் ஒடும் வயதாகக் கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடி மீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே...
(கல்யாண மாலை..)
கூவுகின்ற குயிலை கூட்டுகுள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறை வைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கி வரும் போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்...
(கல்யாண மாலை..)
பெரியசாமி என ஒரு இனிய நண்பர் இருந்தார்.
சிலாங்கூர் ட்ரெட்ஜிங்கில் வேலை செய்யத் தொடங்கிய 1978ம் ஆண்டு முதல் எங்கள் நட்பு வளர்ந்து வந்தது.
எல்லோருடனும் சிரித்துப் பழகி அன்போடு இருக்கும் முதல் கிளாஸ் மனிதர்களுள் அவரும் ஒருவர்.
திடீரென்று ஒரு நாள், " ஒரு பாட்டு பாடறேன், கேளுங்க.." என்றவாறு மேல் உள்ள பாடலை பாடத் தொடங்கி விட்டார்.
அப்போதுதான் அப்பாடலை முதன் முதலில் நான் கேட்கிறேன். அதுவும் எனது நண்பரின் குரலில். வார்த்தைகளில் இருந்த பொருள் ஆச்சரியப்பட வைத்தது. மிகவும் ரசித்துப் பாடினார் அன்று.
இப்போது அவர் நம்மிடையே இல்லை. இறந்து மூன்று வருடங்கள் ஆகிறது.
அவர் குரலில் பதிவு செய்யப்பட்ட பாடல் இன்னும் என்னிடம் இருக்கிறது.
ஆனால், ஒவ்வொருமுறையும் இப்பாடலைக் கேட்கும்போது அவர் ஞாபகம் என் நெஞ்சைத் தாக்கத் தவறுவதில்லை...
No comments:
Post a Comment