Monday, 16 April 2012

ட்ராகுலா கதை . . . அதே போன்று ஆனால் அதுவல்ல

 நேற்றைய ட்ராகுலா கதை விளங்கவில்லை என என்னுடைய நண்பர்கள் சிலர் அழைத்துச் சொல்லியிருந்தனர்.

அவர்களுக்காகவும் அவர்களைப்போல் விளங்கிக்கொள்ள சிறமப்படுவோர்களுக்கும் இன்று அதே கதையை வேறு சில மாற்றங்களுடன் பதிவு செய்கிறேன்.

இந்த நகைச்சுவை கதைக்கு இரண்டு வடிவம் தந்து பதிவிடுவது எனக்கே சிரிப்பாகத்தான் இருக்கிறது.  இந்த முறையாவது புதிராய் இல்லாமல் இருந்தால் சரிதான்...

ஒரு குகையுனுள் இரு வௌவால்கள் தொங்கிக்கொண்டிருந்தன. விடியும் நேரம் அது.

 " எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது. எங்காவது சென்று உடனே இரத்தம் குடிக்கவேண்டும் போல் இருக்கிறது." என்றது முதலாவது வௌவால்.

 இரண்டாவது வௌவால் விடியும் நேரம் வந்துவிட்டதை சொல்லி " இன்னும் ஒரு நிமிடம் தான் இருக்கிறது. இதற்குள் உன்னால் எப்படி எங்கு சென்று இரத்தம் குடிக்கமுடியும்?" என்று முடிப்பதற்குள் முதலாம் வௌவால் பறந்து சென்று சில வினாடிகளில் திரும்பி வந்தது.

 அதன் வாயில் இரத்தம். தன் நாக்கால் அதை துடைத்து சுத்தம் செய்ய ஆரம்பித்தது.

இரண்டாம் வௌவாலுக்கு ஆர்வத்தை அடக்க முடியவில்லை. சில வினாடிகளிலேயே இதனால் எப்படி தன் தாகத்தை தணிக்க முடிந்தது என்று எண்ணி,


"ஏய், நாமிருவரும் நண்பர்கள் அல்லவா? எனக்கும் சொல்லேன் அந்த இடத்தை" என்று வினவியது.

 ஒழுகும் இரத்தத்தைத் துடைத்தவாறு " வந்து ...வந்து.. நான் அந்த திசையில் போய் திரும்பியதும்...." என்று சொல்ல ஆரம்பிப்பதற்குள் இரண்டாம் வௌவால் பறந்து சென்றது.

ஒரு சில வினாடிகளுக்குப்பின் அது திரும்பியும் வந்தது. அதன் வாயிலும் இரத்தம்.

" அட மடையா, அந்த திசையில் போய் திரும்பியதும் அங்கு ஒரு கற்சுவர் இருப்பதை நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை ...? " என முதலாம் வௌவாலுடன் சண்டையிட்டது.

நம்மில் பலர் இப்படித்தான் அறை குறையாக எதையவது கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

1 comment:

  1. Your created two versions for the same story? hehehe sirippu varthu!

    ReplyDelete