Monday, 9 April 2012

எனக்குப் பிடித்த பாடல்கள் 1

நான் புதிய பாடல்களையும் ரசிப்பவன்.

இருப்பினும், வார்த்தைகளில் இருக்கும் மென்மையயும் நளினத்தையும் அனுபவிப்பது பழைய பாடல்களில்தான்.

இங்கே எனக்குப் பிடித்த பாடல்களில் சிலவற்றை தந்திருக்கிறேன். என்னுடைய டொப் டென் வரிசையில் இதுவும் ஒன்று.

காரில் என்னோடு பயணிப்பவர்கள் பொதுவாக என்னுடைய பாடல்கள் தேர்வை புகழ மறந்ததில்லை.
" நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே..."
என்னும் பாடல் இடம்பெற்றபோது பின் இருக்கையில் இருந்த ஒரு தாய் என்னைத் தட்டிக்கொடுத்து " நல்ல நல்ல பாட்டா வச்சிருக்கப்பா..." "மனசு குளிருது இந்தப்பாட்டையெல்லாம் கேட்டுக்கொண்டு உன்னோடு பயணம் போவது" என்றார்.

 என்னுடைய ரசிப்புத்தன்மைக்கு ஒரு பாராட்டாயிருந்தாலும், அதில் அப்படி வேறென்ன  இருக்கிறது என்று அவர் செல்லுமிடம் வந்து அவர் இறங்கிச்சென்றவுடன் மீண்டும் அப்பாடலைக்கேட்டேன்...


சூலமங்களம் ராஜலெட்சுமி குரலில் என்ன ஒரு அருமையான தாலட்டுப்பாடல்.

"நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே
நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் ம
ங்காத பொன்னே"
1960ம் ஆன்டு வெளிவந்த பாவை விளக்கு படத்திலிருந்து இப்பாடல். சுமார் 52 வயதாகிறது இப்பாடலுக்கு.
"தேன் மணக்கும் வாய் இதழோ சிவப்பு மத்தாப்பு
சின்னஞ்சிறு கண் மலரோ நீல மத்தாப்பு
தேன் மணக்கும் வாய் இதழோ சிவப்பு மத்தாப்பு
சின்னஞ்சிறு கண் மலரோ நீல மத்தாப்பு
மேனியிலே தெரியுதம்மா தங்கத்தின் ஜொலிப்பு
மேனியிலே தெரியுதம்மா தங்கத்தின் ஜொலிப்பு
அதைக் காணும் போது மனசுக்குள்ளே எத்தனைக் களிப்பு
நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே

எட்டி எட்டி வட்ட நிலா உன்னை பார்க்குது
உன் எச்சில் பட்ட சோத்தை அது தனக்கு கேக்குது
எட்டி எட்டி வட்ட நிலா உன்னை பார்க்குது
உன் எச்சில் பட்ட சோத்தை அது தனக்கு கேக்குது
சட்டமாக சீக்கிரம் நீ சாப்பிடு அம்மா
சட்டமாக சீக்கிரம் நீ சாப்பிடு அம்மா
அந்த சந்திரனை விளையாடக் கூப்பிடு அம்மா
நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே"

குழந்தைகளின் மென்மையை உணர்ந்த தாய் நிலவை கதையாக சொல்லி சோறு ஊட்டி தன் பாசத்தினை வெளிப்படுத்தி எதிர்கால வாழ்வுக்கு நிலவை சாட்சியாக காட்டியது மனதை தொடுகிறது.
கதை சொன்ன தாய் இப்போது இல்லாவிட்டாலும் நிலவைப் பார்த்ததும் பழைய நினைவுகளில் மெய்மறப்போரில் நானும் ஒருவன்.
(படத்தில் காட்சியமைப்பு வேறு விதமாக இருந்திருக்கலாம். அது நமக்கு தேவை இல்லாத ஒன்று.)

மற்றொரு நாள் ஒரு நண்பர் எனது காரில் ஏறினார். பேசிக்கொண்டு போகும்போது ஒரு பாடல் ஒலித்தது. அவர் பேசுவதைக் குறைத்துக்கொண்டு அடுத்தடுத்த வரிகளை பாடத் தொடங்கிவிட்டார். ஆச்சரியம் என்னவென்றால், பி. பி. சீனீவாஸ் சாயலில் அவர் பாடியது நன்றாகவே இருந்தது.... நிறைய பயிற்சி செய்திருப்பார் என நினைக்கிறேன்.

பாடல்களின் வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாக எழுதியிருந்தனர் கவிஞர்கள் அன்று.

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நானில்லை

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
 என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
 பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
 என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

ஊமையின் கனவை யார் அறிவார்
 என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
 மூடிய மேகம் கலையுமுன்ன
 நீ பாட வந்தாயோ வென்னிலவே

அமைதி இல்லாத நேரத்திலே
 அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
 நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
 இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்


சில பாடல்களை கவிதைகளாக படிக்க சுவை கூடும்.

"நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி
ஒன்று தெயவத்தின் சாட்சியம்மா
 நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்
தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
 தெய்வத்தின் சாட்சியம்மா"

 இந்தப்பாடலின் வரிகள் இன்றைய இளையோரையும் கவரும் வண்ணம் இருப்பது உண்மை.

அடுத்தவரிகளில்...

"நதி வெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றம் இல்லை
விதி செயத குற்றம் அன்றி வேற யாரம்மா

பறவைகளே பதில் சொல்லுங்கள
 மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
 மலருக்கு மனைதக் கொஞ்சம் தூது செல்லுங்கள்

  ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
 அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
 மனிதன் அம்மா மயங்குகிறேன்

 தவற்றுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே
 தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே"

 நேர்மையான ஒருவனின் சோகப் புலம்பலாக வந்தது இப்பாடல். இசை சராசரிதான். ஆயினும், பலருக்கும் இப்பாடல் பிடிக்கக் காரணம்?

தத்துவார்த்தமான வார்த்தைகள்... எல்லோரும் விளங்கிக்கொள்ளும்  வகையில் அவை கோர்க்கப்பட்ட விதம்.


ஒரு சில வரிகளை அவை எங்கே எப்படி வருகின்றன  என பார்க்காமல் ரசிக்கப் பழக வேண்டும்.

"யேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார் ???


ஒருவழியை மறுவழியால் மறைப்பது விதியாகும்
அதை உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம்
சிலுவையிலே மனது வைத்தால் சிந்தனை தெளிவாகும்
சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும் "

No comments:

Post a Comment