குடும்பப் பெண்கள் பொதுவாக உடை அலங்காரம் செய்து தங்களை அழகு படுத்திக் கொள்ள ரொம்பவும் விரும்புவார்கள். தாங்கள் அழகாகத் தோன்றும் அதே நேரம், மற்றவர்கள் தங்களைப் பார்த்து, தாங்கள் அலங்காரத்தையும், அழகையும் ஏற்றுக்கொள்ளும் போது மனமகிழ்வது பெண்களின் குணம்.
இதில் எந்தத் தவறும் இல்லை.
ஆயினும் இந்த மனமகிழ்ச்சியில் எவ்வித மாசும் பாடாதிருக்க அலங்காரம் அளவோடு இருக்க வேண்டும், அன்புக் கணவனும் அருகில் இருக்க வேண்டும். கட்டியவன் உடன் இல்லாத போது இது போன்ற மனமகிழ்ச்சி தரும் செயல்கள் பெண்களை எவ்வித உயர் நிலைக்கும் கொண்டு செல்லாது. பல தருணங்களில் நம் கண்முன்னே நாம் கண்டு வரும் நிதர்சன உண்மை இது.
நல்ல தம்பதிகள் உருவாகிறார்கள். அன்புடனும் பாசத்துடனும், அனுக்கமாகப் பழகி, தங்களின் உற்சாகத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்களே ஒரு நல்ல குடும்பத்தை நிறுவ தகுதியானவர்களாகிறார்கள். இக்குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளே வீட்டுக்கும் நாட்டுக்கும் நற்பெயரை வாங்கித் தருகிறார்கள்.
இதற்கு அச்சாரமாக அமைவது அன்புக்கு அன்னையும், அறிவுக்குத் தந்தையுமாகும். குழந்தைகள் வளரும் போது அருகில் இருந்து கட்டுக்கோப்பாக அழைத்துச் செல்லும் தந்தையும், அன்னத்தோடு அன்பினையும், நல்ல பண்பினையும் ஊட்டி வளர்க்கும் அன்னையும் எதிர்கால சந்ததியினருக்கு முன்னுதாரணம் ஆகும்.
இதற்கு ஈடு அதிக பொருள் குவிக்க உதவும் அயல் நாட்டு வேலைகளல்ல.
"ஆள்வது எப்படி என அரசனுக்கு தெரியாமல் போனாலும், வாழ்வது எப்படி என்று நமக்குத் தெரிய வேண்டாமா ?" என ஒரு முதுமொழி உண்டு.

No comments:
Post a Comment