நம்மில் பலருக்கு நம் குடும்பம்தான் பெரிய சொத்து.
நவீன உலகத்தில் வாழும், ஆனால் குடும்பத்தை மனைவியும் பணம் சம்பாதிப்பதை கணவனும் என இன்னமும் எற்றுக்கொண்டு வாழும் குடும்பச் சூழ்நிலையில் இந்தக் கருத்து சரியானதா என எண்ணத் தோன்றுகிறது. வெளி ஊர்களில் வேலை செய்யும் ஆண்களில் பலர் தங்களின் கடின உழைப்புக்கு அதையே காரணம் சொல்லிக் கொள்கின்றனர். குடும்ப நலனுக்காக தாங்கள் பாடாய் படுவதாக சொல்லும் ஆண்களில் பலரை நாம் பல இடங்களில் பல நேரங்களில் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம்.
வெளி நாடுகளுக்குச் சென்று பணம் சேர்க்கும் கணவன்மார்கள் இரவு பகல் பாராமல் உழைத்துச் சேமித்து அந்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்புகிறார்கள். குடும்பத் தலைவனின் உண்மையான தியாகத்தை வீட்டில் இருக்கும் மனைவியும் மக்களும் உணர்ந்து அதன்படி நடக்கிறார்களா? பத்திரிக்கை தகவல்களின் அடிப்படையில் அதற்கு பதில் "இல்லை" என்றே தெரிகிறது.
சில மனைவிகள் தங்கள் கணவர்கள் தங்களுக்கு உழைத்துப்போடவே பிறந்தவர்கள் எனும் எண்ணத்தில் நடந்து கொள்வதை அறியும் போது ஆச்சரியம் மேலிடுகிறது. ஆடம்பர செலவுகளிலும், கேளிக்கை நிகழ்வுகளிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர், கணவர் அருகில் இல்லை என்னும் துணிச்சலில்.
அயல் நாடுகளில் இருந்து இங்கே வேலைக்கு வந்திருக்கும் நண்பர்கள் சிலர் இப்படி பல சோகக்கதைகளின் நாயகர்களாக இருக்கிறார்கள். உண்மையில் இது யார் குற்றம் என்பது அவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது. ஆயினும் ஏனோ கண்டும் காணாதது போல இருக்கவேண்டியதிருக்கிறது என்கின்றனர்.
பணம் அவசியம் தான், அதைவிட அவசியம் அதை சம்பாதிக்கும் விதங்களில் குடும்ப கௌரவத்தை இழந்துவிடாமல் பார்த்துக் கொள்வதுமாகும்.
"சில ஆண்கள் குடும்பத்துக்காக உழைத்தே சாகிறார்கள். " என என் நண்பர் அடிக்கடி சொல்வார். இதில் தான் எத்தனை எத்தனை அழுத்தமான உண்மைகள் பொதிந்திருக்கின்றன.
குடும்பத்தை மேல் நிலைக்கு கொண்டுசெல்லும் கடப்பாடு அவர்களுக்குடையது. இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் குடும்பத்தில் உள்ள மனைவியும் குழந்தைகளும் அந்த தியாகத்தை உணர்ந்து போற்றாவிடில் எங்கோ தவறு இருக்கிறது என்றே பொருளாகிறது.
கணவர்கள் இதை உணரவேண்டும். இதை உணரத்தவறும் போது, அவர்கள் கடும் உழைப்பில் சேமிக்கப்படும் பணம் குடும்பத்தினரின் வீண் செலவுகளில் அழிகிறது. இதற்கு கணவர் வெளினாடு சென்று வேலை பார்க்கத் தேவை இல்லையே.
கணவர் அருகில் இல்லை என்பதை சுதந்திர உணர்வோடு "மெர்டேகா" என கொண்டாடி மகிழும் மனைவிகளும் இருக்கிறார்கள். வெகுளியான தங்கள் கணவர்களை பயன்படுத்தி 'ஜாலியான' வாழ்வில் திளைக்கிறார்கள் இவர்கள். சில மனைவிகளுக்கு நெருங்கிய ஆண் நண்பர்களும் ஆசை நண்பர்களும் கூட உண்டு.கலாச்சார சீர்கேடுகளும் குடும்ப கௌரவமும் பாழ்படுவது இவ்வாறே.
மற்ற சமூஙங்களை விட நாம் இதில் குறவாக இருப்பது போல தோன்றினாலும் மக்கள் தொகையின் அடிப்படையில் நாம் அவர்களுக்கு சரி நிகர் சமமாகவே இருக்கின்றோம்.
இதுபோன்ற சூழ்நிலைகளே 'கூட்டுக்குடும்பங்களின் நன்மைகள்' எவ்வளவு என்பதனை நமக்கு உணர்த்துகின்றன.

No comments:
Post a Comment