Wednesday, 17 April 2013

மெல்லிசை மன்னர்களில் ஒருவரான டி கே ராமமூர்த்தி மறைவு...

பிபி சிரினிவாஸ் மறைந்த சோகத்தில் இருந்து மீழ்வதற்குள் மற்றொரு சகாப்தாம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

விஸ்வ நாதன் ராமமூர்த்தி எனும் இசைமேதைகளில் ஒருவரான டி கே ராமமூர்த்தி காலமானார். இருவருமாக இணைந்து 86 படங்களுக்கு இசைத்திருப்பதும் அதில் பல வெற்றிப்படங்களாக இருப்பதும் சினிமா ரசிகர்களுக்கு தெரியும்.  சி ஆர் சுப்பராமனின் உதவியாளர்களாக சேர்ந்த இருவரும் அவரின் அகால மரணத்திற்குப் பின் அவரின் வெற்றிடத்தை நிரப்ப முன்னனிக்கு வந்தனர்.

ஜி.ராம நாதன், கே வி மகாதேவன், சுப்பையா நாயுடு, டி ஜி லிங்கப்பா மற்றும் டி ஆர் பாப்பா போன்றோர் இசையமைத்துக் கொண்டிருந்த அந்த காலத்தில் இவர்களின் வருகை சிறுகச் சிறுக வரவேற்பினைப் பெற ஆரம்பித்தது.  இவர்கள் இசையமைக்க வந்த காலத்தில் இவர்களோடு கவிஞர் கண்ணதாசனும் கைகோர்க்க இவர்களின் படங்கள் இசையில் புதுப் பொலிவுடன் பலரையும் கவரத் தொடங்கிற்று. 50களில் இருந்து 65 வரை இவர்கள் தமிழ்த் திரையிசை உலகின் உச்சியில் கொடிகட்டி உலா வந்தனர். பேரும் புகழும் இவர்களைத் தேடி வர ஈடு இணையற்ற இசை மாமேதைகளாக வலம் வந்தனர்.

மெல்லிசை மன்னர்கள் என அடைமொழியிட்டு அழைக்கப்பட்ட இவர்கள் இணைந்து 700க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர். 1952 இணைந்தனர், 1965ல் பிரிந்தனர். 1965ல் வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்' படமே இவர்கள் இணைந்து பணியாற்றிய கடைசி படமாகும்.  அதில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகின. சுமார் 29 வருடங்களுக்குப் பின்  "எங்கிருந்தோ வந்தான்" எனும் படத்தில் மீண்டும் இணைந்தனர். ஆயினும் இவர்களின் ஆரம்ப கால பாடல்களே பலராலும் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.

டி கே ராமமூர்த்தி அவர்கள் ஒரு சிறந்த வயலின் கலைஞராகவும் புகழப்பட்டவர். எம் ஜி ஆர் நடித்து வெளிவந்த பணம் படைத்தவன் படத்தில் “கண் போன போக்கிலே கால் போகலாமா' என்ற  பாடலில் வரும் வயலின் சோலோ இவர் வாசித்தது தான்.இதே போல புதிய பறவையில் ஒலித்த எங்கே நிம்மதியிலும் இவரின் வயலின் பங்களிப்பு பெருமளவு பேசப்பட்டது.

டி கே ராமமூர்த்தி அவர்கள்  தனித்து இசையமைத்திருந்த படங்களாக,
தேன்மழை, மறக்க முடியுமா, சாது மிரண்டால், மட்ராஸ் டு பொண்டிச்சேரி, எங்களுக்கும் காலம் வரும், சோப்பு சீப்பு கண்ணாடி, அவளுக்கு ஆயிரம் கண்கள், ஆலயம், பட்டத்து ராணி, நான்,  மூன்றெழுத்து, நீலகிரி எக்ஸ்பிரஸ், தங்க சுரங்கம், காதல் ஜோதி,  சங்கமம்,  சக்தி லீலை, பிரார்த்தனை,  அந்த ஜூன் 16, இவள் ஒரு பௌர்ணமி போன்றவை வெளிவந்தன.

பல இனிமையான பாடல்கள் இப்படங்களில் ஒலிப்பதைக் கேட்கலாம்:

காகித ஓடம் கடல் அலை மீது ,
விழியால் காதல் கடிதம்,
நெஞ்சே நீ போய் சேதியை சொல்லு,
அருள்வாயே நீ அருள்வாயே திருவாய் மலர்ந்து அருள்வாயே,
ஏ ஃபோர் ஏப்பள், பி ஃபோர் பிஸ்கட், 
கல்யாண சந்தையிலே
என்னடி செல்லகண்ணு
அம்மனோ சாமியோ
தன்னந்தனியாக நான் வந்தபோது
போதுமோ இந்த இடம்

என ஒரு நீண்ட பட்டியல் இவரின் சாதனையினைச் சொல்லுவதாக இருக்கும்.


No comments:

Post a Comment