Thursday, 11 April 2013

சிலரை பலகாலம் ...

சிலரை பலகாலம் ஏமாற்றலாம்...
பலரை சில காலம் ஏமாற்றலாம்...
எல்லோரையும் எல்லா காலமும்
ஏமாற்ற முடியாது...

பொய்த்துப் போகும் பல பிரச்சினைகளுக்கு நிதர்சனமான உண்மை இதுதான்.

தற்போதைய கணினி யுகத்தில்  'மூளைச் சலவை செய்து முட்டாளாக்கும் மூடக்கருத்துகளுக்கு இனி நாம் செவி சாய்க்கக்கூடாது' என  தீர்க்கமான முடிவெடுத்து அதனில் இருந்து மாறாமல் நம் நிலையை உறுதிப்படுத்துவதே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற நாம் எடுக்கும் மிகப் பெரிய திட்டமாகும்.

பக்தி என்பது அறிவியல் சார்ந்ததாக, விஞ்ஞான பூர்வமான உண்மைகளின் தொகுப்பாக, பல ஞானிகளால் விளக்கங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில் 'பகுத்தறிவு என்ற ஆறாவது அறிவு உள்ளதா' எனும் கேள்விக்கு நாம் பதிலளிக்கத் தெரியாமல் திணரக் கூடாது.

மற்றவர்கள் மூலம் பெறப்படுகின்ற எந்தக் கருத்தானாலும், அது நம் அறிவின் ஆற்றல் கொண்டு அளவிடப்பட்டு, மெய்யானதா என தர நிர்ணயம் செய்யப்பட்டு, எண்ணத்திற்கும், எழுத்திற்கும், செயலுக்கும் உள்ள  உள் நோக்கம்  அறிந்து, விழிப்புணர்வுடன்  நடந்து கொள்வதே 'நாம் உயர்ந்தோர்' எனும் சிந்தனைச் செல்வத்திற்கு வித்திடும் வேத மந்திரமாகும்.

இதில் உறுதியுடன்  இருக்கும்  யாரையும் எக்காலத்திலும் யாராலும் ஏமாற்றிட முடியவே முடியாது....

No comments:

Post a Comment