Friday, 1 February 2013

கிள்ளான் துறைமுகம். . .

 ( இப்போதைய கிள்ளான் துறைமுகத்தின் படம்.  அருகில் இருக்கும் தீவுகளுக்கும் இன்டோனீசியாவிற்கும் இடையிலான பயணங்களே இங்கு தற்போது  மேற்கொள்ளப்படுகின்றன ).

தமிழ் நாட்டிலிருந்து  மலேசியாவிற்கு வந்த நமது முன்னோர்கள் பினாங்கில் உள்ள துறைமுகத்தின் வழியும் கிள்ளான் துறைமுகத்தின் வழியும் தண்ணீர் கப்பல்கள் மூலம் வந்திறங்கினர்.

அந்த கப்பல்களுக்கு ரஜுலா, மெட்ராஸ் என அழகிய பெயர்களும் இருந்ததை நான் அறிவேன்.

அறுபதுகளின் முடிவில், உறவினர்கள் வந்து போகும் போது எனது தந்தை என்னையும் உடன் அழைத்து வருவார் இங்கு. சிறு துரும்புகளாக பட்ட அன்றைய எனது நினைவுகள் காலம் மாற மாற பெரும் பாறைகள் போல் மனதில் பதிவாகிவிட்டதை அறிகிறேன். அன்றைய நடப்புகளில் பல இன்று சரியான முறையில் வரலாற்றுக் குறிப்புகளில் இடம் பெறவில்லை எனும் வருத்தம் எனக்குள் உண்டு.

சுமார் 40 வருடங்களுக்கு முந்தைய கட்டடங்கள் இப்போது புதுக்கப்பட்டு புதியவைகளும் கட்டப்பட்டு வருகின்றன இங்கு.

கிள்ளான் துறைமுகம்  பல நாடுகளுடனான  வர்தக தொடர்பிலும் வெற்றிபெற்ற இடமாக 1990 முதல் திகழ்ந்து வருகிறது. வடக்கு துறைமுகம், மேற்கு துறைமுகம் என இரு பெரும் துறைமுகங்கள்  மலேசியாவின் ஏனைய துறைமுகங்களோடு நாட்டின் வளர்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றன.

No comments:

Post a Comment